வெங்காய பக்கோடா

தேதி: May 31, 2006

பரிமாறும் அளவு: ஆறு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கடலை மாவு - கால் கிலோ
அரிசி மாவு - நூற்றைம்பது கிராம்
சமையல் சோடா - அரை டீ ஸ்பூன்
பெ. வெங்காயம் - நான்கு
சி. வெங்காயம் - இருபது
கறிவேப்பிலை - மூன்று கொத்து
சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
ப. மிளகாய் - ஐந்து
பூண்டு - ஐந்து பல்
எண்ணை - அரை லிட்டர்
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்


 

முதலில் சோம்பை பொடியாக்கி, பூண்டு & மிளகாயை நன்றாக தட்டிக் கொள்ளவும்.
கறிவேப்பிலை, வெங்காயங்களை மிக மெல்லியதாக நறுக்கவும்.
கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் சலித்து கட்டியில்லாமல் வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணையை சூடாகவும்.
மாவில் சோம்பு தூள், தட்டிய பூண்டு & மிளகாய், உப்பு, சோடா, கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
சூடான எண்ணையில் இரண்டு கரண்டி எடுத்து மாவில் ஊற்றவும். ஒரு கரண்டி காம்பால் நன்றாக கலக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் சேர்த்து பிசறி எண்ணையில் தூவி விடவும்.
மிகவும் தூள் தூளாக தூவக் கூடாது. சிறிதும் பெரிதுமாக கட்டிகளாக இருக்க வேண்டும்.
பொன்னிறமானதும் அரித்து எடுக்கவும்.


*வெங்காயத்தின் அளவை இரண்டாக குறைத்து ஒரு கட்டு முளைக்கிரை நறுக்கி சேர்த்து கீரை பக்கோடாவாகவும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

That Pakoda tastes very nice. Thanks Madam.

மிக்க நன்றி முத்துலக்ஷ்மி! அதற்குள் செய்து பார்த்து கருத்து எழுதியதற்கு நன்றிகள் பல......

Vazhga Tamil!!!

நல்ல குறிப்பு. கடைகளில் வாங்கும் போது கிடைக்கும் அதே சுவை கிடைக்கிறது, இம்முறைப்படி செய்யும் போது. நன்றி

indira