பட்டிமன்றம்-41-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் அதிகம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?

பட்டிமன்றம்-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?

இந்த தலைப்பை தேர்ந்தெடுத்த திரு கதா கல்பனா அவர்களுக்கு நன்றி.
பட்டிமன்றத்தின் விதிமுறைகள்:
1.மதம் ஜாதிபற்றி பேசுதல் கூடாது.
2..யாரையும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ தாக்கி பேசுதல் கூடாது.
3.நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
4.அதிகபட்சம் தமிழில் டைப் செய்யவும்.
5.கண்டிப்பாக இங்கே அரட்டை தடை செய்யப்பட்டுள்ளது.
6.எதிரணியே இல்லாத பட்சத்தில் முடிவு உடன் மற்ற அணிக்கு சாதகமாக அறிவிக்கப்படும்
7.வெற்றி பெற்ற சிறந்த பேட்சாளர் இந்தியாவிற்குள் இருந்தால் என் கவிதை புத்தகம் ஒன்று இலவசமாக அனுப்பி வைக்கப்படும்

8.சிறப்பாக வாதாடும் நபருக்கு வுமன் ஆஃப் பட்டிமன்றம் அல்லது சிறப்பாக வாதாடும் ஆணிற்கு மேன் ஆஃப் பட்டிமன்றம் விருதும் வழங்கப்ப்படும்.
(உபயம்:ஆமினா)

இதோஉங்கள் வாதங்களை தொடருங்கள்.

சரியான நேரத்தில் பட்டியை தொடங்கிய நடுவர் அவர்களுக்கு மிக்க நன்றி.

அருமையான தலைப்பு. கொஞ்சம் கூட யோசிக்க வேண்டாம், கல்யாணத்துக்கு அப்பறம் சுதந்திரம் பறிக்க/பிடுங்க படுவது பெண்ணிடமே.

1 . கல்யாணம் என்பது ஆண்களுக்கு சில மாற்றம் மட்டுமே தரும், பெண்களுக்கு அப்படி இல்லை. பல பல மாற்றம் தந்து விடும். இன்றைய சூழலில் எந்த திருமணமான பெண்ணும், முழு சுதந்திரத்துடன் இருப்பது கிடையாது
2 . பொண்ணுக அம்மா வீடுன்னா லீவ் நாள்ல ஜாலி ஹ 10 மணி வரைக்கும் தூங்க முடியும், யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. இதே கல்யாணம் ஆகி தூங்குநோம்ன்னு வைங்க, வளதுன்ன லச்சனத்த பாரு - இப்படி தான் எல்லாரும் பேசுவாங்க. ஆனால் ஆண்கள் 10 என்ன 2 மணி வரைக்குமே தூங்குனாலும் கேக்க ஆள் இல்ல. கேட்டா, புள்ள வேலை செஞ்ச களைப்புல தூங்கரன்னு சொல்லுவாங்க. பொண்ணுக மட்டும் வேலையே செய்யறது இல்லையா???
3 . திருமணத்துக்கு முன்புன்னா, சும்மா பிரண்ட்ஸ் கூட ஷாப்பிங் போகும் போது, ஏதாவது டிரஸ் பிடித்து இருந்தாலே நாம வாங்கலாம். இதே கல்யாணம் ஆனா பின்னாடி வாங்குனா, ???? நாம டிரஸ் செலக்ட் பண்ண எவளோ நேரம் எடுத்தோமோ, அதை விட ஒரு மடங்கு அதிக நேரம் எடுத்து திட்டு வாங்கணும்.
4 . குறிப்பா சமையல் விஷியத்துல, அடடா சொல்லிமாளாது. அம்மா, அப்பா நாம என்ன பண்ணுனாலும் (நல்லா இல்லைனாலும் )நல்லா இருக்குடா, அப்படின்னு தட்டி குடுத்து திருத்துவாங்க , கல்யாணம் ஆனா அப்படியா? அது தப்பு, இது தப்புன்னு குறை சொல்லாத நாளே இருக்காது

கல்யாணம் முடிவு பண்ணினாலே, நம்ம சுதந்திரம் நமக்கே தெரியாம, நம்மளை விட்டு கொஞ்சம் கொஞ்சமா போய்டும்,
இன்னும் பல வாதங்களுடன் வருகிறேன்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நானும் வந்துட்டேன் பா.கண்ணமூடிட்டு சொல்லலாம்.பெண்களுக்குதான்
சுதந்திரம் பறிபோகுது.

