Twin Pregnancy உதவி please!!!!

Dear friends,

நான் ட்வின்ஸ் carry பன்றேன் (9 weeks and 4 days). எனக்கு 26 வயது, 126 lbs. ஆரோக்கியமாக இருக்கிறேன். BP நார்மல். vomitting, nausea இருந்தது. இப்ப பரவாயில்லை. Pre-natal vitamins, calcium + vit D எடுத்துட்டு இருக்கேன். என்ன ப்ரச்சனைனா, ஒரு குழந்தையை விட இன்னொரு குழந்தை 1 week, பின்னாடி வளருகிறது. Twin A - 8 weeks, 3days, Twin B - 9 weeks, 4 days. Heartbeat - 173, 185 நார்மலா இருக்கு.

Twins எனக்கு புதுசா இருக்கறதால, என்ன speciala செய்யனும்னு தெரிலபா. doctor எப்பவும் போல இருக்க சொல்றாரு. Extra Folic acid கூட தரல.
என்னோட கேள்விகள்:

1. லேட்டா வளருற குழந்தைக்கு எதாவது ப்ரச்சனை இருக்கா?
2. Twin pregnancykku என்னென்ன பண்ணனும்?
3. Doctor கிட்ட என்னென்ன கேக்கனும்?
4. twin pregnancy பத்தி தெரிஞ்சுக்க website எதாவது இருக்கா?

எதாவது தவறா type பண்ணி இருந்தா, sorry... சீக்கிரம் நல்ல தமிழ் type பண்ண கத்துக்கறேன். இங்க இருக்குற தோழிகள், பெரியவர்கள் தயவு செய்து உதவி செய்யுங்கள். தனியாக NJயில் இருக்கிறேன். உதவி, advice பண்ண யாருமே இல்லை :(

Congrtulations.........

heart beat நார்மலா இருக்கும் போது பயப்பட வேண்டாம். எதுக்கும் டென்ஷன்
ஆகாதிங்க. எப்பவும் சந்தோஷமா இருங்க.. நல்லதே நடக்கும்.

http://www.twin-pregnancy-and-beyond.com/twin-pregnancy-week-by-week.html

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ரொம்ப thanx பா!! உங்க words refreshingஆ இருக்கு... இந்த website ரொம்ப உதவியா இருக்கு..

எனக்கு இதை பத்தி ஒண்ணுமே தெரியாது, அப்பறம் எதுக்கு பதிவு போடறேன்னு பாக்கறீங்களா?
எனக்கு ட்வின்ஸ் னா உயிரு :) :) , தலைப்ப பாத்துட்டு சும்மா போக முடியல. அழகான அறிவான குழந்தைகளை பெற்றெடுக்க வாழ்த்துக்கள். மனச ப்ரீ ஹா வெச்சுக்கோங்க, தேவை இல்லாம பயம் வேண்டாம்.

அறுசுவை ல கல்பனா,ஷாபானு ன்னு இருக்காங்க, அவங்களுக்கும் ட்வின்ஸ் தான். அவங்களை வந்து பதிவு போடா சொல்றேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

congratulations

nega folic acid use panalam nega doctor kita suggistation katu use panlam ga
take good food more milk more fruits and i am a 4 month baby i am dubai ok take care

1 week late ஆஹ இருக்ரதால என்த problemமு இல்ல எனகும் அப்படிதான் இருன்தது. 2 baby கு முலு சத்து கிடைகனு அதனால் healthi food ரென்டு குலன்தைகு கிடைகிர மாதிரி saapidunga. take care

வாழ்த்துக்கள். எனக்கும் இரட்டை குழந்தைகள் தான். இதே மாதிரி தான் ஒரு வாரம் வித்தியாசத்தில் இருந்தன். நார்மல் டெலிவரியில் தான் பிறந்தார்கள். பெண் குழந்தைகள். தற்போது 1 yr ஆகி விட்டது. நண்றாக இருக்கின்றார்கள். கவலை படாதீர்கள்,
எப்போதும் சந்தோசமாக இருங்கள். பிடித்தமான விஷயங்களை செய்ய்ங்கள்.

நண்றாக சாப்பிடுங்கள். மனதை எப்போதும் சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள்.

