அரிசி ரவை ரொட்டி

தேதி: May 5, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

பச்சரிசி ரவை - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லி தழை - சிறிது
சோம்பு - அரை தேக்கரண்டி
சோடாமாவு - இரண்டு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிது


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பச்சரிசி ரவையில் கால் கப் தண்ணீர் மற்றும் சோடா சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் வைக்கவும். அப்பொழுது தான் அது கொஞ்சம் சாஃப்ட்டாக இருக்கும் அரிசிரவை இல்லாதவர்கள் பச்சரிசியை மிக்சியில் ரவை போல் பொடித்துக் கொள்ளலாம்.
வெங்காயம், மல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். சோம்பை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
நறுக்கியவற்றை ஊறிய அரிசியில் போட்டு உப்பு சேர்த்து பிசையவும். ரொம்ப கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்தியாக பிசைந்து வைக்கவும்.
பின்னர் தோசைகல்லில் சிறு சிறு உருண்டைகளாக மாவை வைத்து கைகளினால் சிறு ரொட்டி போல் தட்டி கொஞ்சம் எண்ணெய் சுற்றிலும் விடவும். சிவந்ததும் திருப்பி விட்டு எண்ணெய் சிறிது விட்டு வெந்ததும் எடுக்கவும் (இந்த ரொட்டி கொஞ்சம் மொறுமொறுப்பாகவும் சிறிது உறுதியாகவும் இருக்கும்).
சுவையான மாலை நேர சிற்றுண்டி ரொட்டிகள் தயார். (சட்னியும் தொட்டு சாப்பிடலாம்)


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவையான சுலபமான குறிப்பு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுலபமான குறிப்பு வாழ்த்துக்கள்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நலல் இருக்கு மாசி, வெங்காய முட்டையுடன் சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும்/

Jaleelakamal

ருக்சானா நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

ரொம்ப அழகான குறிப்பு செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் sister