கிஃப்ட் என்வெலப்ஸ்

தேதி: May 30, 2011

4
Average: 4 (6 votes)

 

ஹேண்ட் மேட் சார்ட்
ஸ்டோன்ஸ்
பெவிக்கால்
கத்திரிக்கோல்
சின்ன சாமி உருவம்
ஒரு ரூபாய் காசு
பட்டன்கள்
உல்லன் நூல்

 

கிஃப்ட் கவர் செய்முறை செண்பகா குறிப்பில் (http://www.arusuvai.com/tamil/node/17751) இருப்பது போலவே வெட்டி வைக்கவும். அதன் வலது பக்கத்தின் ஒரு ஓரத்தில் 25 பைசா அளவு வைத்து வட்டமாக வெட்டி எடுக்கவும்.
இப்போது அந்த அட்டையின் உள்பக்கத்தில் வட்டமாக வெட்டிய இடத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஒட்டவும்.
இனி கவரின் எல்லா பக்கமும் ஒட்டி முடித்து, முன்பக்கத்தில் ஸ்டோன்ஸ் கொண்டு பூக்கள் போல் இடது பக்கத்தில் ஒட்டவும். வலதுபக்கத்தில் ஒட்டிய நாணயத்தின் ஓரத்தை சுற்றியும் ஸ்டோன் ஒட்டவும்.
இந்த மாடல் கவரில் வேறு கலர் சார்ட் பேப்பரில் டிசைன் வெட்டி எடுத்து ஒட்டி வைக்கவும். அதன் மேலே சின்ன சாமி உருவம் ஒட்டி முடிக்கவும்.
இந்த மாடலிலும் சாதாரண சார்ட் பேப்பரில் பூ டிசைன் வெட்டி எடுத்து ஒட்டவும். அதன் நடுவே வேறு கலர் பேப்பரை வட்டமாக வெட்டி ஒட்டி வைக்கவும்.
சார்ட் பேப்பரில் டிசைன் வெட்டி எடுத்து ஒட்டி வைக்கவும். ஒரு ரூபாய் காசை வெளியே ஒட்டி விடவும். வேறுநிற ஹேண்ட் மேட் சார்ட் பேப்பரை படத்திலுள்ள டிசைனைப் போல் வெட்டி வைக்கவும். அட்டையின் ஓரத்தில் "L" வடிவில் ஒட்டி அழகுப்படுத்தவும்.
சார்ட் பேப்பரை பலூன் போன்று வெவ்வேறு கலரில் வெட்டி எடுத்து ஒட்டி கொள்ளவும். அதில் நூல் கட்டி இருப்பது போல் உல்லன் நூலை ஒட்டி விடவும். அலங்கரிக்க சிறு சதுரங்கள் வெட்டி ஒட்டவும். இது பிறந்த நாட்களுக்கு ஏற்றது.
இதில் சாதாரண மர பட்டன்களையே பூ வடிவில் ஒட்டி, அதன் சுற்றி மணிகள் ஒட்டி முடிக்கவும்.
இது போன்ற கவர்கள் மார்க்கெட்டில் 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இதில் நாம் போகும் இடத்துக்கு ஏற்றபடி கவரின் மேல் பக்கம் வேலைகள் செய்தால் அழகாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நல்ல கற்பனை. எல்லா மாடலுமே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.

ரொம்ப நல்லா இருக்கு. நல்ல ஐடியா வனிக்கா. வாழ்த்துக்கள். எனக்கும் இதுப்போல் செய்ய ஆசை இந்த பேப்பர் எங்கே கிடைக்கும் இந்த வகையான பேப்பர்களின் பெயர் என்ன? அதனுடைய விலையும் அப்படியே சொல்லுங்க அக்கா.

அய்யோ வனி ரொம்ப அருமையா நேர்ந்த்தியா இருக்கு..அப்பா சரியான ஆள் நீங்க

வாவ் சூப்பர்.....!

புது பிஸினஸ் ஆரம்பிச்சுடலாம் போல இருக்கே., ரொம்ப அருமையா செய்து காட்டியிருக்கீங்க...இந்தப் பக்கத்த நான் மனசுலேயே வச்சுக்குவேன்.. பாருங்கள் ஒரு நாள் நான் கிப்ட் என்வெலப் செய்து பெரிய பிஸினஸ் மேக்னட்டா வந்தாலும் வருவேன்.. அப்போ கண்டிப்பா உங்கலுக்கு பெரிய அமொவுண்ட் இதே என்வெலப்ல அனுப்பிடறேன்;-)

அன்புடன்
ஜெய்

Don't Worry Be Happy.

ஹாய் வனி ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ;)வாழ்த்துக்கள்....

உன்னை போல பிறரையும் நேசி.

பார்க்க அத்தனை அழகு. ஜெய் கூறியது போல பிஸினஸ் ஆரம்பிக்கலாம். பலூன் மாடல் அருமை..எப்படி தான் நீங்க இந்த மாதிரி கண்டுபிடிக்கறீங்க வனி.
பொறுமை ரொம்ப அதிகம். ஒவ்வொரு டிஸைனும் ட்ரண்டியா இருக்கு வனி. வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு வனிதா,

சூப்பர், மிகவும் அழகாக செய்து காண்பித்திருக்கீங்க. உங்க கை வண்ணமும் கற்பனை வளமும் அழகோ அழகு.

