யாருக்கேனும் இப்படிப்பட்ட அனுபவம் இருந்திருக்கா?

நான் தர்சமயம் 24 வது வாரம்.எனக்கு cervix பகுதி ஒப்பனா இருக்கு.இதனால் ஏதும் பிரச்சனை வருமா.வலி ஏதும் இல்லை.எனக்கு இது இரண்டாவது குழந்தை.முதல் குழந்தை சிசெரியன் அப்புரம் 8 மாதம் கூட முடியாமல் ப்ரிமெசுவர் பேபியாய் பிறந்து ரொம்ப அவதிப்பட்டு இப்ப கடவுளின் கிருபையால் நலமாக இருக்கிறான்.cervix பகுதி ஒப்பனா இருப்பதால் ஏதும் ஆபத்து உண்டா?
<!--break-->
யாருக்கேனும் இப்படிப்பட்ட அனுபவம் இருந்திருக்கா?

ஹாய் roroja உங்களுக்கு சர்விக்ஸ் பகுதி ஓபனா இருக்குனு எப்ப சொன்னாங்க?சர்விக்ஸ் என்பது கர்பப்பையின் வாய் பகுதி குழந்தயை தாங்கிப் பிடிப்பதே அதுதான் இது போல இருந்தால் பிரீமெச்சூர் பேபி பிறப்பதற்க்கு அதிக வாய்ப்புகள் இருக்கு அதனால் தான் 13ஆவது வாரத்தில் சர்விக்ஸை தைத்து விடுவார்கள் ஏற்கனவே 8 மாதத்தில் மகன் பிறந்திருப்பதாக சொன்னீர்கள் முன்னாலயே இதனை கவனித்து இருந்தால் நல்லது இப்போது உங்களுக்கு பெட் ரெஸ்ட் தான் தேவை வேலை எதுவும் செய்யக் கூடாது அடிக்கடி மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது கடவுள் அருளால் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை கிடைக்கும்

எனக்கு இது பற்றி தெரியாது நீங்க டாக்டரிடம் உடனே காமித்து ஆலோசனை பெறுவது நல்லது மற்ற தெரிந்த தோழிகள் வந்து பதில் சொல்லுங்க சீக்கிரமா

எனக்கும் இதே பிரச்சினை இருந்தது.தையல் போட்டார்கள்.பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.நீண்ட நேரம் குழந்தையின் எடை தையலை அழுத்தாமல் இருக்க வேண்டும்.எனக்கு நார்மல் டெலிவரி ஆனது.வேறு சந்தேகம் என்றால் கேட்கவும்.

மெய்ப்பொருள்.

செர்விக்ஸ் பகுதின்னா என்ன?

கர்பப்பையின் வாய் பகுதி

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

ஹாய் மெய்ப்பொருள் எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு இப்போது 25ஆவது வாரம் எனக்கும் செர்விகல் பிரச்சனை தான் எனக்கு 13ஆவது வாரத்தில் தைய்யல் போட்டார்கள் இப்போது நான் முழு பெட் ரெஸ்ட் தான் பாத் ரூம் அருகில் இருக்கிறது அதற்க்கு மட்டும் போய் வருகிறேன் அடிக்கடி ஸ்கேன் பார்த்துக் கொள்கிறோம் எல்லாம் நன்றாக இருப்பதாக டாக்டர் கூறினார்
இருந்தாலும் கொஞ்சம் பயமாக இருக்கிறது குழந்தை முட்டும்போது பிறப்புருப்பில் முட்டுவது போன்று உணர்வு இருக்கிறது அதுவும் நார்மல் என்றுதான் சொல்கிறார்கள்
எத்தனையாவது வாரத்தில் தைய்யலை எடுப்பார்கள்?நார்மல் டெலிவரி ஆக அதிக வாய்ப்பு இருக்கிறதா?எப்போது கொஞ்சம் நடக்கலாம்?
நாட்கள் போக போக எனக்கு பயமாக இருக்கிறது

எனக்கும் முதல் குழந்தை சுகபிரசவம். இரண்டாவது குழந்தை 21வது வாரம் இருக்கும் போது cervix பகுதி ஒப்பனானது.பின் ஒரு வாரத்தில் தையல் போட்டு பெட் ரெஸ்ட்டில் இருந்தேன்.கடேசி ஒரு மாதத்திற்க்கு முன்பு தையலை பிரித்தார்கள்.அதன்பின் சிறிது சிறிது நடந்தேன்.சுகபிரசவம்தான் நடந்தது.இப்ப என் பையனுக்கு வயது 4.அதனால் பயப்பட வேண்டாம்.

ரெம்ப நன்றி யாஸ்மின்
மெய்ப்பொருள் உங்க அனுபவத்தயும் சொன்னால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்

தயவு செய்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் மெய்ப்பொருள் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் வேறு சந்தேகம் இருந்தாலும் உங்களிடம் கேட்டுக் கொள்வேன்

நான் டாக்டரிடம் சொன்னேன்.அவர்கள் அது ஒன்றும் ஆகாது என்று சொல்கிறார்கள்.இங்கு நான் பார்ப்பது ஒரு யமினி டாக்டரிடம், நான் அடுத்த மாதம் இந்தியா போறேன்.நான் இருப்பது ஒரு கிராமம் மாதிரிதான் வேற டாக்டர் இல்லை.
எனக்கு மிகவும் பயமாக உள்ளது.

மேலும் சில பதிவுகள்