8 வது மாதம் ஜலதோஷம்

ஹாய் தோழிஸ் அனைவரும் நலமா. நான் தான் சோனியா எனக்கு இப்பம் 8 வது மாதம் நடக்கிறது. இப்பம் எனக்கு ரொம்ப ஜலதோசமாக இருக்கு தாங்க முடியல. மருந்து எடுக்க பயமாக இருக்கு. நான் விக்ஸ் போடலாமா. வேற மருந்து இருந்த சொல்லுங்க பா.

சோனியா நல்ல இருக்கீங்களா?
வாழ்த்துக்கள்

தைலம் போடலாம்

குங்குமப்பூ சளிக்கு கேட்கும் , பாலில் காய்ச்சி குடிங்க
மிளகு சேர்ந்த உணவு சாப்பிடுங்கள்
ஆவி பிடிங்க

Jaleelakamal

ஹாய் சோனியா,

விக்ஸ் தடவலாம், சரியாகும். சூடான பால், வென்னீர் குடிங்க. இருமலும் இருந்தால், பாலில் மஞ்சள்பொடி, மிளகுப் பொடி, பனங்கல்கண்டு சேர்த்து, சூடாகக் குடிங்க.

மணிமுத்துமாலை

எப்படி இருக்க பா.நல்ல படியா ஊருக்கு போய் சேர்ந்துடியா.நான் அன்னைக்கு நைட் கால்
பண்ணன் பா ஆனா நீ எடுக்கல.அண்ணா எப்படி இருக்காங்க.இப்போ எப்படி இருக்கு.சத்தியமா
இன்னைக்கு உன்னை பத்தி நினைச்சேன் உடனே உன்னோட பதிவு.சந்தோஷம்
செக்கப் போறியா என்ன சொன்னாங்க எப்போ வளைகாப்பு.மாமியார் வந்தாங்களா.
எப்போ இங்க வருவ பாப்பாவ தூக்கிட்டு.

ஹாய் ஜலிலா அக்கா முத்துமாலை அக்கா ராதிகா அனைவர்க்கும் நன்றி. நீங்க சொன்னது செய்து பார்கிறேன். எனக்கு 8 மாதம் முடிய போகுது. ஒரு சந்தேகம், குழந்தை சரியாய் எந்த வாரம் பிறக்கும். eppothu எல்லாம் ரொம்ப முதுகு வலி இருக்கு. தாங்க முடியல. அதுல வேற இந்த ஜலதோஷம் ரொம்ப கஷ்டமா இருக்கு. ராதிகா வளைகாப்பு முடிந்துடுப. எல்லாரும் வந்தாங்க. ரொம்ப சந்தோசமா இருந்து. போட்டோ ஓர்குட் ல போடு இருக்கேன். பாரு. உன் குழந்தை நலமா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்