தூங்காம தெளிவா பேசுங்க!!

கொஞ்ச நாள் ரொம்ப தூங்கினீங்க, இப்போ கொஞ்சமா தூங்கறீங்க... பாபு அண்ணா அப்பப்ப வந்து எழுப்பிட்டு போறார். அதான் நானும் எழுப்ப வந்தேன். இது அரட்டை பகுதி தான். கவலை இல்லாம வாங்க. நான் கேள்விலாம் கேட்க மாட்டேன். ;)

இது அரட்டை பகுதி தான்... அதனால எதை பற்றி வேணும்னாலும் பேசலாம்ல...

நீங்க பியூட்டி பார்லர் போகும் பழக்கம் உள்ளவரா??? எதுக்காக வேணும்னாலும் இருக்கட்டும்... சின்ன ஐபுரோ பண்ண போனா கூட சரி... இது வரை ஏதும் மோசமான அனுபவம், பிடிக்காத நிகழ்வு இருக்கா?? அது காமெடியோ, சீரியஸா உங்களை கோவபடுத்தியதோ... எதுவா இருந்தாலும் இங்க சொல்லுங்களேன். இனி போறவங்க இது மாதிரிலாம் கூட நடக்கலாம்னு தெரிஞ்சுக்குவாங்க. :)

ப்ளீஸ்... வனி கூப்பிட்டா நோ சொல்லாம எல்லாரும் வரனும்... ஓகே??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனிதா தூங்காம இந்த நேரத்துல ?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனி ரொம்ப நன்றி வனி. எனக்கு நடந்த கொடுமையை(????) புலம்ப ஒரு இடம் கொடுத்தீங்களே :)

இது நடந்தது சிங்கப்பூரில். எப்பவும் நான் எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சின்ன பார்லரில்தன் ஐப்ரோ த்ரெட்டிங் செய்வேன். அன்னிக்கு எனக்கு நேரம் சரியில்லை போலிருக்கு. லிட்டில் இந்தியாவில் இருக்கும் பிரபல பியூட்டி பார்லருக்கு போய் பண்ணினென். பாவி மக்க அங்க ட்ரெயினிங் எடுப்பவங்களுக்கு என்னை எலியா பயன் படுத்திட்டாங்க :(. ஒழுங்காவே எடுக்காமல் சரியான வலி. பொறுத்துக்கிட்டேன். மாட்டிக்கிட்டாச்சு என்ன பண்ண. ஆனா பாருங்க பார்த்து பார்த்து எடுத்த அந்த புள்ள நொடியில புருவம் ஆரம்பிக்ற இடத்தை முழுசா த்ரெட்டிங் பண்ணிடுச்சு. கண்ணை மூடி படுத்திருந்த எனக்கு தெரியாது. வழக்கத்துக்கும் அதிகமான நேரத்துக்கு அப்புறம் முடிஞ்சிடுச்சுன்னு அந்த புள்ளை சொல்லிடுச்சு. எழும்பி கண்ணாடியைப் பார்த்தா வில் போல அழகா இருக்க வேண்டிய என் புருவம் நுனி உடைஞ்ச வில்லா மாறியிருந்துச்சு.

அப்புறம் என்ன நல்லா திட்டித் தீர்த்துட்டு வந்தேன். திட்டினாலும் பொனது உடனே வரவா செய்யும். அதுக்கப்புறம் ஒரு மாசத்துக்கு ஐப்ரோ பென்சிலால்தான் உடைந்த வில் சரி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹ்ம்ம் இது நடந்தது இந்தோனேஷியாவில். நான் எப்போதும் அந்த பியூட்டி பார்லர் சலூனில்தான் முடி வெட்டிக் கொள்வேன். எந்த பிரச்சினையும் இருக்காது. அழகா வெட்டி விடுவாரு. அன்னிக்கு நான் போன நேரம் எனக்கு வழக்கமாக வெட்டுபவர் இல்லை. வேறொருத்தர்தான் இருந்தார். இருந்தாலும் பார்லரின் மேல் இருந்த நம்பிக்கையில் என் தலையை கொடுத்தேன்.

