ஜாலி ட்ரிப் - உதவுங்க தோழீஸ்!!!!

ஹாய் தோழீஸ்!!!!

எனக்கொரு உதவி வேண்டும்... நாங்க ஒரு 15 பேர் அடுத்த வாரம் ஃப்ளோரிடா ட்ரிப் போகலாம்னு இருக்கோம், எங்க 2 வயது மகளுடன். மொத்தமா 4 நாள் போறோம், சாலை வழிப் பயணம் தான் பண்ணப்போறோம்.. இந்த 4 நாளும் என் பொண்ணுக்கும் எங்களுக்கும் அவசியமா எடுத்து போக வேண்டிய பொருட்கள் என்னென்ன? நாங்க வசிக்கும் இடத்தில் இருந்து அங்க போறதுக்கு 7 மணி நேரம் ஆகலாம்,அதனால் பயணத்தின் போதும் என் குட்டிக்கு போர் அடிக்காமல் எப்படி சமாளிப்பது? நான் என்ன தான் லிஸ்ட் போட்டாலும் அங்க போனதுக்கப்புறம் அச்சச்சோ அதை மறந்துட்டோமே, இதை மறந்துட்டோமே-ன்னு வரிசையா நியாபகம் வரும்... அதனால் தான் நீங்க எல்லோரும் அவங்கவங்க அனுபவத்தில் வச்சு சொன்னீங்கன்னா எனக்கு கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும்... அமெரிக்கா முழுதும் அடுத்த வாரம் 3 நாள் தொடர் லீவ் என்பதால் நம்ம தோழிகள் பலரும் கூட இந்த மாதிரி ட்ரிப் போக வாய்ப்பு இருக்கு, அதனால் நீங்க சொல்ல போறது எனக்கு மட்டும் இல்லாம இன்னும் நிறைய பேருக்கும் பயன்படும்.... பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...

அனேக அன்புடன்
ஜெயந்தி

குழந்தைக்கு தேவையான டயபர்ஸ், பேபி வைபெஸ், அவர்களுடைய இஷ்டமான ப்ளாங்கட், பொம்மை, மருந்து, துணி மணிகள், ஜாக்கெட், ஷூ, சாக்ஸ், அவர்களுடைய பேஸ்ட் பிரஷ் , பேபி வாஷ், மொயச்டரைசர், பிங்கர் பூட்ஸ், தண்ணீர் பாட்டல், பால் குடிக்கும் சிப்பி கப், ஸ்பூன், பௌல் இதெல்லாம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டியவை. கூடியமான வரை குழந்தைக்கு சன்ஸ்க்ரீன் உபயோகிப்பதை தடுத்து விடுங்கள். நீளமான உடையை அணிவிக்கவும். சன்ஸ்க்ரீன் போடுவதால் நம் உடல் வைட்டமின் டி உற்பத்தி பண்ணுவதை தடுக்கிறதாம். நிறைய தண்ணீர் கொடுங்கள். தினம் ஒன்று அல்லது இரண்டு யோகர்ட் கொடுக்கலாம். ஒரு சிறிய ரைஸ் குக்கர் ஒன்று எடுத்து கொண்டால் குழந்தைக்கு மட்டும் கொஞ்சம் சாதம் பருப்பு அல்லது தயிர் போட்டு ஊட்டலாம். மாக் அண்ட் சீஸ் எடுத்து கொண்டு போங்கள் கட்டாயம் உபயோகப்படும்.

உங்களுடன் வேறு சில குழந்தைகள் இருந்தால் உங்கள் மகளுக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும். இல்லையென்றால் கொஞ்சம் கஸ்தம் தான். அவளுக்கு பயணிக்கும் போது போர் அடிக்காமலிருக்க ஒரு கலரிங் புக் அல்லது பேப்பர் கொடுத்து வரையா சொல்லுங்கள். அவர்களுக்கு பிடித்தமான சொங்க்ஸ் போட்டு கூடவே பாடிக் கொண்டு போகலாம். ரொம்பவும் க்ராங்கி ஆனால் வேறு வழியே இல்லை எக்சிட் எடுக்க வேண்டியது தான். கொஞ்சம் நேரம் சீட்டிலிருந்து எழுந்து ஓடி ஆடினால் சரியாய் போகும். நீங்கள் பயணிக்கும் நேரம் இரவாக இருந்தால் ஒன்றுமே பிரச்சனை இல்லை.

