ஆரத்தி தட்டு

தேதி: May 23, 2011

4
Average: 3.8 (6 votes)

 

தெர்மாக்கோல் தட்டு - ஒன்று
தெர்மாக்கோல் கலர் பால்ஸ்
தெர்மாக்கோலில் ஒட்டிய சம்கி பூ - ஒன்று
சம்கி பூ - 12
பெவிக்கால்

 

ஆரத்தி தட்டு செய்வதற்கு அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். 6 சம்கி பூவை தனியாக எடுத்து அதன் ஒவ்வொரு இதழையும் உள்பக்கமாக மடக்கி வைக்கவும்.
தட்டின் நடுப்பகுதியில் தெர்மாக்கோலில் சம்கி பூ ஒட்டிய பூவை பெவிக்கால் தடவி ஒட்டவும். இது போன்ற பூக்கள் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. அப்படி இல்லையெனில் நீங்களாகவே இந்த பூவை செய்து விடலாம். ஃப்ளெயின் கிஃப்ட் பேப்பரை ஜிக்ஜாக் கத்திரிக்கோலால் வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதைவிட கால் இன்ச் சிறியதாக தெர்மாக்கோலை வட்டமாக நறுக்கி எடுத்து பெவிக்கால் வைத்து ஒட்டவும். அதன் மேலே கம் தடவி கோல்டுநிற சம்கி தூளை தூவவும். கடைசியில் சம்கி பூவை ஒட்டி முடித்து காயவிடவும்.
அந்த பூவை சுற்றி மஞ்சள்நிற தெர்மாக்கோல் பால்ஸை கொண்டு அறுங்கோண வடிவில் ஒட்டி வைக்கவும்.
பின்னர் அதே நிறத்தால் அறுங்கோணத்தை சுற்றி இதழ் போன்று வடிவமைத்து ஒட்டவும்.
ஓவ்வொரு இதழின் உள்ளே பச்சைநிற தெர்மாக்கோல் பால்ஸை பெவிக்கால் தடவி நிரப்பவும். இதழின் இடையில் சம்கி பூவை ஒட்டவும்.
சிவப்புநிற தெர்மாக்கோல் பால்ஸை கொண்டு படத்தில் உள்ள டிசைனை போல் ஒட்டிக் கொள்ளவும். அதன் ஒவ்வொரு இடைவெளியிலும் உள்பக்கமாக மடக்கி வைத்த சம்கி பூவை ஒட்டி முடிக்கவும்.
எளிமையான முறையில் விரைவில் செய்யக்கூடிய ஆரத்தி தட்டு ரெடி. நடுவில் மெழுகு அகலை ஏற்றி வைத்து ஆரத்தி எடுக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் சூப்பர்.... அழகு, சுலபமா கிடைக்கும் பொருட்கள், ஈசியான வேலைப்பாடு. கியூட் தட்டு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோலம் போட்ட மாதிரி அழகா இருக்கு தட்டு.
இந்த மாதிரி கலர்கலரா தர்மாக்கோல் விக்குதா?

‍- இமா க்றிஸ்

அழகான ஆரத்தி தட்டு செய்து காமிசுருகிங்க சூப்பர் வாழ்த்துக்கள் by Elaya.G

//இந்த மாதிரி கலர்கலரா தர்மாக்கோல் விக்குதா// - ஆமாம் இமா ஆமாம்... விக்கிறது.... வாங்கி அனுப்பவோ??? ;) புதுசா ஏதும் க்ராஃப்ட் ஐடியா இருக்கோ?? சொல்லுங்கோ... வாங்கி அனுப்பிபோடலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு அறுசுவை குழுவினருக்கு,

அழகான கலர் காம்பினேஷன், கண்ணுக்கு நிறைவாக இருக்கு.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அடடா.. உண்மையாழுமே உங்களுக்கு ரொம பொறுமைங்க.. குட்டி குட்டி பால்ஸை அழகா வடிவமைத்து இருக்கிங்க. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)