அவரிடம் தெளிவாக சொல்லியிருந்தேன். லேயர் கட் செய்ய வேண்டும். தோளுக்கு கீழே இரண்டு இஞ்ச் நீளம் இருந்தால் போதும்னு. அவரும் எல்லாத்துக்கும் மண்டையாட்டிட்டு வெட்டினார். முடிச்சுட்டு கண்ணாடியில் பார்த்தால் ஒருபக்கம் நீளமாகவும் இன்னொரு பக்கம் குட்டையாவும் இருக்குது. அத்தோட அந்த ஆளோட திறமையை மெச்சிக்கிட்டு நான் வந்திருக்கலாம்.

நமக்குதான் நாக்குல சனி இருந்து விளையாடுமே! அவர்கிட்ட இந்த நீளமான பக்கத்தை மட்டும் சரியாக்கிடுங்கன்னு சொன்னேன். அவருக்கு என்ன புரிஞ்சுதோ என் முடியை தோள் பட்டைக்கு மேல் வெட்டி குட்டையாக்கிட்டார். அத்தோட நிறுத்தியிருந்தால் கூட ஸ்டைலா பாப் கட்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சிருப்பேன்.

ஆனா அவரு பின்புறம் உட்பக்கமாக இருக்கும் முடியை மிகவும் குட்டையாக்கி விட்டார்.பொதுவாக இங்கே மக்கள் முடியின் அடர்த்தியை குறைக்க இப்படி உட்புறம் வெட்டி விடுவார்கள். அதெல்லாம் முடி அடர்த்தியாக இருக்கறவங்களுக்கு. எனக்கு இருக்கறதே கொஞ்சூண்டு முடி அதை நீளமா வளர்த்தா நல்லாருக்காதேன்னுதான் என் நீள கூந்தலை நான் தோள் பட்டைக்கு கொஞ்சம் கீழ் வரை மட்டுமே வைத்திருப்பேன். இதுல அவரு இப்படி செய்ததும் எனக்கு அழுகையே வந்திடுச்சு.

நல்லா திட்டுட்டு வந்துட்டேன். நான் அடுத்த முறை போனபோது அந்த ஆளை வேலையிலிருந்தே தூக்கியிருந்தார்கள். எத்தனை பேருக்கு இப்படி செய்தாரோ யாருக்குத் தெரியும்.

அப்புறம் என்ன முடி வளரும் வரை க்ளிப் வைத்து கொண்டை போல் போட்டு சமாளித்தேன் :(. அதுவும் நல்லாத்தான் இருந்திச்சு :))

இப்போ எனக்கு வழக்கமாக முடிவெட்டுபவரைத் தவிர வேறு யார் இருந்தாலும் என் தலையை கொடுப்பதில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அடக் கடவுளே, நம்ம தலையின் தலைக்கு இப்படியெல்லாம் சோதனை வந்துச்சா!

தல, இனிமே இப்படியெல்லாம் தலையைக் கொடுக்காதீங்க!

