அச்சுப் பிச்சு கேள்விகளும் அதி மேதாவி பதில்களும்

வணக்கமுங்க. அரசு பதில்கள், அந்துமணி பதில்கள் ன்னு ஆரம்பிச்சு, பாக்யா, துக்ளக் லேர்ந்து நேத்து ஆரம்பிச்சு அஞ்சு காப்பிதான் சேல் ஆகுற பாடாவதி பத்திரிக்கை வரைக்கும் எல்லாத்துலயும் கேள்வி-பதில் னு ஒரு பகுதி இருக்குதுங்க. அறிவுப்பூர்வமான கேள்விகளை வாசகர்கள் கேட்க, அதைவிட அறிவுஜீவித்தனமான பதில்களை ஆசிரியர்(கள்) கொடுக்கிறதை நாம எல்லாம் படிச்சு சந்தோசப்பட்டிருக்கோம். எத்தனை காலம்தான் வாசகர்களே கேள்விக் கேட்டு, ஆசிரியர் பதில் சொல்லிக்கிட்டு இருப்பாரு? வாசகர்களுக்கு நாமும் அந்த மாதிரி அதிமேதாவித்தனமா பதில் சொல்லணும்ங்கிற ஆசை இருக்காதா என்ன?

அந்த ஒரு அற்ப ஆசை உங்க மனசுல ஒரு மூலையில இருந்துச்சுன்னா, அதை நிறைவேத்துறதான் இந்த பகுதியோட நோக்கம். இங்க அச்சுப் பிச்சு கேள்விகளை நான் கேட்கப் போறேன். உங்க கிட்னியை முழுசா யூஸ் பண்ணி, அதி மேதாவித்தனமான பதில்களை நீங்க சொல்லணும். இந்த கேள்விதான்னு இல்லை.. என்ன வேணும்னாலும் கேட்போம். உதாரணத்துக்கு ஒண்ணு ரெண்டு -

சிம்ரன் இடை, செருப்பு கடை - ஒப்பிடுக.
கங்காருக்கும் கரப்பான் பூச்சிக்கும் கலப்பு திருமணம் பண்ணி வச்சா, பிறக்கிற குழந்தை எந்த ஜாதியா இருக்கும்.??

இப்படி ரொம்பவே யோசிக்க வைக்கிற கஷ்டமான கேள்விக் கணைகளை அள்ளி வீச இருக்குறோம். அதனால இப்பவே கிட்னியை பாலிஷ் போட்டு, ரெடி ஆகிக்கோங்க..

இதுக்கு விதிகள் எல்லாம் பெரிசா இல்லைங்க. தனிப்பட்ட முறையில யாரையும் தாக்காம, என்ன வேணும்னாலும் பதில் சொல்லலாம். அம்புடுதேன்..

ஓக்கே. லைட்ஸ் ஆன்.. ஸ்டார்ட் கேமரா... ஆக்சன்.

1. ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆக என்ன செய்ய வேண்டும்?

2. சாமியார், மாமியார் - யார் ரொம்ப நல்லவர்?

3. கோடை வெயில்லை சமாளிக்க குளு குளு ஐடியாக்கள், ப்ளீஸ்..

முதல் பதிவுல கேள்விகள் இவ்வளவுதான். உங்களோட அற்புதமான, மெய்சிலிர்க்க வைக்கும் பதில்களை எடுத்து விடுங்க..

இந்தா வாரேன்...

1. முதலமைச்சர் வீட்டில் கொல்லையடிக்கனும் இல்ல பெரிய ஆளுங்க வீட்டுல ரைடு போகணும்.

2. மாமியாரே நல்லவங்க... மாமியார்ட்ட மாட்டினது ஒன்னு இரண்டு மருமக தான், சாமியார்ட்ட மாட்டினது எத்தனை மருமகள். கவுண்ட்டு பார்க்கனுமில்ல!!

3. ஆங்... நவரத்னா எண்ணெய்... ஜில் ஜில் கூள் கூள். இல்லன்னா பெஸ்ட் ஐடியா எதாவது மாலுக்கு விண்டோ ஷாப்பிங் போயிடனும்.

