பட்டிமன்றம்-41-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் அதிகம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?

பட்டிமன்றம்-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?

இந்த தலைப்பை தேர்ந்தெடுத்த திரு கதா கல்பனா அவர்களுக்கு நன்றி.
பட்டிமன்றத்தின் விதிமுறைகள்:
1.மதம் ஜாதிபற்றி பேசுதல் கூடாது.
2..யாரையும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ தாக்கி பேசுதல் கூடாது.
3.நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
4.அதிகபட்சம் தமிழில் டைப் செய்யவும்.
5.கண்டிப்பாக இங்கே அரட்டை தடை செய்யப்பட்டுள்ளது.
6.எதிரணியே இல்லாத பட்சத்தில் முடிவு உடன் மற்ற அணிக்கு சாதகமாக அறிவிக்கப்படும்
7.வெற்றி பெற்ற சிறந்த பேட்சாளர் இந்தியாவிற்குள் இருந்தால் என் கவிதை புத்தகம் ஒன்று இலவசமாக அனுப்பி வைக்கப்படும்

8.சிறப்பாக வாதாடும் நபருக்கு வுமன் ஆஃப் பட்டிமன்றம் அல்லது சிறப்பாக வாதாடும் ஆணிற்கு மேன் ஆஃப் பட்டிமன்றம் விருதும் வழங்கப்ப்படும்.
(உபயம்:ஆமினா)

இதோஉங்கள் வாதங்களை தொடருங்கள்.

சூப்பர் ஷேக். நீங்க வந்ததற்கு ரொம்ப நன்றி. சூப்பர் தலைப்பு.. விறுவிறுப்பான தலைப்பு.. சண்டை நிச்சயம். நீங்க நடத்தி பார்த்து நாளாச்சு. அணியை தேர்ந்தெடுத்துட்டு வருகிறேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நல்லா யோசிச்சு பாத்தாச்சு. கண்டிப்பா பெண்களுக்கு தான் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. வாதத்தோடு வெரேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா மேம்.வாங்க........யொசிச்சு பார்த்து சொல்றிங்களா?ரொம்ப அதால பாதிக்கபட்ட மாதுரி தெரியுது.
பெண்களே என்ற அணியின் தலைவி திரு ரம்யா மேடம் அவர்கள் தனது வாதங்களோடு இதோ வந்து கொண்டுடிருக்கிறார்..பராக்!பராக்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நடுவராக வந்திருக்கும் ஷேக் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.......
என்ன ஒரு பொருத்தம் நான் நடுவராக வந்திருந்தாலும் இந்த தலைப்பைத்தான் எடுத்திருப்பேன்.......
நானும் யோசிச்சாச்சு,
சுதந்திரம் பறிக்கப்படுவது ஆண்களுக்கே..........வாதங்களுடன் வருகிறேன்............

வாங்க ரேணுகா.என்னடா சிங்கத்தை காணோம்னு கவலை பட்டேன்.வ்ந்துட்டிங்க...விஜயகாந்த் போல் புள்ளி விபரங்களோடு உங்கள் வாதத்தை தொடருங்கள்.(நீங்களும் நினச்சிங்களாCஇதுதான் கோ இன்ஸிடன்ட் என சொல்லுவார்களோ?)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆமாம் நடுவரே......
எப்படியோ பிடித்த தலைப்பு பேசி தெளிவானால் சரிதான்..
நடுவரே...,
திருமணத்திற்கு பின்பு சுதந்திரம் பறிகொடுப்பது.....பறிதாபமான ஆண்கள்தான்....இதில் மாற்றமே இல்லை மேலோட்டமாக வேண்டுமானால் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதுபோல தோற்றம் தரலாம். எதிர் வாதங்கள் இன்னும் வரவில்லையே ,எப்படி என் வாதங்களை அடுக்குவது?