சென்னைக்கு வந்த புதுசுல, வடபழனியில் இருக்கும் பிரபலமான பியூட்டி பார்லருக்குப் போனோம். எனக்கும் என் மகளுக்கும் ஃபேசியல் செய்துக்கலாம்னு. நான் எப்பவுமே பட்ஜெட் பேர்வழி. எவ்வளவு ஆகும்னு கேட்டேன். ஹோட்டல் மெனு கார்ட் மாதிரி ஒரு பொஸ்தகத்தை(!) நீட்டி, நீங்களே பாத்து செலக்ட் பண்ணுங்கன்னு சொன்னாங்க. நானும் அதில் இருந்ததில் சிம்பிளான ஒரு ஃபேஷியல் செலக்ட் பண்ணினேன். என் கணக்குப்படி 1200 ரூபாய் வரும்னு தோணிச்சு. டாக்ஸ் எக்ஸ்ட்ரா அப்படின்னாங்க. சரி, மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னொரு 200 ரூபாய் வரும் அவ்வளவுதானேன்னு சரின்னுட்டேன். முடிச்சதுக்கப்புறம் 2300 ரூபாய்கிட்ட பில் கொடுத்தாங்க. எனக்கு மயக்கம் வராத குறை! என்னன்னு கேட்டா, முகத்துக்கு ஃபேஷியல் தனி சார்ஜ், கழுத்துக்கு தனி சார்ஜ்னு சொன்னாங்களே பாக்கணும்!!! ஃபேஷியல் செய்யறப்ப அந்தப் பொண்ணு கழுத்துக்கும் செய்து விடவான்னு கேட்டப்ப, நான் தலையை ஆட்டினது தப்பு:(:(

ஆகையால், மக்களே, கழுத்து வேற, முகம் வேற என்ற தெளிவு வரணும்னா, தயவு செய்து பியூட்டி பார்லர் போய்ட்டு வாங்க!!

அன்புடன்

சீதாலஷ்மி

லாவண்யா... தூக்கம் வரலங்க... அதான் சுத்திட்டு இருந்தேன் ;)

கவிசிவா... இத்தனை சோகமா??? ஐப்ரோவும் போச்சு, முடியும் பொச்சா?? எனக்கு தலையில் கத்தி பட்ட அனுபவம் இருக்கு... இருங்க வந்து சொல்றேன். ஆனாலும் உங்க அளவுக்கு நான் வாய் விட்டுலாம் மாட்டலயே ;) ஹிஹிஹீ.

சீதாலஷ்மி... இது சென்னை... நீங்க மறந்துட்டு மதுரை நினைவில் சுத்திகிட்டு இருந்தா எப்படி??? நான் எங்க அம்மாவை கூட்டிட்டு போனா எப்பவுமே பில் அமௌண்ட் சொல்ல மாட்டேன்... சொன்னா அவங்களுக்கு மயக்கம் வந்துட கூடாதில்லை :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தோழீஸ்... உண்மையிலேயே பூட்டி பார்லரால பல நல்ல பலன்களை அடைந்தாலும் ஒருசில கெட்ட சம்பவங்கள் மறக்க முடியாததாகிறது... என்னதான் நாம ரெகுலர் கஸ்டமராக இருந்தாலும் என்னைக்காவது இந்த ட்ரெய்னீஸ் கிட்ட மாட்டுனா ரொம்ப கஷ்டம் தான்.
என்னுடைய புருவம் ரொம்ப அடர்த்தியா இருக்கும். எனவே கொஞ்சம் போல லைட்டா திக்கா இருக்கிற மாதிரி வைக்கச்சொல்லுவேன். ஆனா எங்க வீட்டு விசேஷத்துக்கு போறதுக்காக எடுத்தப்ப ரொம்ப ரொம்ப மெல்லிசா எடுத்துட்டாங்க.

இன்னொரு பக்கம் கொஞ்சமா கரெக்ட் பண்ணலாம்" இந்த டயலாக்கை 3,4 முறை சொல்லிட்டு அப்புறமா "இதுக்கு மேல எடுத்தா புருவமே இருக்காது" என்ற அளவில் எடுத்து விட்டார்கள்.
அதுல வேற "இது தான் சூபரா இருக்கு" என்ற ஆறுதல் கமென்ட் சொல்லி நம்மளையும் நம்பவச்சு அனுப்புனாங்க....
அந்த விசேஷத்தன்னைக்கு என்னிடம் எல்லோரும் "எப்படி இருக்கே?" "புருவ்த்தை ஏன் இப்படி ஆக்கிட்டே?" என்று துக்கம் விசாரிப்பது போல விசாரித்ததை நினைசாலே கஷ்டமா இருக்கு.

