அறுசுவை அம்மாக்களே உதவுங்கள்

என் மகன் இட்லி, தோசை, சாம்பார், பருப்பு இவை அனைத்தும் சாப்பிட மறுக்கிறான்..
நான் அவனுக்கு white bread, ஆப்பம், பணியாரம், பொங்கல், பூரி, சப்பாத்தி கொடுக்கிறேன்..
இவை தவிர வேறு என்ன உணவு இருக்கிறது காலை மற்றும் இரவுக்கு?

உங்க மகனுக்கு எத்தனை வயசுனு முதலில் சொல்லுங்க?

/நான் அவனுக்கு white bread, ஆப்பம், பணியாரம், பொங்கல், பூரி, சப்பாத்தி கொடுக்கிறேன்/

நீங்க சொல்லியிருப்பதை பார்த்தா ஒரே மாதிரி சாப்பிட அவருக்கு பிடிக்கலைனு நினைக்கிறேன். அவருக்கு பிடிச்ச மாதிரி வெரைட்டியா குடுங்க. புட்டு, தோசை(கம்பு தோசை, ராகி தோசை, ரவா தோசை, ரோஸ்ட்), அடை, சப்பாத்தில ஸ்டப்டு, ஜாம் போட்டது,பாலக் பூரி, கேரட் பூரி, இடியாப்பம்/சந்தவை, அவல் உப்புமா, சான்விட்ச், சேமியா உப்புமா, ஊத்தாப்பம், தக்காளி தோசை,வெஜ்டபிள் தோசை,.....

அறுசுவைல குறிப்புக்கா பஞ்சம்? எத்தனை வெரைட்டி, எத்தனை விதமான குறிப்புகள் இருக்கு. எதுக்கு கவலைபடறீங்க? புதுசு புதுசா செய்து குடுங்க. சின்ன பசங்களுக்கு ஒரே மாதிரி சாப்பிட பிடிக்காது. தோசை, சப்பாத்தி அவங்களுக்கு பிடித்த மாதிரி shape ல போட்டு குடுங்க.என் பொண்ணும் சாப்பிட படுத்துவா.தோசை, பூரி , சப்பாத்தில்லாம் star, circle, moon, square, ....இப்படி ஏதாவது shape ல போட்டு குடுத்தா சமர்த்தா சாப்பிடுவா.குட்டி குட்டி தோசை செய்து தரலாம்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

என் மகனுக்கு ஒன்றரை வயது தான் ஆகிறது..
அவருக்கு சேமியா உப்புமா, ரவா உப்புமா தரலாமா?
வெஜ்டபிள் தோசை,காரட் தோசை எல்லாம் கொடுத்து பார்த்தேன்..
அவருக்கு அதுவும் பிடிக்கல..
ஒன்றரை வயது குழந்தைக்கு ஆரோக்கியமான காலை மற்றும் இரவு உணவு சொல்லுங்களேன்..

திவ்யாவே எல்லாம் லிஸ்ட் பண்ணிட்டாங்க. முடிஞ்ச வரை கம்பு, கேழ்வரகு சேருங்க. சத்தானது, சுவையானது. புட்டு, தோசை, அடை இப்படி எந்த விதமா வேணும்னாலும் கொடுங்க. உப்புமா எல்லாம் தாராளமா கொடுக்கலாம். என் மகனும் 1.5 வயது தான்... நான் 1 வயசில் இருந்தே உப்புமா கொடுக்கிறேன், அவனுக்கு பிடித்ததும் கூட. பொங்கல் கூட ஆரோக்கியமானது தான். நெய் சேருங்க. நம்ம அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதி போய் வலது கை பக்கம் பிரிவுகள் இருக்கும் பாருங்க... அதுல குழந்தைகள் உணவு இல்லன்னா சிற்றுண்டினு பாருங்க, நிறைய ஐடியா கிடைக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank u so much vanitha....

பிரெட் இது போல் உணவு கள் பிடிக்குது என்றால் ,

அதிலேயே ,வெஜ், மட்டன், சிக்கன், முட்டை என்று வித விதமா ஸ்டஃப் செய்து டோஸ்ட், சாண்ட்விச் போல் கொடுக்கலாம்.
இனிப்பு டோஸ்ட், கார டோஸ்ட்
பிட்சா பிரெட், முளை பயிறு ஸ்டஃப்டு டோஸ்ட் காரம் மற்றும் இனிப்பு அதிலேயே சீஸ் சேர்த்து ,
பொட்ட்டேட்டோ சாண்ட்விச்

என் குறிப்புகளை பாருஙக்ள் நிறைய இருக்கும்
என்ன பா இது அருசுவைக்கு வந்து கடல் போல பல உணவு வகைகள் இருக்கு தினம் ஒண்று செய்தாலே செய்துட்டே இருக்கலாமே//

Jaleelakamal

http://www.arusuvai.com/tamil/recipes/266

Jaleelakamal

குழிபணியாரம் தான் பிடிக்கும் என்றால்

கோதுமை ,மைதா,பார்லி,ஃப்ரவுன் ரைஸ், ராகி, கேரட், கீரை, முட்டை , காய்கறி, சிக்கன் கீமா, போன்ற வற்றில் குழிபணியாரங்கள் செய்து கொடுக்கலாம்

என்ன பிடிக்குதோ அதையே வித விதமா செய்து கொடுங்கள்

Jaleelakamal

மிக்க நன்றி பானு..
ஒன்றரை வயது குழந்தைக்கு வாரத்திற்கு 3 to 4 times ப்ரெட் கொடுக்கலாமா?

மேலும் சில பதிவுகள்