பட்டிமன்ற தலைப்புகள் - 2

இங்கே யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு தோன்றும் தலைப்பை பதிவிடலாம். ஒருவரே எத்தனை தலைப்புகள் வேண்டுமானலும் தரலாம்.

பட்டிமன்றத்துக்கு நடுவராக வருபவர்கள் இங்கே உள்ள தலைப்புகளில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும். அந்த தலைப்பு நிச்சயமாக அவர்களே இங்கே கொடுத்ததாக இருக்க கூடாது.

பழைய பட்டிமன்ற தலைப்புகள் இழை காண, அதிலிருந்து தலைப்புகள் தேர்வு செய்ய...

http://www.arusuvai.com/tamil/node/10388

நன்றி இந்திரா கணேசன்...

மற்றவர்களும், இன்னும் பல நல்ல சுவாரஸ்யமான, விவாதிக்க கூடிய தலைப்புகளை சொல்லுங்கள்...

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

1.எத்தனை முறை ஏமாந்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் போலிகளிடம் (போலி ஆன்மீகவாதிகள், போலி ஃபைனான்ஸ் நிறுவனங்கள், போலி முதலீட்டு திட்டங்கள்,....) ஏமாற காரணம் என்ன? அறியாமையா? பேராசையா?
2.வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப தயக்கம் காட்டுவது ஏன்? வெளிநாடுகளில் கிடைக்கும் வசதிவாய்ப்புகளா? உறவுப் பிரச்சினைகளாலா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எது சிறந்தது? சொந்தத்தில் திருமணம் செய்வதா? அன்னியத்தில் திருமணம் செய்வதா ?

அன்புடன் அபி

நன்றி கவிசிவா,அபிராமி...

மற்றவர்களும், யோசிக்க நேரம் கிடைத்தால், இன்னும் கொஞ்சம் தலைப்புகளை சொல்லுங்கள்:)

நன்றி:)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வாழ்வின் நிகழ்வுகளை மாற்றங்களை ஏன் என்று ஆராய்வது நல்லதா இல்லை என்ன என்று புரிந்துகொள்ள முயலுவது நல்லதா? (Analysis or understanding which is best?.. )

நன்றி சாந்தினி... எனக்கு தோன்றிய சில தலைப்புகள் :)

தமிழில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பாகும் 24 மணி நேர சிறுவர் தொலைகாட்சிகளால் நன்மையா தீமையா?

சச்சின் ஒய்வு பெற வேண்டுமா இல்லையா?

பெண்ணுக்கு சமையல் என்பது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயமா இல்லையா?

பிரிவோம் சிந்திப்போம் முடிவு சரியா இல்லையா?

சரவணன் மீனாட்சி திருமணம் நடக்குமா நடக்காதா?

பிரச்சனையின் போது, பொதுவாக, முதலில் விட்டு கொடுப்பது கணவனா, மனைவியா?

அழகுக்காக செய்யும் அறுவை சிகிச்சைகள் தேவையா இல்லையா?

திருமணத்திற்கு பட்டுபுடவை அவசியமா இல்லையா?

ஒலிம்பிக்ஸில் இந்தியா பதக்கம் வெல்லுமா இல்லையா?

வாகனங்கள் ஓட்டும் போது சில பாதுகாப்பு விஷயங்களை (ஹெல்மெட், சீட்பெல்ட்) கட்டாயமாக்குதல் சரியா? இல்லையா?

பாடல்களால் நம்மை சிந்திக்க வைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா கண்ணதாசனா?

:)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பெற்றவர்களுக்காக காதலை விடலாமா? அல்லது காதலுக்காக பெற்றவர்களை விடலாமா?
கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?
(இந்த காலத்திற்கு அவசியமான தலைப்பு; எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.)

ஜெயா

1. இந்த காலத்தில் மனிதாபிமானம் அவசியமா? இல்லையா?

2. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுடன் போராட வேடுமா?
அநு ('நு'வா? 'னு'வா? சரியாக தெரியவில்லை) சரித்துபோகவேண்டுமா?

3. நண்பர்களுக்கு செய்யும் உதவிக்கு நன்றி கூறுதல் அவசியமா, இல்லையா?

4.சிறு வயதில் கணவர் இறந்துவிட்டால் அவரது தம்பியை மணக்கலாமா? கூடாதா?