அதிலிருந்து எவ்வ்ளோ கூட்டம் இருந்தாலும் நாம ரெகுலரா எடுக்கறவங்க கிட்டேயே அவங்க எப்ப fபிரீயா இருக்காங்கனு கேட்டுட்டுப் போய் தான் த்ரெட்டிங் செய்துகொள்கிறேன்...
கொஞ்சம் போல புருவத்தின் அளவும் அமைப்பும் மாறிடிச்சுனா நம்ம முகத்துக்குண்டான அடையாளமே மாறிப்போயிடுதல்லவா...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

நம்ம குட்டிதலை கவிசிவாவின் ஹேர்ஸ்டைல் தான் நானும் எப்பவும் பண்றது. லேயர்ஸ் வைத்து கட் பண்ணூவேன். கழுத்துக்கு கொஞ்சம் கீழ நிக்கிற மாதிரி... ஏன்னா எனக்கு கழுத்து உயரம் அதிகம், கழுத்தை மறைக்கலன்னா ஆளே ரொம்ப குச்சியா உயரமா தெரிவேன்.. கூடவே ரொம்ப கொஞ்சம் தான் முடி, அடர்த்தி இல்லை, அதனால் லேயர்ஸ் வைத்து செட் செய்வது வழக்கம். எப்பவும் வேலச்சேரியில் இருக்கும் பிரபலமான பியூட்டி பார்லருக்கு தான் போவேன்... சீதாலஷ்மி உங்ககிட்ட முன்னவே சொல்லிருக்கேனே... அங்க தான். சமீபத்தில் (1 வாரம் முன்) அதே இடத்தில் முடியை வெட்ட போனேன்... என்னவர் இந்த வாரம் வராரே, கொஞ்சம் நல்லா ஆவோம், பக்கி மாதிரி இருக்கோமேன்னு... வழக்கமா வெட்டு ஆள் இல்லை, புதுசா ஒரு பாட்டி இருந்தது, வேறு ஊர் பாட்டி, “புதுசா”னு உஷாரா கேட்டேன், அந்தம்மா “28 வருஷமா இதே ப்ராண்டு வேறு ப்ரான்ச்ல வேலை பார்த்தேன்”னு சொல்லுச்சு... பரவாயில்லையே வழக்கமா வெட்டும் பையனை விட அனுபவம் உள்ள ஆளுன்னு கவிசிவா சொன்ன அதே ஸ்டைலை தான் சொன்னேன்... வெண்னைக்கு புரியல போல... முகத்துக்கு நேர கண்ணாடிக்கும் எனக்கு நடுவில் வந்து நின்றது, சரின்னு நான் கண்ணை மூடிகிட்டேன்... வெட்டி முடிச்சுட்டு பாருங்கனு காட்டுச்சா... அழுவாச்சியா வந்துருச்சு.... நான் முன்ன இருந்ததே தேவல... இப்போ இன்னும் பக்கி மாதிரி ஆக்கிடுச்சேன்னு... லேயர்ஸ் 40%’ல கட் கொடுத்து இருந்தது. அதனால் செட் பண்ண முடியல. முகத்தில் கண்ணில் வந்து விழுது முடி, தள்ளவும் முடியல க்ளிப்பும் போட முடியல. அது அப்படியே கோதி விட்டு கொஞ்சம் முடி ஆய்லியா இருக்கு, அதான் பார்க்க இப்படி ரிஉக்கு, நல்லா வாஷ் பண்ணூங்க சூப்பரா இருக்கும்னுச்சு... சரின்னு தலையை ஆட்டிட்டு பல்லை கடிச்சுகிட்டு அதுக்கு 900 ரூபாய் அழுதுட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் அம்மா கேட்டாங்க... “இது தான் சொந்த காசுல சூனியம் வைக்கிறதா பாப்பா???”னு. இது கூட பரவாயில்லை... தங்கச்சி சொல்றா... “101 டால்மேஷியன்ல வர்ற வில்லி மாதிரியே இருக்க... கிட்ட வராத என் பிள்ளை பயப்புடுது”னு ;(