திருமணம் முடிந்ததும் சுதந்திரம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?

கண்டிப்பாக இருவரின் சுதந்திரமும் தான் பறிக்கப்படுகிறது.
அதனால் பட்டியின் தலைப்பு

”திருமணம் முடிந்ததும் சுதந்திரம் அதிகம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா? பெண்களுக்கா?”

என்று இருந்தால் சரியாக இருக்குமோ?

என் கட்சி பெண்கள் கட்சிதான்.

வாதங்களுடன் வருகிறேன்.
அன்புடன்
ஜெமாமி

வாருங்கள் பூங்காற்றுநீங்கள் பெயருக்கு ஏற்றது போல் வரவில்லைபோல் தெரிகிறது.புயலாய் வந்த உங்களின் வேகம் கண்டூ எதிரணி கலங்கிபோய் நிற்க்கிறது.வீசுங்கள் உங்கள் சூறாவளி வாதங்களை...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வாருங்கள் சுகந்தி,குட்டியமா!உங்களை பட்டிமன்றத்திற்கு அன்போடு அழைக்கிறேன்.
சுகந்தியும் ஆணித்தரமா அதையேத்தான் சொல்றாங்க.வேல செய்து களைத்து போய் சற்று நேரம் நிம்மதியாய் தூங்க கூட முடியுறதில்லனு சொல்றாங்க.என்ன கொடும சார் இது?தூங்ககூட விடுவதில்லையா இந்த ஆண்கள்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வாங்க ஜயந்தி மாமி..உங்களை இப்பட்டியில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி!நீங்களும் பெண் அணிதானா?அட போங்க மாமி..பெண் அணிக்கு பலம் கூடிட்டே போகுதே!விரைவில் வாதங்களோடு வாருங்கள் மாமி! உங்கள் விருப்பபடியே தலைப்பை மாற்றியாச்சு.ஆனாலும் இதற்கெல்லாம் பயந்தவர்களும்,சளைத்தவர்களும் இல்லை ரேணுவும்,பூங்காற்றும்!அப்படித்தானே!வாங்க செமத்தியா எதிரணிக்கு பதிலடி கொடுங்கப்பா.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்னுடைய தரப்பு ஆண்களுக்கே! நிச்சயம் கல்யாணமாகி பெண்களும் கஷ்டபடுகிறார்கள். ஆனால் குடும்பம் என்னும் ஒரு சுழலில் சிக்கி ஆண்கள் படும் பாடு கொஞ்சம் நெஞ்சம் கிடையாது நடுவரே! அது என்னவென்று வந்து சொல்கிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கல்யானத்துக்கு பட்டு நகைன்னு தேடிவாங்கிட்டு அப்புறம் அது மட்டும் தான் போடச்சொல்றாங்கன்னு சொன்னா என்ன அர்த்தம் நாங்க இருக்கிற நாலு வகையில் எதாவது ஒன்னு தன் போடமுடியும்.
மனைவி குழந்தைக்காக எத்தனை ஆண்கள் வெளிநாட்டில் கஷ்டப்படறாங்க என் பயனைப்பார்து ஒருத்தர் எத்தனை மாதம்ன்னு கேட்டார் நான் 7மாதம் சொன்னேன் அவர் என் பயனும் இபோ அப்படித்தான் இருப்பான் சொன்னார் எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது
ஏங்க பகல் முழுதும் நீங்க பாக்கிரேங்க இரவுதான் அவங்க பார்க்கிராங்க எத்தனை பெண்கள் கல்யாண்த்துக்கு அப்புறம் நாகரிக ஆடை அணிகிறார்கள்
கல்யாணம் ஆனது அம்மா வீட்டுக்கு போக மனைவிஅனுமதி வேணும் எத்தனை ஆண்கள் அம்மா கூட நிம்மதியா இருக்காங்க
இன்னும் வருவேன்

வாழ்க வளமுடன்

ரேவா மற்றும் பிரியாவை ஆண்களே அணிக்கு வரவேற்கிறேன்.......

இதோ ரேவதி ஆண்கள் அணிக்கு வந்துவிட்டார் அ9இக்கு கூடுதல் பலம் வந்தாகிவிட்டது..இனி போர்களம்தான்..ரேவதி ஆண்கள் படும் கஸ்டம் சொல்லிமாளது என்கிறார்..இதில்வேறு ரேணுவும்,பூங்காற்றும் அணுகுண்டு வாதங்களோடு போருக்கு தயார் நிலையில் இருக்கிறார்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்