வளையல் துண்டுகளில் பூச்சாடி செய்வது எப்படி?

தேதி: May 9, 2011

4
Average: 4 (27 votes)

 

வெள்ளைநிற சார்ட் அட்டை
ohp ஷீட்
வளையல்கள்
பெவிக்கால்
க்ளாஸ் கலர்
ப்ரஷ்

 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். Ohp ஷீட் அளவிற்கு சார்ட் பேப்பரை நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
கிளாஸ் வளையல்களை சின்ன சின்ன துண்டாக உடைத்து வைக்கவும். ஒரு வளையலை மட்டும் படத்தில் உள்ளது போல் முக்கால் பாகம் அளவுக்கு உடைத்து வைக்கவும்.
Ohp ஷீட்டில் கீழிலிருந்து சிறிது இடைவெளிவிட்டு நடுவில் முக்கால் பாகம் அளவுக்கு உடைத்து வைத்த வளையல் துண்டை முதலில் பெவிக்கால் வைத்து ஒட்டவும். மீதி வளையல் துண்டை பானை போன்று வடிவமைக்கவும்.
பானையின் வாய் பகுதியின் நடுவிலிருந்து கிளைகள் போவது போல் வளையல் துண்டுகளை முதலில் கொடி போல் மாறி மாறி ஒட்டிக்கொள்ளவும். அதன் இரு பக்கவாட்டிலும் ஒரு வளையல் துண்டை வைத்து ஒட்டவும். கலர் கலராக உடைத்து வைத்த வளையல் துண்டில் விருப்பமான நிறங்களை எடுத்து படத்தில் உள்ளது போல் பூ போன்று இருப்பக்கங்களில் ஒட்டிக் கொள்ளவும்.
அந்த கிளையிலிருந்து இடது பக்கம் ஒரு கிளையில் மொட்டு இருப்பது போல் ஒட்டிக்கொள்ளவும்.
இதேப்போல் வலதுப்பக்கமும், நடுவிலும் கிளையிலிருந்து மொட்டு வருவது போல் ஒட்ட வேண்டும்.
கொடி போல் ஒட்டிய வளையல்களின் ஓரத்தில் இரண்டு வளையல் துண்டுகளை சிறிய இலை போல் வைத்து ஒட்டவும். இலைகள் வைத்தப்பிறகு மீதி இடைவெளியில் ஒரு வளையல் துண்டை வைத்து ஒட்டவும்.
பூ பானையில் டிசைன் செய்வதற்கு வளையல்களை பானையின் அகலத்துக்கு சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரைக்கும் உடைத்து வைத்து அதனை படத்தில் உள்ளது போல் வரிசையாக இடைவெளிவிட்டு ஒட்டவும். கடைசி வளைவுக்கு கீழ் படத்திலுள்ள டிசைனை போன்று ஒட்டிக் கொள்ளவும்.
இரண்டு பூக்களின் உள்ளே சின்ன வளையல் துண்டுகளை ஒவ்வொரு இதழிலும் வருவது போல் வைக்கவும். பிறகு ஒவ்வொரு இலையின் உள்பகுதியில் க்ரீன் கலர் க்ளாஸ் கலரைக் கொடுக்கவும். கொடியின் ஓரங்களில் அதே கலரினால் சின்ன சின்ன புள்ளிகள் வைக்கவும்.
பூக்கள் மற்றும் மொட்டுகளின் உள்ளே விரும்பிய க்ளாஸ் கலரை கொடுக்கவும்.
பூ ஜாடியில் உள்ளே மஞ்சள்நிற கலரைக் கொடுத்து முடிக்கவும். உடைந்த வளையலைக் கொண்டு செய்யக்கூடிய எளிய பூச்சாடி ரெடி. Ohp ஷீட்டின் பின் பக்கம் சார்ட் பேப்பரை வைத்து ப்ரேம் போட்டு வால்ஹேங்கிங்காக மாட்டி வைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

யார் ஐடியா இது??? நிறைய கண்ணாடி வளையல் கொடுத்துட்டேன்.... இதுக்காக வாங்கி தான் உடைக்கனும்... உடைச்சாலும் தப்பிலை... அத்தனை அழகான குறிப்பு!!! :) கலக்கல் ஐடியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

It is such a beautiful Art work. Excellent color selection with neat presentation, perfect finishing.

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

பத்மா & ரேவதி,
பூச்சாடி சொல்ல முடியாத அளவு அழகா இருக்கு. அந்த மஞ்சள் பூ சுப்பர்ப்.
படங்கள் எல்லாம் பளீர் என்று வந்து இருக்கு. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

உடைந்த வளையல்களை வைத்துக்கொண்டு பூச்சாடி செய்தால் நல்லா இருக்கும்னு எண்ணிக்கொண்டிருக்கிறேன் ஐடியா தந்தமைக்கு மிக்க நன்றி ரொம்ப அழகா இருக்கு.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் அறுசுவை டீம் இந்த வளையல் பூச்செடி ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்..........

உன்னை போல பிறரையும் நேசி.

கல கலவென்று ஓவியமானது ....

கொள்ளை அழகு. பூந்தொட்டி அழகு அதில் விதம் விதமா பூத்திருக்கும் மலர்கள் அழகோ அழகு. நல்ல கற்பனை அதற்க்கு அழகாய் வடிவம் கொடுத்திருக்கீங்க...

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இப்போ இந்த வலையல் பூச் சாடியைப் பார்த்த பின் தான் எனக்கு பழைய ஞாபகம் வந்தது,நான் பள்ளி படிக்கும் போது ஒரு அட்டையின் மேல் சாட் பேப்பரை ஒட்டி அதன் மேல் கலர் கலர் உடைந்த வலைகள்களைக் கொண்டு WELCOME என்று ஒட்டி பள்ளி ஆசிரியையிடம் பாராட்டும் பெற்றேன்......உங்கள் ஜாடியும் சூப்பர்!

Eat healthy