ஊர் சுற்றிப்பார்க்கும் போது குழந்தையை எப்பொழுதுமே ஸ்ட்ராலரில் வைத்திருக்காமல் அப்போபோ இறக்கி விட்டு வேடிக்கை காட்டுங்கள். அப்பொழுது தான் அடுத்த முறை உட்கார வைக்கும் போது முரண்டு பிடிக்க மாட்டார்கள். அவர்கள் ஸ்ட்ராலரில் உட்கார்ந்திருக்கும் போது எதவாது பிங்கர் பூட்ஸ் சாப்பிட கொடுங்கள் அல்லது எதாவது சிறு சிறு விளையாட்டு சாமான் கொடுக்கவும்.

நீங்கள் பப்புல்ஸ் கூட எடுத்து செல்லலாம். அவர்களுக்கு போர் அடிக்கும் போது ஊதி விட்டால் அமைதியாகி விடுவார்கள். அதே மாதிரி சில பலூன்கள் கூட எடுத்து செல்லலாம். நீங்கள் எடுத்து செல்லும் விளையாட்டு சாமான் அனைத்தும் உங்கள் குழந்தைக்கும் மிகவும் விருப்பமுள்ளதாக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் என் குழந்தை மிக்கி மேல் பைத்தியமாக இருப்பாள். தூங்கும் போது மிக்கி, எழுந்தால் மிக்கி, சாப்பிடும்போது என்று எல்லாவற்றிக்கும் மிக்கி தான். எப்பொழுதும் அதை இடுக்கி கொண்டே தான் அலைவாள். போதாகுறைக்கு எப்பொழுதும் க்ளப்ஹௌஸ் வேறு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் மிக்கி வைத்தே நான் அப்பொழுதெல்லாம் சமாளிச்சிடுவேன். இப்போ கொஞ்சம் விவரம் தெரியும் அதனால் இது தான் பிடிக்கும் என்றெல்லாம் கிடையாது...எல்லாமே பிடிக்கும். கொஞ்சம் கஷ்டம் தான் இப்பொழுது சமாளிப்பது.

It will be a good experience for you. Have a safe journey. ஆல் தி பெஸ்ட். என்ஜாய் யுவர் ட்ரிப் :)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது பற்றி உங்கள் கருதுக்களை எனக்கு சொல்லுங்கள்

வாழ்க‌ வளமுடன் கவிகார்திக்

1. Diaper rash cream, wet and dry tissues, hand sanitizer, straws, spoons.

2. coffee mug, sugar packets, Horlicks/boost/complan (கேஸ் ஸ்டேஷனில் பால் கிடைத்தாலும், சூடு பண்ண coffee mug இருக்காது. அதற்காகத்தான். சில நேரம் நமக்கே உபயோகப்படும்)

2. Pediasure (பால் கிடைக்காத போது இதை குடிக்க வைக்கலாம், fridge-ல் வைக்க தேவையில்லை). Walmart-ல் கிடைக்கிறது.

3. cereals like fruit loops, corn flakes,

4. Magi Noodles, bowl. (ஹோட்டல் ரூமில் மைக்ரோவேவ் இருந்தால் செய்து கொடுக்க, இல்லையென்றாலும் கேட்டு வாங்கி கொள்ளலாம்)

5. water bottles

6. Juice Boxes like Juicy juice, capri sun or fruit bowls like Dole or some bananas, apples.

7. General Medicines for Cold, Fever like Tylenol

8. CDs.

9. chargers for cell phone, laptop.

10. some empty carry bags (to put trash, diapers)

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

huggies little swimmers - swim diapers

have a nice trip!

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ஹாய் லாவண்யா!!!

முதலில் என் நன்றியை பிடிங்க, உடனே ஓடோடி வந்து பதில் சொன்னதற்கு!!!! எனக்கு 2 நாளா அறுசுவை ஓபன் ஆகவே இல்ல,அதான் லேட் பதிவு.....

என்னென்ன எடுத்துட்டு போகணும், எப்படி குழந்தையை சமாளிக்கணும் எல்லாம் ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க..... நான் நீங்க குடுத்த பொருள் எல்லாமே லிஸ்ட் போட்டு வச்சுட்டேன்.... அப்பத்தானே எடுத்து வைக்க ஈஸியா இருக்கும்.. கூடுமான வரை சன்ஸ்க்ரீன் லோஷன் போட வேண்டாம்னு சொல்லிருக்கீங்க, இது எனக்கு புது விஷயம்... ஃபுல்லா கவர் பண்ற மாதிரி ட்ரெஸ் போட்டா வேர்த்து கசகசன்னு இருக்காதா?

