தேதி: May 13, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சாக்லேட்கேக் மாவு பாக்கெட் - ஒன்று (விரும்பிய ப்ராண்ட்)
முட்டை - மூன்று
எண்ணெய் (அல்லது) பட்டர் - 60 மில்லி
தண்ணீர் - கேக் பாக்கெட்டில் போட்டிருக்கும் அளவு
ஐஸிங் செய்ய:
விப்பிங் கிரீம் பாக்கெட் - இரண்டு
குளிர்ந்த பால் - 300 மில்லி
வெனிலா பவுடர் - இரண்டு தேக்கரண்டி
கோகோ சுகர் - மூன்று தேக்கரண்டி
அலங்கரிக்க:
கலர் ஜெம்ஸ் - ஒரு பாக்கெட்
ஸ்ட்ராபெர்ரி - இரண்டு
கேக் டெக்கரேசன் ஸ்டிக்ஸ் - ஒரு சிறிய டப்பா
கேக் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கேக் பவுடர் போட்டு பின் முட்டைகளை உடைத்து ஊற்றி எண்ணெய் தண்ணீர் அடுத்தடுத்து போட்டு நன்கு பீட்டரால் அடிக்கவும்.

இந்த கலவையை ட்ரேயில் கொட்டி அவனில் 200 டிகிரியில் பேக் செய்து எடுத்து கேக்கை நன்கு ஆற விடவும்.

ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த பாலை ஊற்றி விப்பிங் கிரீம் பவுடரை போடவும்.

அதில் வெனிலா பவுடர் சேர்த்து 4 நிமிடங்கள் பீட்டரால் அடித்தால் கிரீம் போல் வெண்மையாக வரும்.

பின்னர் ஆறிய கேக்கின் மேல் இந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முழுவதும் பூசி எடுக்கவும்.

அடுத்து சிறிது சிறிதாக கலர் ஸ்டிக்ஸை வட்ட வடிவில் கேக்கை சுற்றிய பகுதியிலும் போடவும்.

ஸ்டாபெர்ரியை முழுதும் வெட்டாமல் வட்டமாக சாய்த்தது போல் வெட்டவும்.

அடுத்து வெட்டிய ஸ்ட்ராபெர்ரியை ஒரு பக்கமாக வைக்கவும். ஜெம்ஸை கொண்டு சுற்றிலும் வேண்டிய இடத்தில் அலங்கரிக்கவும்.

சாக்லெட் கேக் ரெடி. சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவர்..

Comments
ருக்சனா
சூப்பர்!!! அசத்திட்டீங்க... பார்த்ததுமே சாப்பிட ஆசை வந்துட்டுது. வாழ்த்துக்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ருக்ஸ்
ருக்ஸ் எப்படி இருக்கீங்க ?
சூப்பர் போங்க பார்க்கும்போதே சாப்பிட தூண்டுது .......... வாழ்த்துக்கள்
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
its looking nice
its looking nice
Supera iruku pa.
Supera iruku pa.
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
சாக்லெட் கேக்
வெகு அழகாக இருக்கிறது.
- இமா க்றிஸ்
சாக்லெட் கேக்
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. எனக்கும் செய்யவேண்டும் என்று ஆசையா இருக்கு. ஆனால் நான் செய்தால் மட்டும் சொதப்பல் ஆய்டுத்து. உங்கள் குறிப்பு ரொம்ப நல்ல இருக்கு. வாழ்த்துக்கள்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
hi
sper dish...........
ஐயோ கொள்ளை அழகுங்க அப்பிடியே
ஐயோ கொள்ளை அழகுங்க அப்பிடியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு SUPER BY ELAYA.G
ruksana
அடுத்த மாசம் என் மகளின் பிறந்த நாள் வருது,இன்ஷா அல்லாஹ் உங்க கேக் செய்யலாம் என்று இருக்கேன்,எனக்கு சில சந்தேகம் இருக்கு,அதை தெளிவு படுத்துங்க ப்ளீஸ்,விப்பிங் கிரீம் ப்ரான்ஸில் எந்த பேரில் இருக்கும்னு எனக்கு தெரியல,ப்ரான்ஸில் இருக்கும் யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா!அப்புறம் கொக்கோ சுகர்னா என்னன்னு தெரியலப்பா............தெளிவுப் படுத்துங்க!
Eat healthy