ஷேக்... அழகான ஒரு தலைப்போடு பட்டியை துவக்கியமைக்கு மிக்க நன்றி. நிறைய வாதாங்கள் இருக்கும் என் நம்புகிறேன். பல நாட்களுக்கு பின் பட்டியில் நீங்கள் தலைமை என்பது பட்டிக்கு ஒரு சிறப்பு. இனி வாதத்துக்கு வரட்டுமா???

நடுவரே... கல்யாணம் என்பது ஒரு பெண்ணோட வாழ்க்கையை அப்படியே தலை கீழா மாத்தக்கூடியது. அவங்க சுதந்திரம் சுத்தமா பறிபோகிறது திருமணத்துக்கு பின் தான்.

1. கல்யாணம் ஆகும் வரை தோழிகள் பலர் இருப்பாங்க... நண்பர்களும் பலர் இருப்பாங்க... ஆனா கல்யாணம் ஆனதும் கணவரோட நண்பர்கள் வீட்டுக்கு வரும் அளவுக்கு சுதந்திரமா மனைவியின் நண்பர்கள் வர இயலாது. கேட்டா... ஊர் என்ன சொல்லும், பொண்ணா லட்சனமா இரு, அவருக்கு பிடிக்குமா, தேவையில்லாம பிரெச்சனை வேண்டாம் இப்படி 1000 காரணம் சொல்வாங்க. இங்கயே முதல் சுதந்திரம் போச்சா???

2. கல்யாணம் ஆகும் முன் அட்லீஸ்ட் வருஷத்துல 1 முறையாவது ஆபீஸ் டூர், தோழிகளோட டூர், சினிமா எதாவது இருந்திருக்கும்... அப்பா அம்மாவை கஷ்டப்பட்டு சமாதானம் பண்ணி போவாங்க... ஆனா கல்யாணத்துக்கு பின் ஆண் வேண்டுமானால் பல பிசினஸ் டூர் போறாங்க... பெண்களுக்கு அந்த சுதந்திரம் போச்சே!!!

3. அவ்வளவு ஏங்க... பெண்கள் வீட்டில் இருந்தவரி டிவி ரிமோட் கையில் இருக்கும்... கல்யாணம் ஆனதும் அவர் வைக்கிற சேனல் தான் பார்க்கணும்.

4. அவர் வாங்கி தந்தா தான் புடவையோ, நகையோ... அவங்களே சம்பாதிச்சா கூடா அவர் விருப்பம் சொல்லாமல் தனக்கு வேண்டியதை வாங்க பலருக்கு அனுமதி இல்லை.

5. சமையல்... எல்லா கல்யாணம் ஆன பெண்களும் ஒத்துக்குவாங்க... கணவருக்கு குழந்தைகளூக்கும் பிடிச்ச சமையல் தான் சமைக்கிறாங்கன்னு. அவங்களுக்குன்னு ஒரு விருப்பமே இல்லாம போயிடுது... சில இடங்களில் இது சொந்த விருப்பம், பல இடங்களில் இது கட்டாயம்.

6. ஏங்க... கணவர் விரும்பினா அவர் விருப்பம் போல மனைவியை அழைக்கலாம்... ஆனா மனைவி??? கனவர் விருப்பத்தோட் சேர்த்து அவங்க வீட்டு ஆட்கள் விருப்பத்தையும் பார்த்து பயந்து பயந்து தானே கணவரை அழைக்கிறாங்க??? தன் கணவரை தன் விருப்பம் போல் அழைக்கும் உரிமை கூட இல்லையே பெண்ணுக்கு??? எங்க இருக்கு சுதந்திரம்??

7. மனசாட்சியை கேளுங்க... எத்தனை பெண்கள் அவங்களுக்கு பிடிச்ச ஆடை போடுறாங்க??? எல்லாம் கணவர் விருப்பம் தான். ஆனா எத்தனை பெண்கள் அவங்க கணவர் இப்படி தான் ஆடை போடனும்னு சொல்றாங்க?? சொன்னா யார் கேக்குறாங்க?