படிச்சுட்டு யாரும் என்னைய திட்டபுடாது... எனக்கு பிடிக்காது. சொல்லிபுட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

oray maasam ennanga oray naal la kodeesvran aagidalanga numma vadivelu vai follow panna. athanga ORAY NAALI KODEESVARAN AAVATHU EPPADI nu book eluthi vikkalam. but antha thittamum 100 per kitta adi vaangi failiour aachu na no problem. aduthadha KONJAM TOPIC AI MATTUM maathi oru 30 days ithay velaiai continue panna oru maasam mudivil chinna medical treatment ukupin kandippa kandippa kodeesvaran thango. ok ok next..... numma ellorukkum therinjathu thaan... MAAMIYAR VEEDUku pogatha saamiyaarum nallavarillai. saamiyaar veetukku pogatha maamiyarum nallavarillai. but saamiyar thappu pannalum, maamiyar thappu pannaalum MAAMIYAR[police station] veettukuthaan anuppuvanga. aiyaiyooo... ok.ok. enakku maamiyar thanga nallavanga...... athigamaa yosichu yosichu en arivuchudarin veppathai ennalaye thanga mudiyala pa...... kodai veil pathi no comments... numma friends continue pannuvanga......ok.?..ok.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

1.கோடீஸ்வரன்னு பேரை கெஜட்ல மாத்தி வச்சிகிட்டா அப்புறம் நம்மள எல்லாரும் கோடீஸ்வரன்னுதான் கூப்பிட்டாகனும்.

2. வனி சொன்ன பதிலை நான் ஆமோதிக்கிறேன் ஹி ஹி ஹி மாமியார்தான் நல்லவங்க;)

3.ஒரு ஓவர் கோட்ல தண்ணிதெளிச்ச வைக்கோல நிரப்பி வைச்சுக்கனும். கோட் வெளிப்பக்கமும் உள்பக்கமும் காத்து நுழையற மாதிரி ஓட்டை போட்டுக்கனும். அப்புறம் அந்தக் கோட்டை எடுத்து மாட்டிக்கிட வேண்டியதுதான். ஜில் ஜில் கூள்ல வெயிலாவது ஒன்னாவது, எப்பூடீ என்னோட ஐடியா ஹி ஹி.................;-)

Don't Worry Be Happy.

எவ்வளவு அறிவு பூர்வமான கேள்வி. இதோ ஏன் கிட்னியை பயன்படுத்தி பத்தி சொல்றேன்.

1. ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆக என்ன செய்ய வேண்டும்?

பிச்சை எடுக்க வேண்டும். என்னென்றால் இப்பொது பிச்சை எடுப்பவந்தன் கோடீஸ்வரன். இல்லை என்றால் கோடிஸ்வரன் என்று பெயர் வைத்து கொள்ளலாம்.

2. சாமியார், மாமியார் - யார் ரொம்ப நல்லவர்?

கண்டிப்பாக மாமியார்தான். இப்போது இருக்கும் சாமியார்கள் எப்படி பட்டவர்கள் என்று பல தொலைகாட்சிகள் புட்டு வைக்கின்றது.

3. கோடை வெயில்லை சமாளிக்க குளு குளு ஐடியாக்கள், ப்ளீஸ்..

கோடை வெயில்லில் குளுமையாக இருக்க வேண்டும் என்று குளு குளு ஐஸ் சாப்பிடுங்கள். ரொம்ப சுகமா இருக்கும். படிக்கிற யாரும் திட்ட வேண்டும் சும்மா விளையாட்டு.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பாபு அண்ணா, நம்ம அறுசுவைலயும் இந்த மாதிரி பக்கங்கள் வருமான்னு ரொம்ப நாள் ஏக்கத்தோடு காத்திருந்திருக்கேன். இப்ப அந்த ஏக்கத்தை நீங்க போக்கிட்டீங்க. நன்றிங்கண்ணா. ரொம்பவும் நல்லா இருக்கு. என் பதிலுக்கு வர்றேன்.

1. ஒரு மாதத்தில் கோடிஸ்வரனாக பேரை மாற்றிக் கொண்டால் போதும். ஜெய்யின் பதிலை நானும் வழிமொழிகிறேன்.

2. சாமியாரை எப்போதுமே நம்ப முடியாது. மாமியாரை எப்போதாவது நம்பலாம். அது அவரவர் வீட்டு மாமியார்களை பொறுத்தது. (நல்லவேளை என் மாமியாருக்கு அறுசுவை தளம் தெரியாது)

3. ஜில் ஜில் கூலாக இருக்க அடிக்கடி நகைக்கடை, துணிக்கடைக்கு போனால் போதும் மனம் மட்டுமல்லாமல் அங்கமே குளிர்ந்து போகும். இந்த குளிர்ச்சியானது வருடம் முழுவதும் தாங்கும். (என்ன ஒன்று சூடு தான் டிரான்ஸ்பர் ஆகும், செலவு செய்யும் கணவருக்கு ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