5.ஒரு ஆணோ, பெண்ணோ தன் துணைக்கு தெரியாமல் (கவனிக்கவும்) வேறொரு துணையை நாடினால் அவர்களுக்கு தகவல் கொடுப்பது சரியா, தவறா?
(இது மோசமானதுபோல் தெரிந்தாலும், நான் பல குடும்பங்களில் பார்க்க நேர்ந்ததால் இதை எழுதுகிறேன், மன்னிக்கவும்)

6. (அறுசுவையில்) எழுத்துப்பிழை சுட்டிக்காட்டவேண்டுமா, கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டுமா?

7. வாழ்க்கைக்கு பொழுதுபோக்கு அவசியமா, இல்லையா?

8. "ஜாதகம், ஜோசியம்" பற்றி பேசுவது ஆன்மிகமா, இல்லையா? (யார் மனதையாவது புண்படுத்தினால் மன்னிக்கவும்)

9. பிள்ளைகள் மோசமானவர்களாவது தாய் சரியில்லாததாலா, இல்லையா?

(பின்குறிப்பு: என்னுடைய தலைப்புகள் மோசமாக இருந்தால் தெரிவிக்கவும்)

ஜெயா

1) இன்றைய ஆடம்பர வாழ்க்கையால் நமக்கு நன்மையா? தீமையா?
2) தம்பதிகளுக்குள் குறைந்த வயது வித்யாசம்(<5) நல்லதா?? அதிக வயது வித்யாசம்(>5) நல்லதா??
3) சிறந்தது எது – வட இந்திய உணவா?? தென் இந்திய உணவா?? (ருசி, செய்முறை, பொருட்கள், நேரம்...அனைத்தையும் கருத்தில் கொள்க)
4) கலகலப்பானவர்களா vs மௌனம் காப்பவர்களா - ஜெயிக்கப்போவது யாரு??
5) வெற்றிக்கு தேவை எது – முயற்சியா? பயிற்சியா??
6) பாஸ்ட்புட் அவசியமானதா? அநாவசியமானதா??
7) சேமிப்புகளில் சிறப்பானது எது – வங்கி சேமிப்பா? தங்கமா? வீடு,மணையா?
8) குழந்தைகளுக்கு படிப்பைத் தவிர கலைப்பயிற்சி (இசை, நடனம், விளையாட்டு) கண்டிப்பாக தேவையா? இல்லையா?
9) உணவை ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள் ஆண்களா? பெண்களா?
10) மக்கள் அதிகம் விரும்புவது எது?? – காயா கனியா??
11) உணவு பசிக்காகவா?? ருசிக்காகவா?
12) ரகசியம் காக்கத் தெரிந்தவர்கள் – ஆண்களா? பெண்களா??
13) நாம் சட்டங்களை பின்பற்றுகிறோமா? பின்னுக்கு தள்ளுகிறோமா?
14) ஊனமுற்றோர் ஊக்கப்படுத்தப்படுகிறார்களா? ஒதுக்கப்படுகிறார்களா?
15) போராட்டங்களால் நன்மையா? தீமையா??

1. காதல் என்ற உணர்வுக்கு, முழு மரியாதையை கொடுத்து சிந்தித்தால், நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றது, தேவதாஸ் / ஒரு தலை ராகம் வகை காதலா அல்லது வசூல்ராஜா வகை காதலா?
அதாவது "என் கதையை எழுதி விட்டேன் முடிவினிலே சுபம் இல்லை...." Vs "ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னால் நர்ஸ் பொண்ணை காதலி..."

2. காபி / டீ போன்றவை நிஜமாகவே மன அழுத்தத்தை போக்குபவையா (ஸ்ட்ரெஸ் / டென்ஷன் busters) அல்லது நமக்கு பிடித்தவற்றை அருந்த நாம் சொல்லும் பொய்யா?

3. சில குடும்பங்களில் இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மரியாதையோடு அழைத்து பேசும் வழக்கம் உள்ளது, அது, குழந்தைகளுக்கு மரியாதை கற்றுக் கொடுக்க உதவுமா இல்லை உறவுகள் இடையே நெருக்கத்தை குறைக்குமா?

4. பெண் மனசு ஆழம் என்பது நிஜமா இல்லை வழக்கம் போல் ஆண்கள் பெண்களை பற்றி சொல்லும் ஒரு கதையா?

5. பிடித்த வேலையை செய்வது சரியா இல்லை கிடைத்த வேலையை பிடித்ததாக மாற்றி கொள்வது சரியா?

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்