8.பிள்ளைகளுக்கு பேர் வைக்கிறதுல இருந்து வீட்டு உபயோக பொருள் வரை எல்லாம் “அவர் விருப்பம்”... அப்பறம் என்னங்க பொண்ணுங்களுக்கு சுதந்திரம். தான் பெற்ற பிள்ளை பெயர் வைக்கும், தேர்வு செய்யும் உரிமை கூட பல இடங்களில் மறுக்கப்படுது.

9. இன்னைக்கு அறுசுவை வர கூட் அகனவர் அனுமதி இருக்கனும்... அவர் இனி நீ அந்த பக்கம் போக கூடாது, குறிப்பு அனுப்ப கூடாதுன்னு சொன்னா, எத்தனை பேர் நம்ம அறுசுவைக்கு வருவாங்கன்னு நினைக்கிறீங்க??? பட்டி ஈ தான் ஓட்டனும்... ஏதோ அவங்க விடும் வரை தான் எங்க சந்தோஷம் எல்லாம்.

10. இப்படி னகம் வளர்ப்பது, தலி முடி வெட்டுறதுல இருந்து,பிள்ளைகள் திருமணம் வரை எல்லாம் கணவர் தலையீடு, அவர் சுயேட்சையா முடிவு பண்ணும்போது எங்க இருந்துங்க பெண்கள் சுதந்திரமா இருக்காங்கன்னு பொய் சொல்றது???

ஆண்கள் அப்படியே தான் இருக்காங்க.... பொண்டாட்டி கெட்ட பழக்கத்துக்கு தடை போட்டா அவங்களை ஒரு போடு போட்டுட்டு செய்யுறது, இல்ல அவங்களுக்கு தெரியாம செய்யுரது. நண்பர்கள் தான் முக்கியம்னு ஊரை சுத்துறது. இது இருந்தா தான் சாபிடுவேன், இது சரி இல்லை அது சரி இல்லன்னு சண்டை போடுறது... போங்க... ஏன் இதுக்கு ஒரு வாதம்???

கல்யாணம் ஆனது அம்மா வீட்டுக்கு போக கணவர் அனுமதி வேணும் பெண்ணுக்கு... ஆனா ஆண்கள் நிம்மதியா அம்மா கூடவே இருக்காங்க.. அங்கையே வேட்டு வைச்சுட்டாங்க. பெற்றவர்களை உடன் பிறப்புகளையே கணவர் விரும்பினால் தான் காண இயலும். வாதமே வேண்டாம் தீர்ப்பை சொல்லுங்க நாட்டாமை. ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் ரேணு.இன்னும் யாரையும் காணவில்லையே?ஒன்று சொல்லவா?என் திருமணத்திற்கு முன்பு சிகரட் அடிக்கும் பழக்கம் இருந்தது.மனைவி வந்தபின் அது பறிபோனது.ஆகையால் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நடுவரே
உங்களின் அனுபவம் இரண்டாவது.....

முதல் என்ன தெரியும? திருமணம் நடந்த அடுத்த சில மணிகளிலேயே அமையும்..ஆமாம், சாப்பிடப் போவது,வாழ்த்து பெறும் போது மனைவிக்குத் தெரியாத அழகான உறவுக்காரப் பெண்,அந்த திருமண நிகழ்விற்குப் பின் மனைவியை விட்டு இங்கு அங்கு நகரக்கூடாதுன்னு சொல்வாங்க பாருங்க அங்கயே அவுட் நம்ம ஆண்கள்.........மீண்டும் வருவேன்.........

நடுவர் அவர்களே நல்ல தலைப்பை தேர்தெடுத்து இருக்கீங்க. வாழ்த்துக்கள். என்னை பொறுத்தவரை இரண்டு பேரின் சுதந்திரமே பறிபோகின்றது என்று தான் நான் சொல்லுவேன். ஆனால் இங்கு அப்படி பேச முடியாது. நான் ஆழ்ந்து யோசித்துவிட்டு வந்து யார் அணி என்று சொல்கிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்