வெங்காய பொடிமாஸ்

தேதி: April 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

பெரிய வெங்காயம் - 6
மிளகாய்பொடி - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

முதலில் தேவயானவற்றை எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் மிளகாய்பொடி, சிறிது உப்பு போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
நன்கு வதங்கியதும் இறக்கி வைக்கவும். சப்பாத்தியை தீட்டி அதில் தடவவும்.
அந்த சப்பாத்தியை அப்படியே ரோல் செய்து பரிமாறவும்.
சுவையான வெங்காய பொடிமாஸ் ரெடி. சப்பாத்திக்கு சரியான ஜோடி இந்த வெங்காய பொடிமாஸ்.
எளிமையாக செய்யக்கூடிய சுவையான இந்த குறிப்பினை செல்வி. இளையராணி அவர்கள் செய்துக் காட்டியுள்ளார்.

விரைவில் செய்யக்கூடிய குறிப்பு இது. எங்கள் வீட்டில் வாரத்தில் 4 நாள் சப்பாத்தி தான், அவ்வளவு சுலபமான குறிப்பு இது. வெங்காயத்தை வாணலியில் போட்டதில் இருந்து அடுப்பை சிறுதீயில் வைத்து செய்யவும். காரம் அதிகம் விரும்புபவர்கள் அதற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம். வெங்காயதிற்கேற்ப மிளகாய் தூள் பார்த்து சேர்த்துக் கொள்ளவும் ஆனால் சிறிது காரமே போதுமானது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என்னுடைய குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி
அன்புடன்
இலையா .G

சிம்பிளாக ஒரு குறிப்பு. கட்டாயம் செய்து பார்க்கிறேன்.
அழகா சிரிக்கிறீங்க இலையா. ;)

‍- இமா க்றிஸ்

தங்கள் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி sister by elaya.G

இலையா... நல்ல குறிப்பு, நல்ல சிரிப்பு. இரண்டுமே சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் இலையா, இந்த குறிப்பு என் தங்கை சூப்பர செய்வாங்க. இசியா இருக்கிரதால அடிக்கடி செய்வாங்க.எனக்கு பிடிக்கும்.;) வாழ்த்துக்கள்....... இலையா இன்னும் நிறைய குறிப்பு கொடுங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

இளையராணி ரொம்ப ஈஸியான குறிப்பு இது எங்க வீட்டில் அடிக்கடி செய்வோம்பா. வாழ்த்துக்கள் சூப்பர் குறிப்புல ஆரம்பிச்சு இருக்கீங்க இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் இளையா.

அப்பறம் எனக்கு ஒரு டவுட்பா உங்க பேரு இளையராணி தானே. அப்பறம் இலையானு போடுறீங்க. தவறா சொல்லி இருந்தா சாரிப்பா.

ரொம்ப நன்றி வனி sister

தேவி sister ரொம்ப நன்றி
யாழினி sister நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு .எல்லோர்ரும் இலையா நு தான் கூப்பிடுவாங்க sister அப்பிடியே பழகிடுச்சு

அன்பு இளையா... உங்க குறிப்பு செய்ய சுலபமா இருந்ததால் இன்று நானே செய்தேன். சூப்பர் சுவை... 5 சப்பாத்தியை முழுங்கிட்டு வரேன். நான் கூட வெறும் வெங்காயம் எப்படி இருக்கும்னு யோசனையில் கொஞ்சமா செய்தேன்... சாப்பிட்ட பின் தான் இன்னுமே நிறைய செய்திருக்கலாம்னு தோனுது. அதனாலென்ன... இன்னொரு நாள் நிறைய செய்துடலாம். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இதே குறிப்பு செய்து படம் எடுத்து வைத்துள்ளேன்.. ஆனால் நீங்க அனுப்பிட்டிங்க.. ஆனா சிறு வித்தியாசம் இருக்கு.. என் அக்கா எதாவது டூர் போனா செய்வாங்க.. ரெண்டு மூனு நாள் கெடாமலும் இருக்கும்.. எண்ணேய் கொஞ்சம் அதிகம் யூஸ் பண்ணனும்.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு இளையா,

இந்த வெங்காய மசாலா, மதுரையில் குஜராத்தி ஹோட்டலில், சப்பாத்திக்கு தருவாங்க. ஒரு பிளேட் ஐந்து ரூபாய்(சில வருஷங்களுக்கு முன்னாடி) இப்ப வெங்காய விலை கூடினதுக்கு அப்புறம் எப்படின்னு தெரியலை!!

ரம்யா சொன்ன மாதிரி, பிக்னிக் போகிற போது, மதிய லஞ்சுக்கு பாக் செய்து கொடுத்து விட, நன்றாக இருக்கும்.

அழகாக செய்து காட்டியிருக்கீங்க, வாழ்த்துக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

உங்களுடைய முதல் குறிப்ப ரொம்ப எளிமையான முறையில் செய்து காண்பிச்சு இருக்கீங்க. நிறைய குறிப்புகள் கொடுங்க. இளையா நாங்க இத வெங்காய கொஸ்து சொல்வோம். அவசரத்துக்கு இந்த குறிப்புதான் செய்ய எளிதா இருக்கும் சப்பாத்திக்கு. உங்க முறைப்படியும் செய்து பார்க்கிறேன்.

வனி அக்கா
என் குறிப்பை செய்து பார்த்துவிட்டு கமெண்ட்ஸ் தந்ததற்கு ரொம்ப நன்றி .ரொம்ப சந்தோசமா இருக்கு எல்லாருடைய கமெண்ட்ஸ் படிக்கும் போதும் .
5 சப்பாத்தி சாப்பிட்டிங்களா super sister.நிறைய செஞ்சு நல்லா சாப்பிடுங்க sister.
பாசத்துடன் தங்கை இளையா

ரம்யா sister
நீங்களும் உங்க குறிப்பை அனுப்பி வையுங்கள் நன்றி sister

சீதா sister
வாழ்த்துக்களுக்கு நன்றி

வினோஜா
அப்படியா வெங்காய பொடிமாஸ் நானா வைத்த பெயர் கொஸ்து நு சொல்றாத் கூட நல்லா தான் இருக்கு sister நன்றி .

ஹாய் சகோதரி ஈஸியா இருக்கு செய்து பார்க்கிறேன் ..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இளையா,

எளிமையான சுவையான குறிப்பு செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிகவும் அருமையான செய்வதற்கு சுலபமான சமையல்.......மிக்க நன்றி......

ஹாய் இலையா சுப்பரா இருந்தது நான் செய்து பார்த்தென் நன்றி