எங்க கூட என் மகளுடன் சேர்த்து இன்னும் 4 குழந்தைங்களும் வர்றாங்க,அதனால் போர் அடிக்காதுன்னு நினைக்கிறேன், அப்படியும் போர் அடித்தா அவளுக்கு பிடித்ததை குடுத்து தாஜா பண்ணனும். நீங்க சொல்லியிருக்கும் பலூன் மேட்டர் சூப்பர்,என் பொண்ணுக்கும் பலூன்னா ரொம்ப பிடிக்கும்... அது எங்க இருந்தாலும் உடனே சடன் ப்ரேக் போட்ருவா,மற்ற எதுவும் அந்த நேரத்தில் கண்ணுக்கு தெரியாது... அதே போல் இப்போதைக்கு “டோரா” தான் ஃபேவரைட், தூங்கி எழுந்திருக்கும் போதே டோரா பேரை சொல்லிட்டேதான் எழுந்திரிப்பாங்க..அதனால் அது சம்பந்தப்பட்ட பொருளா கொண்டு போக வேண்டியது தான்..

நீங்க எங்கும் போகலையா? எல்லா இடமும் முன்னாடியே பார்த்துட்டீங்களா? நான் போய்ட்டு வந்து என் பொண்ணுடனான சாதனை(!) பயணம் பற்றி சொல்றேன்...

மற்ற தோழிகள் ஏன் எதுவும் சொல்லலை.... ப்ளீஸ்! மற்றவங்களும் உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கோங்களேன்....

அனேக அன்புடன்
ஜெயந்தி

லாவண்யா!!! எனக்கு இன்னுமொரு சந்தேகம், கெர்பர் ஃபுட் 3rd stage-il வரும் பழம்,காய்கறி, சிக்கன்+காய்கறிகள் மிக்ஸ், கெர்பர் சீரியல் இதெல்லாம் என் பொண்ணுக்கு குடுக்கலாம் தானே? நான் தற்போது அதையும் குடுக்கிறேன்...அவளுக்கும் ரொம்ப பிடிக்கும்.... ஏன் கேட்கிறேன்னா, அதெல்லாம் ஒரு வயது வரை தான் குடுக்கணுமோ? நான் தான் இப்பவும் குடுத்துட்டு வர்றேனோ அப்படின்னு தோணுது... இதயும் கொஞ்சம் கிளியர் பண்ணுங்களேன்....

அனேக அன்புடன்
ஜெயந்தி

1 வயதுக்கு மேல் கொடுக்க வேண்டிய உணவை 1 வயதுக்கு முன் கொடுத்தா தான் தப்பு... ஜீரணத்துக்கு வராதுன்னு சொல்வாங்க. அந்த வயசை தாண்டி கொடுத்தா ஒன்னுமே தப்பில்லை. அதனால் பயப்படாம கொடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பாடா,ரொம்ப நாள் சந்தேகத்தை இன்னைக்கு கிளியர் பண்ணிக்கிட்டாச்சு... என் கணவர் தான் சொல்லிட்டே இருப்பார் “நீ அவளுக்கு தேவையானதை குடுக்காம கம்மியான சத்துள்ள உணவா குடுக்குற”-ன்னு..... இனி அப்படி சொல்ல வாய்ப்பில்லாமல் பண்ணியாச்சு..

நன்ற் வனிதா!!!!

அனேக அன்புடன்
ஜெயந்தி

குழந்தைகளுக்கு என்றால் இந்த பொருட்கள் மட்டுமே எடுத்து சென்றால் போதும்.

என்னங்க நீங்க இப்படி கேட்டுடீங்க?? இப்போ தான் ஸ்ப்ரிங் ஆச்சே....கலர் கலர் விதம் விதமா காட்டன் சட்டைகள் தான் கிடைக்குமே ! இது எனக்கு என் மருத்துவர் சொன்னது. குழந்தைகளை வெளியில் அழைத்து சொல்லும் போது அதும் அதிக நேரம் வெயிலில் இருக்கவேண்டுமானால் நீளமான கை வைத்த சட்டை போட்டால் யு வி ரேஸ் நம்மை அதாவது நமது தோளை நேரிடையாக தாக்காமல் இருக்குமாம்.

