வனிக்கு வாழ்த்து !

அறுசுவையின் சகலகலாவல்லியும் மற்றும் நம் அனைவர் மனதில் இடம் கொண்டுள்ள உறுப்பினருமான திருமதி வனிதாவிற்கு நாளை ( மே 27 )பிறந்த நாள். அவர் எல்லாவிதமான செல்வங்களையும் வாழ்வில் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வனி..
எல்லாரும் நான் செய்த பாதுஷாவை எடுக்கோங்க.. ;)

சகலகலா வள்ளியை வாழ்த்த வார்த்தை இல்லையே...
வனி, எத சொல்லி வாழ்த்தறது?? போங்க.
எல்லா சந்தோசமும் கிடைத்து, என்றும் மகிழ்ச்சியுடன், நல்ல உடல் நலத்துடன் (உங்க கை வலி சீக்கரம் சரி ஆகணும்) பல நூறு வருஷம் வாழ வாழ்த்துகிறேன் :))

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் வனிதா, உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .;)
வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகாலாம் வாழ இறைவனை பிரார்த்திக்கிரேன்.:)

ஹாய் ரம்ஸ்,நானும் வனிக்கு வாழ்த்துனு தலைப்பு பார்த்தயுடனே நெனச்சேன் நம்ம சகலகாலாவல்லி ஆச்சே வனி அப்படினு அதேபோல நீங்களும் எழுது இருக்கிங்க. சூப்பர். நீங்க செய்த பாதுஷா எடுத்துகிட்டேன் ரொம்ப நன்றி ரம்ஸ் ;)

இந்த பாதுஷாக்கு எல்லோரும் ஓடி வருவாங்க அதான் நான் முந்திகிட்டேன் எப்புடி ஹா....

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் வனிதா... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற்று நலமுடன் வாழ இந்த அன்புச் சகோதரியின் வாழ்த்துக்கள்......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

அன்புள்ள அக்கா வனிக்கு அன்பு தங்கையின் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
வாழ்க பல்லாண்டு வாழ்க நலமுடன்,வளமுடன்.
என்றும் அன்புடன்
இளையா.G

ரம்யா, சுகி... இரண்டு பேரும் இவ்வளவு நேரமா என்கிட்ட தானே பேசிட்டு இருந்தீங்க!!! எப்ப இந்த பக்கம் வந்தீங்க??!! இன்னைக்கேவா வாழ்த்து??

உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி :) இது போல் அன்பு தோழிகளும், சகோதரிகளும் என்றும் என்னோடு இருக்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன். நம்மை சுற்றி நமக்கு நல்லது நினைப்பவர்கள் இருந்தாலே நாம் நல்லா இருப்போம். மீண்டும் என் அன்பு நன்றிகள் பல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இறைவன் உங்கள் வாழ்வில் நிறைய சந்தோஷத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுத்து நிறைய நிறைய காலம் நலமுடன் வாழ வைக்கனும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியை தரட்டும்.

தேவி, பிரியா, இளையா.... உங்க எல்லாருடைய அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. :)

பிரியா கல்யாண நாள் எப்படி போச்சு? மருதாணி போட்டு அனுப்பினீங்களா?

பாதுஷா எனக்கும் வேணும் தேவி...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றி யாழ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆள்ளினால் அழகு ராணி மற்றும் சகலகலவள்ளிக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். எல்லாம் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகள். என்ன பிரியாணி ரெடியா வரலாமா சாப்பிட வீட்டிற்கு? என்ன பிளான் நாளைக்கு.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் வனிதா... நேற்றே உங்களிடம் உண்மையை சொல்லனும்னு மனசு துடிச்சுது. ஆனா எல்லோரும் சந்தோஷமா வாழ்த்தும் போது என் துக்கத்தை வெளிப்படுத்த இயலவில்லை பா... கடந்த ஒரு வாரமாய் என் ஒரே அண்ணனின் வாழ்க்கைப்பிரச்சனை என் , என் குடும்ப்த்தாரின் மனதை சூராவளியாய் தாக்கிக் கொண்டிருக்கிறது. என் மனம் தாங்க முடியாத துக்கத்தில் இருக்கிறேன் தோழி... நேற்று என் ஒரே அண்ணனின் திருமண வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும் தருணத்தில் என் திருமணநாள் கொண்டாட்டம் என்ற எண்ணமே என் மனதில் இல்லை... தோழிகளின் வாழ்த்தால் ச்ந்தோஷம் அடைந்தேன்... சந்தோஷதை பதிவு செய்யும் இப்பகுதியில் எனது சோகத்தை பதிவு செய்வது வருத்தமா இருக்கு... நான் இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்துகொள்கிறேன் வனிதா....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்