என்னவர் வந்தா “நீ யாருன்னு??” கேட்பாரோ??? ஒரே பீலிங்கா இருக்குப்பா... என் முகத்தை என்னாலயே கண்ணாடியில் பார்க்க முடியல. ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//துக்கம் விசாரிப்பது போல விசாரித்ததை நினைசாலே கஷ்டமா இருக்கு. // - படிச்சு எனக்கே வருத்தமா போச்சு... என் தலைக்கு எல்லாரும் இப்போ அப்படி தானே கேக்கறாங்க... புரியுது!!! ;(

எல்லாருக்கும் இந்த புருவம் பெரிய பிரெச்சனை போல... நான் இதுவரை எடுத்தது இல்லை... ஒரே முறை கல்யாணத்தின் போது எடுக்க சொன்னாங்க முடியாது எனக்கு வலிக்கும்னு பயமா இருக்குன்னு சொல்லியும் விடல... “ஃபேஷியல் அது இதுன்னு ஏதும் பண்ணல, அட்லீஸ்ட் புருவம் மட்டுமாது பண்ணீக்கோ”னு கெஞ்சினதால் சரின்னு காட்டிட்டேன்... எடுத்து முடிச்ச 15 நிமிசத்துல பியூட்டி பார்லர்லயே வீங்கி போச்சு.. அந்தம்மா பார்த்து பயந்துடுச்சு, என்னங்க இவ்வளவு சென்ஸிடிவ் ஸ்கின்னா இருக்குன்னு. இதுல மெயின் காமெடி என்ன தெரியுமா?? நான் கல்யாணத்தப்போ வேலை பார்த்தேன், அதனால் கல்யாணத்துக்கு சரியா 2 நாள் முன்னாடி தான் லீவ் போட்டுட்டு வீட்டுக்கு போனேன்... புருவம் எடுத்தது இரவு நேரம், மறுநாள் மாலை ரிசெப்ஷன்... எல்லாரும் என் முகம் என்னாக போதுன்னு திகிலோட பார்த்தாங்க. நானும் திட்டி தீர்த்தேன்... இந்த பியூட்டி பார்லர் வேலையெல்லாம் வேணாம்னு சொன்னா கேட்டீங்களான்னு. ஆண்டவன் புன்னியத்தில் மருநாள் காலை சரியாயிடுச்சு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமா வனிதா. நானும் முதன்முதலில் என்னுடைய கல்யாணத்திற்க்காகதான் எடுத்தேன்... அப்ப இருந்து நான் திக்கான புருவம் தான் மெய்ன்டென் செய்தேன்... ஆனா போன மாசம் 10 ம் தேதி நடந்த என் அண்ணன் திருமணத்தின் போது மேற்சொன்ன சோகச் சம்பவம் நடந்து விட்டது... அதை விட எனக்கு செய்யப்பட்ட தலை அலங்காரத்தை பிரிக்க முடியாமல் குடும்பமே நீ நான்னு போட்டிபோட்டு கடைசியில் கத்தரிக்கோலால் கட் செய்து பிரித்ததில் சுண்டு விரல் அளவு அடர்த்தியுள்ள முடியை இழந்து விட்டேன்... இதையெல்லாம் தவிர்க்க பார்லர் ஆட்களையே பிரித்து விடலாம்ல என்று கேட்டால் அதெல்லாம் முடியாதுங்க என்று சொல்லிட்டாங்க... வனி அம்மா சொன்னது போலவே எங்க அம்மாவும் சொன்னாங்க
"நல்லெண்ணெயும் சீயக்காயும் போட்டு பார்த்து பார்த்து வளர்த்த முடியை காசு கொடுத்து தலையில் சூனியம் வச்சுகிட்ட கதையால போச்சே" என்று என்னைப் பார்த்து வருத்தப்பட்டார்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்