நந்தனாவிற்கு கண்ணீர் அஞ்சலி

ஒரு பாடகியாகவும், நல்ல ஒரு இதயமாகவும் என்றும் நம் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் சின்னக்குயில் சித்ராவின் 8 வயது மகளின் மரணம் கண்களை கலங்க செய்கிறது. பல ஆண்டுகள் தவத்தின் பிறகு பிறந்து, வந்த வேகத்தில் வானுக்கு திரும்பிய அந்த சிறிய மலரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

// திடிரென காதில் கேட்ட விஷயம்
இதயத்தின் ஆழம் வரை சென்று பிசைந்து எடுக்கிறது.

சில கொடூர சம்பவங்களை மனம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்
எனும் ஆண்டவன் கட்டளை எங்கோ கேட்டுக் கொண்டேயிருக்கிறது

பல ஆண்டுகளாக குழந்தை வரத்திற்காக வருந்திக் கொண்டிருந்தாலும்
தனது இன்னிசையினால் அனைவரையும் நெகிழ செய்த குரலானது

தனது உயிரான மகளை இழந்து
ஈடுகட்ட இயலாமல் இன்று கதறும் குரலானது

தாங்க முடியாத துக்கம் தொண்டையை அடைக்க
ஒரு ரசிகையாக எனது கண்ணீர் அஞ்சலி

பாடுமோ இனி அந்த சின்னக்குயில்
சாகும் வரை தீருமோ அந்த வலி //

ஆறுதல் கூற வார்த்தைகளே கிடையாது.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை...மிகவும் துயரமான ஒரு சம்பவம்....உலகில் எதனாலும் ஈடு கட்ட முடியாத இழப்பு.....இறைவன் தான் அவர்களுக்கு துணையிருக்கவேண்டும்....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிகவும் வருத்தமான நிகழ்வு. கேள்விபட்டபோது மனதை ஏதோ செய்தது. ஒரு நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்று, வெளியில் செல்வதற்காக ஆவலுடன் ஆயத்தமாய் இருக்கும் நேரத்தில், கவனக்குறைவால் இப்படி ஒரு துயரச்சம்பவம் நடப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பு.

(இது நடந்து பத்து, பன்னிரண்டு நாட்கள் இருக்குமல்லவா?)

ஏப்ரல் 14 ஆம் தேதி என நினைக்கிறேன்.. ஃப்யூனரல் வீடியோவை இன்று பார்க்கும் சுழல் ஏற்பட்டது..அதன் தாக்கம் தான்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தினமலரில் படித்த அன்றே உன் அண்ணாவிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டேன். கடவுள் அவருக்கு மீண்டும் ஒரு மழலையைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ஆமா...எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. அட்லாண்டா ட்ரிப் சமயத்தில் கேள்விப்பட்டதோட சரி.. அப்ப்படியே விட்டுட்டேன்.. திடிர்னு இன்னைக்கு உஷாக்காகிட்ட பேசும் போது கூறினார்.. நியாபகம் வந்து யூ ட்யூப் பார்த்தேன்..ரொம்ப அடக்கமா எல்லா விழாவிலும் சிரிச்சிட்டே இருப்பாங்க சித்ரா.. கடவுள் தான் பார்த்தகனும் ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆறுதல் கூற வார்த்தைகளே கிடையாது. ஈடு கட்ட முடியாத இழப்பு.

வாழ்க வளமுடன்

ரொம்பவும் வருத்தப்பட்ட ஒரு சம்பவம்.இது நடந்த அடுத்த கணம் இங்கு இச்செய்தி வேகமாக பரவத் தொடங்கியது.கேட்டதும் நமக்கு நெருங்கிய ஒருவரின் இழப்பு போல இருந்தது..இவ்வளவு வருடம் காத்திருந்து பெற்ற குழந்தை என்பதால் ரொம்ப சங்கடமானது..எல்லாம் நேரம் தான்..அவருக்கு கொடுக்கப்பட்ட ஹோடெல் ரூம் வேறூ அதை கூட வேண்டாம் என்றும் தன் குழந்தைக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுமென்றும் குழந்தைக்கு கேரள உணவுகள் தான் பிடிக்கும் அதனால் தன் சகோதரியின் வீட்டின் அருகில் உள்ள வில்லா எடுத்து தங்கினார்கள்..அதிலேயே புரியும் குழந்தையை எந்தளவுக்கு கவனிப்பார் என்று..அம்மாதிரியான வில்லாக்களில் படுக்கையறை கதவை திறந்தாலே அருகில் ஸ்விம்மிங்பூல் இருக்கும்..என்ன நேரமோ குழந்தை வெளியில் போய்விட்டதும் இவர்கள் கவனிக்காமல் விட்டதும்..கடவுள் தான் அவருக்கும் குடும்பத்திற்கும் தைரியத்தை கொடுக்க வேண்டும்..

உங்க பதிவு பார்த்து தான் தெரிந்தது அவருக்கு கொடுக்கப்பட்ட ஹோட்டல் விட்டு வேறு இடத்தில் தங்கிய விஷயம்..நேரம் கெட்டுட்டா யாராலும் மாற்ற முடியாது போல.. எப்படி துடித்திருப்பார். சோத்னை

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என்னை மிகவும் வேதனைப் படுத்திய சம்பவம். என்னையும் அறியாமல் அழுதேன் அந்த தாய்க்காக!

குழந்தையின்மையை விட கொடுமையானது தவமிருந்து பெற்ற குழந்தையை இழப்பது. இப்படி பாதியிலேயே பிடுங்கிக் கொள்வதாக இருந்தால் அக்குழந்தையை கொடுக்காமலேயே இருந்திருக்கலாம். காலத்திற்கும் ஆறுமா அந்த தாயின் மனம்.

குட்டிப் பெண் நந்தனாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்த செய்தி குழந்தை நந்தனாவின் மரணம். அன்று முழுவதும் என் கணவரிடம் சொல்லி புலம்பி கொண்டே இருந்தேன்.ஏனென்றால் அந்த குழந்தை அவளுடைய பெற்றோருக்கு 15 வருடங்கள் கழித்து பிறந்தவள் அல்லவா? இப்படி ஒரு துயரச் செய்தியை கேட்ட மூன்றாமவர் நமக்கே இத்தனை வருத்தம் உள்ளதென்றால் உயிருக்கும் மேலாக பொத்தி பொத்தி அடை காத்து வந்த அந்த தாய்க்கு எப்படி இருந்திருக்கும் என்பதே. அந்த குழந்தை அவளுடைய பெற்றோருக்கு மட்டுமல்லாமல் கடவுளுக்கும் பிடித்தவள் போல, அதனால் தான் கடவுள் கொடுத்த வேகத்திலேயே எடுத்து கொண்டார்.சீக்கிரமே அந்த குழந்தையின் வெற்றிடத்தை ஈடுசெய்ய கடவுள் இன்னொரு குழந்தையை அவர்களுக்கு தர வேண்டும். குழந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்