கர்ப்பமாக இருப்பவர்களின் சந்தேகம்

நான் அறுசுவைக்கு புதிது.எனக்கு உதவுங்கள் ப்ளிஸ்.

நான் இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறேன்.எனக்கு 2 மாதம் முடிந்திருக்கிறது.இது எனக்கு 2 வது குழந்தை.எனக்கு உடல் பிரச்சனை ஏதாவது ரூபத்தில் வருகிறது.
இன்னைக்கு காலையில் எனக்கு முதுகுல ஒரு சொடுக்கு விழுந்த சத்தம் கேட்டது.அத்ற்கு பின் பயங்கிற முதுகு வலி.வலிக்கிறதுக்கு ஸ்பேரே அடித்தேன்.
டாக்டரிடம் போக பயமாக இருக்கிறது.இப்பொழுது எக்ஸ்ரே எடுக்க முடியாது. மாத்திரைக்கள் சாப்பிட முடியாது.என்ன செய்யலாம் தோழிகளே.ப்ளிஸ் ஹெல்ப் பண்ணுங்க.

ப்ளிஸ் யாராவது பதில் சொல்லுங்கள்.புதியவர்களுக்கு பதில் அளிக்க மாட்டீர்களா? ப்ளிஸ் ஹெல்ப் பண்ணுங்க.

உங்களுக்கு இன்னமும் இது சரி ஆகலையா? ஹாட் பேக் ஒத்தடம் கொடுத்து பார்க்கவும். நீங்கள் எதற்கும் மருத்துவரை பார்ப்பது நல்லது. நீங்கள் கர்பமாக இருப்பதால் தோழிகள் எதாவது மருத்துவம் கூற பயப்படுவார்கள். இந்த நேரத்தில் உங்களின் பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு மருத்துவரை பாருங்கள். அது தான் நல்லது.

புதியவர் என்பதால் பதில் தராமல் இருக்கவில்லை...தெரியாததனால் தான்...இங்கு அனைவருமே தோழிகள் தான் :)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப தேங்க்ஸ் பா.நேத்து நைட் ஜெல் யூஸ் பண்ணினேன்.பட் இன்னும் வலி இருக்குது.நான் இப்ப மாத்திரை சாப்பிட முடியாது,என்ன செய்வது என்று பயமாக இருப்பதால் நான் மருத்துவரை பார்க்காமல் இருந்தேன்.என்னுடைய வலி தாங்கிக் கொள்ளும் அள்வு இருப்பதால் தான் நான் மருத்துவரை பார்க்காமல் இருக்கிறேன்.இதில் ஏதவது தவறு இருக்கிறதா? ப்ளிஸ் சொல்லுங்கள்.

வலித்துக்கொண்டே இருக்கிறது என்றால் கண்டிப்பாக மருத்துவரை பாருங்கள். தாங்கிக்கொள்ளலாம் ...இருந்தாலும் அப்படியே வைத்துக் கொண்டே இருக்க கூடாதல்லவா? மருத்துவர்களுக்கு மருந்து கொடுக்கலாமா இல்லையா என்று தெரியும் அல்லவா? தவறு என்றும் ஒன்றும் இல்லை. என்னை பொறுத்தவரையில் மனதுக்கு நெருடாத வரையில் சரி....இல்லையென்றால் ஏன் வைத்துக் கொண்டே இருக்கணும். போகலாமா வேண்டாமா என்றெல்லாம் இந்த நேரத்தில் குழம்ப கூடாது. போய் தான் பாருங்களேன்.

உங்களின் பெயர் என்ன....செல்லகுட்டி என்றெல்லாம் கூப்பிட என்னவோ போலிருக்கிறது :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தோழிகளே என் தோழி கர்ப்பமாக இருக்கிறார்.அவருக்கு நேற்று இரவிலிருந்து தும்மல், சளி,தொண்டை கர கரவென்று இருக்கிறது.இப்பொழுது என் தோழியால் மருந்து எடுத்து கொள்ள முடியாது.என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.அவளும் மிளகு,மஞ்சள் தூள்,பனற்கண்டு போட்டு காலையில் குடித்து விட்டார்.இதனால் காதும் குத்துது என்கிறார்.ப்ளிஸ் ஹெல்ப் பண்ணுங்க தோழிகளே.ஒரு நாளைக்கு எத்தனை தடவை மிளகு,மஞ்சள் பால் குடிக்கலாம்.மிளகு உடம்புக்கு சூடு என்கிறார்கள்.

Expectation lead to Disappointment

மீனாள்

சளித்தொல்லை அதிகமாக இருந்தால் சில குறிப்பிட்ட மருந்துகள் டாக்டரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

தூதுவளை கீரையில் ரசம் வைத்து அருந்தலாம், கற்பூர வள்ளி சாறை சுடு தண்ணியில் கலந்து பருகலாம், ஆனால் வீட்டு வைத்தியம் எல்லாமே ஓரளவுக்குதானே எடுத்துக்கொள்ள முடியும். என்னைக்கேட்டால் சந்தேகங்களோடு வீட்டு வைத்தியம் செய்வதற்கு டாக்டரை அணுகுவதே உசித்தம்;)

Don't Worry Be Happy.

ஜெயா

ரொம்ப தேங்க்ஸ்.நீங்கள் கூறியதை என் தோழியிடம் சொல்கிறேன்.

அவளுக்கு தும்மல் அதிகமாக இருக்கிறது.தொண்டை கர கரவென்று இருக்கிறது.தூதுவளை ஆங்கிலத்தில் அதன் பெயர் என்ன?அதன் ரசம் எப்படி வைப்பது.கற்பூர வள்ளி எத்தனை இலைகள் எடுத்து சாறு பிழியலாம்.சும்மா கையில் வைத்து கசக்கினால் சாறு வருமா? சாரிபா அவளுக்கு இத்தனை சந்தேகங்கள்.பிளிஸ் பதில் சொல்லுங்கள்.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்