தோழி ப்ரியா,இரட்டை குழந்தைகளுக்கு தாயான உங்களுக்கு என் வாழ்த்துக்கள் :) நீங்கள் இப்போதிருந்தே குழந்தைகளின் வளர்ச்சியை நினைத்து கவலைப்பட வேண்டாம்.மருத்துவர்கள் ஆலோசனைப்படியே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும். அவர்களுக்கு குழந்தைகளின் வளர்ச்சியை பற்றியும், அப்படி சரியான வளர்ச்சி இல்லையென்றால் அதற்கு எத்தகைய உணவுகளை உண்ணவேண்டும் அதற்குரிய வழிகள் என்ன என்று தெரிந்து அதை உங்களுக்கு பரிந்துரைத்திருப்பார்கள் அல்லவா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். குழந்தைகளின் வளர்ச்சியை பார்த்து கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் நீங்கள் தினமும் உண்ணவேண்டிய சத்துள்ள உணவுகளில் அதிக கவனம் செலுத்துங்கள். உணவை ஒரே முறையில் மொத்தமாக உண்ண முடியாது அதனால் முடியும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உண்ணுங்கள். நிறைய மாதுளம் ஜூஸை குடியுங்கள். கீரை வகைகள் முக்கியமாக இரும்பு சத்து அதிகம் கொண்ட கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மருத்துவர் தொடக்கத்திலேயே இரும்புசத்து கொண்ட மாத்திரையை உண்ண அறிவுறித்தியிருக்க வேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை என்று தெரியவில்லை?அடுத்த முறை மருத்துவரிடம் இதுகுறித்து சந்தேகத்தை கேட்டு தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்.எனக்கும் இரட்டை குழந்தைகள் தான். தொடக்கத்தில் 3ம் மாதம் ஸ்கேன் செய்த பிறகு ஒரு குழந்தை போதிய வளர்ச்சியில்லாம குறைவான இதயத்துடிப்போடு இருப்பதாக தான் சொன்னார்கள். எனக்கு ஒருபுறம் கவலை மனதை அரித்தாலும், மேலும் அந்த குறைப்பாட்டை பெரிதாக்க வேண்டாம் என்று நினைத்து நன்றாக சாப்பிட்டு அதை நிவர்த்தி செய்தேன். ஒவ்வொரு முறை செக்கப் போகும் போதும் அந்த ஒரு குழந்தையை பற்றி எதாவது ஒன்றை மருத்துவர் சொல்லிக்கொண்டே இருப்பார். சிசேரியன் செய்வதற்கு முன்பு கூட அந்த ஒரு குழந்தையின் நாடி துடிப்பு சரிவர இல்லை என்றே சொன்னார்கள்.இருந்தும் மனதில் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தான் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே போனேன். கடவுள் அருளால் எல்லாமே நல்லபடியாக முடிந்தது. இப்போது அந்த குழந்தைகளுக்கு 3 வயது முடியப்போகிறது. ஒரு ஆண்,ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். அந்த பிரச்சனையான குழந்தை பெண்தான். இப்போது அது 4 வாலோடு வீட்டில் பண்ணும் அட்டகாசம் சொல்லி மாளாது :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

reply பண்ணதுக்கு ரொம்ப நன்றி.. தெரிலைனா என்னபா.. உங்க மாதிரி friends கொடுக்கர நம்பிக்கை தான் மனசுக்கு நல்லா இருக்கு.. இந்த timeல சும்மாவாது ஆருதலா பேசுனா better feel இருக்கு. ஏற்கனவே ஒரு miscarriage ஆச்சு. பக்கதுல வேர, யாரும் இல்லாததால கொஞ்சம் பயம் இருக்குபா..
உங்க wishesக்கு ரொம்ப thanx..
எனக்கும் twins ரொம்ப பிடிக்கும்.. :) கடவுள் இந்த தடவை பெரிய gift குடுத்திருக்கார்.
Kalpana, Shaba reply பண்ண சொன்னதுக்கு thanx..

Replyக்கு ரொம்ப thanx பா.. Already Folic acid tablet எடுத்துக்கறேன். But இன்னொரு babykku extra எடுக்கனுமானு தெரில. Doctor வேணாம்னு சொல்லிட்டார். முடிஞ்ச அளவு milk, fruits and juice எடுத்துக்கறேன். நிறைய items சாப்ட பிடிக்கல.. vomiting வேற இருக்குதுபா.
உங்க 4 month babyக்கு என்னோட kisses :)

replyக்கு ரொம்ப நன்றிபா..Ddoctor, small baby growth stopஆஹ chance இருக்குனு சொன்னார். wait பண்ணி பாக்கலாம்னு சொன்னதுனால கொஞ்சம் worriedஆ இருந்துச்சு..
lateஆ இருக்கறதால problem இல்லனு நீங்க சொல்றது கேக்க romba happyஆ இருக்கு..

Thank you!

மேலும் சில பதிவுகள்