குழந்தைகளுக்கு எப்பொழுதுமே இந்த ஜூஸ் அல்லது பாக்ட் பூட்ஸ் குடுக்காதீர்கள். நான் எப்பொழுதுமே என் குழந்தைகளுக்கு இந்த பாட்டில் பூட்ஸ் கொடுத்ததே கிடையாது . அவர்களுக்கு அது பிடிக்கவும் பிடிக்காது. பழங்கள் நிறைய கொடுப்பேன். அதனால் நீங்கள் வாழைப்பழம் (மெஸ் ஆகாத பழங்கள்), ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளம், பியர்ஸ் இந்த மாதிரி பழங்கள் கொடுக்கலாம். இல்லையென்றால் நிறைய யோகர்ட் கொடுக்கலாம். குடுக்க கூடாது என்றெல்லாம் இல்லை. இரண்டு வயதிற்குள் தான் குழந்தைக்கு எல்லா வகையான உணவையும் பழக்க வேண்டும். அவர்களுக்கு அது வரை தான் சுவையில் விருப்பு வெறுப்பு இருக்காது. அதற்க்கப்புறம் என்றால் அவர்களுக்கு நன்றாக தெரிய ஆரம்பிக்கும். அதுவும் இல்லாம அவர்களை கட்டாயப் படுத்தி கொடுப்பதும் ரொம்பவே கஷ்டம். இப்பவே அவர்களுக்கு நம்முடைய சமையலை பழக்கப் படுத்துங்கள் இல்லையென்றால் அது பழகவே பழகாது. என் மகளும் பள்ளிக்கு (முழு நேரம்) சென்றிருந்த போது அவளுக்கு வீட்டில் செய்யும் எதுவுமே பிடிக்காது. காரம் காரம் என்பாள் நானும் இத்தனைக்கும் நெய் ஊற்றி ஒரு மிளகாய் தான் சேர்த்து சமைத்திருப்பேன்....இருந்தாலும் சாப்பிட மாட்டாள். பாஸ்தா செய்தால் சாபிடுவாள் இல்லையென்றால் தோசை (அதும் குக்கி கட்டர் வைத்து சுடனும்) அல்லது ஷேப்ஸ் சப்பாத்தி இப்படி தான் சாப்பிட்டு வந்தால். பார்த்தேன் முழு நேரத்தை பாதியாக மாற்றி வீட்டில் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். ஓரளவுக்கேனும் கொஞ்சமாவது காரம் சாப்பிடுகிறாள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்களுக்கு லேட்டா பதில் போட்றேன்னு நினைக்காதீங்க, இப்ப தான் எங்க குட்டி மேடம் தூங்கினாங்க, இல்லேன்னா டைப் பண்ணவே விடமாட்டா.... நீங்களும் நல்லா யோசிச்சு தெளிவா சொல்லிருக்கீங்க... குழந்தைக்கு மட்டுமில்லாம,பெரியவங்களுக்கும் சேர்த்து சொன்னது நல்லதா போச்சு. நீங்க சொன்னதையும் சேர்த்து லிஸ்ட்ல சேர்த்துட்டேன்.. என் பொண்ணுக்கு இது வரை பீடியாஸ்யூர் குடுத்தது இல்லை, எப்பவும் ஆர்கானிக் மில்க் தான் குடுப்பேன், அதுவே வால்மார்ட்டில் வாங்கிக்கலாம்னு இருக்கேன்... //coffee mug,(கேஸ் ஸ்டேஷனில் பால் கிடைத்தாலும், சூடு பண்ண coffee mug இருக்காது. அதற்காகத்தான். சில நேரம் நமக்கே உபயோகப்படும்)// நீங்க சொல்லும் காஃபி மக் எப்படி இருக்கும்,அதிலேயே எப்படி காஃபி போடுவது? கொஞ்சம் விளக்கம் குடுத்தால் நல்லா இருக்கும்... எனக்கும் காஃபி இல்லேன்னா கஷ்டம் தான், இந்த ஊரில் கிடைக்கும் காஃபி எனக்கு சுத்தமா பிடிக்கலை.... அப்புறம், நூடுல்ஸ் ஐடியாவும் யூஸ்ஃபுல்லா இருக்கும்,ஒரு அவசரத்துக்கும் குடுத்துக்கலாமே!! நாங்க மைக்ரோவேவ் இருப்பது மாதிரி தான் ரூம் புக் பண்ணிருக்கோம்,அதனால் அது பிரச்சினை இல்ல.... உங்க பதிவுக்கு ரொம்ப தாங்க்ஸ்!!!

அனேக அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்