1. எல்லாரும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க . ஸ்விஸ் வங்கியில நம்ப ஆளூங்க போட்டு வெச்சிருக்கற பணம் எல்லாம் திருப்பி வந்ததும் எல்லாரும் பங்கு போட்டுண்டு கோடீஸ்வரர்கள் ஆயிடலாம்.
2. மாமியார் தான் நல்லவங்க. ஏன்னா அவங்க ஒண்ணு, ரெண்டு பொண்ணுங்க (மருமகளுங்க) வாழ்வைத் தானே கெடுப்பாங்க. ஆனா சாமியாருங்க! சான்ஸ் கிடைச்சா நிறைய பொண்ணுங்க வாழ்வை கெடுப்பாங்க இல்லயா?
3. கோடை வெயில சமாளிக்க, கிணறு, குளம், குட்டை எதுலயாவது இறங்கிட வேண்டியதுதான். ஆனா எங்களை மாதிரி சென்னை வாசிங்களுக்கு அதுவும் கஷ்டம். கூவத்துல இறங்க முடியாது இல்ல.
அன்புடன்
ஜெமாமி

ஒரே நாள்ல கோடீஸ்வரன் ஆக - அரசியல்வாதி வீட்டுக்கு ரெய்ட் போகலாம்
மாமியார் தான் நல்லவர். சாமியார் கதை தான் ஊரறிஞ்ச விஷயமா இருக்கே
ஜில் ஜில் கூல் கூலா இருக்க வீட்டு தண்ணி தொட்டில இறங்கிடலாம் 10 AM to 5 PM

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அண்ணா, சூப்பர் ரொம்ப ரொம்ப சூப்பர யோசிச்சி த்ரெட் ஓப்பன் பண்ணுரிங்க அண்ணா. உங்களுக்கு இருக்க மூளைக்கு நீங்க அமெரிக்காவுல பிறக்க வேண்டியது. அப்ப..........ப்ப எப்படியெல்லாம் யோசிக்கிரிங்க ஹ ஹா.......

1) கோடீஸ்வரன் ஆக ஒரு நல்ல நகை கடைய பார்த்து கொள்ளை(திருடனும்) அடிக்கனும். :) ஆனா அதுக்கு ஒரு மாதம் தேவை இல்ல. ஒரு நாள் போதும். ஆனா இந்த ஐடியாவ கேட்டா அடுத்த நாளே விருந்து அதாவது களி தான் சாப்பிடனும் .:)

2) மாமியார் தான் நல்லவுங்க. என்ன தான் கொடுமைகார மாமியார இருந்தாலும் ஒரு நாள் இல்லனா ஒரு நாள் திருந்திடுவாங்க இல்லனா திருத்திடலாம். ஆனா இந்த சாமியாருங்க திருத்தவே திருந்த மாட்டாங்க. திருத்தவும் முடியாது.

3) கோடை வெயில சமாளிக்க தினமும் குளிக்கனும். இல்லனா டர்மி குள் பவுடர் வாங்கி உடல் முழுக்க புசிக வேண்டியது தான் .;)

இது எப்படி இருக்கு ஹா ஹா ஹா......................

உன்னை போல பிறரையும் நேசி.

அடடா இப்பூடி எல்லாம் டாப்பிக் ஆரம்பிக்கறதுக்குத்தான் ஒருத்தர் தலைமறைவா இருந்து ரூம் போட்டு யோசிச்சாரோ :-))

கோடீஸ்வரன் ஆகறது ரொம்ப கஷ்டமா என்ன! எங்க ஊருக்கு வந்துடுங்க ஒரே நாளில் நீங்க மல்டி மில்லியனர்தான். நிஜம்மாவே இந்தோனேஷியாவில் எல்லாரும் கோடீஸ்வரர்கள்தான். பின்னே ஒரு டாலர் கொடுத்தா 8000 ருப்பியா கிடைக்குமே. அப்போ கோடீஸ்வரன் ஆகறது கஷ்டமா என்ன :))

சாமியார் தான் ரொம்ப நல்லவரு. அவரைத் தேடி போனாத்தான் பிரச்சினை. ஆனா மாமியாரு ரொம்ப டேஞ்சரு. நீங்க தேடிப் போகலேன்னாலும் அங்க இருந்து பிரச்சினைகள் தானா வரும்.
பின்குறிப்பு: என் மாமியார் இந்த லிஸ்டில் இல்லை என்பதை சொல்லிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்

கோடைஎயிலை சமாளிக்க... நம்ப ஊர்ல எந்த மாசம் சம்மர்.... ஆங் ஏப்ரல் அண்ட் மே. காலண்டரில் இருந்து இந்த ரெண்டு மாசத்தையும் கிழிச்சு தூரப் போட்டுடுங்க. சம்மர் போயே போச்சு. எப்பூடி?!!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கலக்குறீங்க கவிசிவா!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்