பாட்டில் டிசைன்

தேதி: May 2, 2011

4
Average: 3.8 (11 votes)

 

க்ளாஸ் பாட்டில் - ஒன்று
சில்வர்நிற சம்கி
கோல்டு, சில்வர், க்ரீன் நிற கிலிட்டர்ஸ்
பெவிக்கால்
ரிப்பன் லேஸ் - பிங்க் நிறம்
க்ளாஸ் கலர்

 

பாட்டிலை கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். பாட்டிலில் எழுத்துக்கள், பேப்பர் ஒட்டி இருந்தால் ப்ளேடால் சுரண்டி எடுத்து விடவும்.
பாட்டிலின் கழுத்துப்பகுதிக்கு கீழ் ஒரு துளி பெவிக்கால் வைத்து ஒரு சம்கியை ஒட்டவும். அதன்பின் ஒரே மாதிரியாக இடைவெளி விட்டு வரிசையாக நான்கு சம்கியை ஒட்டி வைக்கவும். அடுத்து சற்று தள்ளி முதலில் ஒட்டிய சம்கியின் இடைவெளியில் மூன்று சம்கியை ஒட்டவும்.
மேலே சொன்னதுப்போல் பாட்டில் முழுவதும் நான்கு, மூன்று எண்ணிக்கையில் சம்கியை ஒட்டி காயவிடவும். ஒவ்வொரு சம்கியை சுற்றி கிலிட்டர்ஸால் ஒரு வட்டம் வரையவும். அந்த வட்டத்தை சுற்றி சின்ன சின்ன கோடுகள் போட்டுக்கொள்ளவும். ஒரு வரிசை கோல்டுநிற கிலிட்டர்ஸ், அடுத்து சில்வர், அதற்கு அடுத்த வரிசை க்ரீன் நிற கிலிட்டர்ஸ் என்று பாட்டில் முழுவதும் சம்கியில் கிலிட்டர்ஸ் கொடுத்து முடித்து நன்கு காயவிடவும்.
இப்போது பாட்டிலில் இடைவெளி தெரியும் பகுதியில் நீங்கள் விரும்பிய க்ளாஸ் கலரைக் கொடுக்கவும். லைட் நிற வேண்டுமானால் ஒரு முறை க்ளாஸ் கலரை கொடுக்கவும். டார்க் நிறமாக வேண்டுமானால் ஒவ்வொரு முறையும் க்ளாஸ் கலர் காய்ந்த பிறகு மூன்று முறை கொடுக்கவும்.
ரிப்பன் லேஸால் சிறிய போவ் போல் செய்து பாட்டில் பக்கவாட்டில் பெவிக்கால் வைத்து ஒட்டி விடவும்.
பாட்டிலின் உள்ளே நீங்கள் விரும்பிய மலரை வைத்து அலங்கரிக்கவும். எளிமையான பாட்டில் டிசைன் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பரா இருக்கு. கலக்கறீங்க. கொஞ்ச நாளா உங்க குறிப்புகளை காணோம்... இடைவெளிக்கு பின் அசத்தலான குறிப்பு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவை குழு அழகான வேலைப்பாட்டை பண்ணி காட்டி இருக்கீங்க. வாழ்த்துக்கள். இதுல ஹய் லைட் அந்த பாட்டில் ஷேப் தான் :)

அண்ணாகிட்ட தனியா என்குயரி வெச்சுகறேன்... :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சிம்பிளா சுப்பரா இருக்கு. ;) பாராட்டுக்கள். @}->--

‍- இமா க்றிஸ்

சூப்பரா இருக்குங்க, வாழ்த்துகள்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

simply super desin keep it up.regards.g.gomathi.

hi
supera senji erukeenga good creative work, keep it up..........