பல் துலக்க அடம்பிடிக்கும் குழந்தை

என் குழந்தைக்கு 2 1/4 வயது ஆகிறது. தினமும் பல் தேக்க மாட்டேங்கிறா..நானும் ரைம்ஸ் சொல்லி, தண்ணீரில் விளையாட சொல்லி அவ மூடை மாற்றப்பார்ப்பேன். ஆனாலும் பல் தேக்க மாட்டேங்கிறா. அருசுவை தோழிகள் ஏதாவது வழி சொல்லுங்கப்பா..உதவியாக இருக்கும்.

ஹாய் ,உங்கள் குழந்தையுடன் நீங்களும் பல்துலக்குங்கள்.அல்லது நீங்கள் பல்துலக்குவதை அவர் பார்க்குமாரு செய்யுங்கள்.
பிரஸ்ஸில் பேஸ்ட் போடுவது முதல் எப்படி துலக்குவது என்பதுவரை ஒவ்வொன்றாக நீங்கள் செய்யச் செய்ய அவளையும் செய்யத் தூண்டுங்கள்........ஒரே நாளில் சரியாகாது,சரியாக துலக்காமல்,சரியாக வய் கொப்பளிக்காமல் இப்படியெல்லாம் நடக்கும். நாம் கோவப்படக்கூடாது ஒருவாரத்தில் சரியாகிவிடும்.

ஹாய் ரேணுகா, உங்களுடைய உடனடி பதிலுக்கு நன்றி. ஒரு வாரம் நன்றாக தேய்த்து, வாய் கொப்பளித்தாள். பிறகு, என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. பல் தேய்க்கவே மாட்டேன்கிறா.உங்களுடைய ஆலோசனைப் படி செய்து பார்க்கிறேன்பா. நன்றி.

கடைக்கு கொண்டு போய் அவங்க குட்டிக் கைய்யாலே பிடித்த கிட்ஸ் பேஸ்ட் எடுக்க சொல்லுங்கள்..ஸ்ட்ராபெரி ஃப்லேவர் எல்லாம் சுவையாக இருக்கும்;-)
அழகான பல பல வடிவத்திலான குட்டி ப்ரஷ் வாங்குங்கள்..பிறகு நீங்களும் தேய்த்து காட்டினால் கண்டிப்பாக தேய்ப்பார்கள்..ரொம்ப அழுத்தாமல் மென்மையாக பொறுமையாக தேய்த்து விடுங்க..எதாவது குழந்தை பல் துலக்கும் வீடியோ போட்டு காட்டுங்க

ஹாய் தளிகா, உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. தினமும் ஸ்ட்ராபெரி ஃப்லேவர் கிட்ஸ் பேஸ்ட் வைத்துதான் பல் துலக்க வைப்பேன்.இன்று நானும் அவளுடன் சேர்ந்து பல் துலக்கினேன். அவளாகவே பல் துலக்கினா, என்னை தேக்கவிடமாட்டேன்றா..இருந்தாலும் பரவாயில்லை..போக போக சரியாகிவிடும் என்று விட்டுவிட்டேன்.

ரொம்ப மென்மையா தேய்த்து விடுங்க.வலித்தால் அடம் பிடிப்பாங்க.தளிகா சொன்ன மாதிரி வீடியோ போட்டு காட்டுங்க.2-3 பிரஷ் வைச்சுட்டு எதுல பல் துலக்கலாம்னு அவங்கள செலக்ட் செய்ய சொல்லுங்க.அவங்களே பிரஷ் பணறது நல்லது தான்.ஆர்வம் வரும்.ஆனா அவங்க பிரஷ் பண்ணிண பிறகு பாப்பா சரியா பிரஷ் பண்ணிட்டியானு அம்மா பார்க்கறேனு சொல்லிட்டு, பூச்சி வாயில இன்னும் ஒன்னு இருக்குடா சொல்லி நீங்க லேசா பண்ணி விடுங்க.துப்ப சொல்லிட்டு, தண்ணி திறந்து விட்டுட்டு இதோ போகுது பார்னு சொல்லுங்க.இப்ப பாப்பா வாய் கிளீன் ஆயிருச்சினு சந்தோஷமா சொல்லுங்க.ஒரு வாரத்துல நல்லா பழகிடுவாங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்