அன்புடன்

சீதாலஷ்மி

வனி எல்லா டிசைனுமே சூப்பரா இருக்கு நானும் ட்ரை பண்ணுறேன்..நான் காசு குடுத்துதான் வாங்கி இருக்கேன் இனி நானே செய்ய போறேன் ..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வனி எல்லாமே ரொம்ப அழ்கு கற்பனையும் அழ்கோ அழகு வாழ்த்துக்கள்

ஒவ்வொன்றும் அப்பிடி அருமையாக இருக்கு வனி. அசத்திட்டீங்க. ;)

‍- இமா க்றிஸ்

வனி அக்கா உங்க gift envelop super ரொம்ப அழகா இருக்கு.எனக்கும் இது போல் செய்ய
ஆசையாக உள்ளது.ஆனா இத சாட் எல்லா இடத்துலயும் கிடைக்குமா.நான் உங்க
profile பார்த்தேன் நீங்க இந்தியால எங்க இருக்கீங்க.இல்ல வெளி நாட்ல இருக்கீங்களா.எந்த
ஊரு சொல்லமுடியுமா.நீங்க இருக்க ஊருல இந்த stone கிடைக்குமா.

அன்பு ராதிகா.,

உங்க கேள்விக்கு நான் பதில் தரலாமா? ;-)

அங்க கப்டா பஜார் (துணிக்கடை வீதி) இருந்தா அங்க இருக்கிற பட்டன் ஹவுஸ்ல ஸ்டோன்ஸ் கிடைக்கும். பட்டன் ஹவுஸ் எங்க இருக்குன்னு தெரியலைனா பக்கத்தில இருக்கிற டையலரிங் ஷாப்ல கேளுங்க....

ஹேன்ட் மேட் பேப்பர் ஸ்டேசனரி ஸாப்ல கிடைக்கும்.... ஓ.கேவா;-)

அன்புடன்
ஜெய்.

Don't Worry Be Happy.

வனிதா மேடம்,
அழகான முறையில் கிஃப்ட் என்வெலப்ஸ் செய்து இருக்கீங்க..ஒரு ரூபாய் நாணயம் ஒட்டி இருப்பது
நல்ல ஐடியா ..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப அழகா இருக்கு.. வாழ்த்துக்கள்....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ரொம்ப அழகா இருக்கு.. வாழ்த்துக்கள்....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

வனி

உங்களுக்கு கண்ணு பார்த்தால் கை செய்யும்னு நினைக்கிறேன். எதவாது ஒன்றை பார்த்தால் அதை எப்படி செய்திருப்பார்கள் என்று ஆராய்ந்து நேர்த்தியாக செய்து அதை எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

கருத்து தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி. இன்று ரொம்ப நேரம் ஆயிட்டதால், நாளை வந்து எல்லா பதிவையும் படிச்சு பதில் போடுறேன்... யாரும் கோவிச்சுக்காதீங்க. மணி 2 ஆயிடுச்சு, வனிக்கு தூக்கம் தூக்கமா வருது ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிக்கா எல்லா மாடலுமே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு,வாழ்த்துக்கள் வனிக்கா.....

ரொம்ப ரொம்ப நன்றி வினோ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

க்ராஃப்ட் பொருட்கள் இருக்கும் கடைகள், ஸ்டேஷனரி கடைகள் எல்லாத்துலையும் கிடைக்கும். ஹேண்ட் மேட் பேப்பர்ஸ் தான் நான் பயன்படுத்தி இருக்குறது. ஒரு பெரிய சார்ட் 20 முதல் 25 ரூபாய் வரை கிடைக்கும். அவசியம் செய்து பாருங்க... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றி தளிகா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி.... எங்க பார்த்தாலும் என்னை வம்பிழுக்குறதே முழு நேர வேலை... ;) மறக்காம பெரிய அமவுண்டா அனுப்புங்க, என்வெலப் இன்னும் கொஞ்சம் பெரிய சைசா செய்யுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தேவி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதை செய்யும் முன் ஒரு யோசனை தான்... என்ன என்ன மாதிரி டிசைன்ஸ் இருக்க மெட்டீரியல் வைத்தே பண்ணலாம்னு ;) புதுசா வாங்க அடையார் போகனுமே... ஹிஹிஹீ. மிக்க நன்றி ரம்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாம் உங்களை போல் தோழிகள் தரும் ஊக்கமே காரணம்... ரொம்ப நன்றி சீதாலஷ்மி :) பேத்தி நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் ஒரு முறை பணம் கொடுத்து வாங்கி இருக்கேன் குமாரி... அப்பறம் தான் இது போல் நாமே ட்ரை பண்ணலாம்னு செய்தேன். அவசியம் செய்து பாருங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் வாழ்த்துக்கும் பதிவுக்கும் ரொம்ப நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா இருக்கீங்களா?? ரொம்ப நன்றி இமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் சென்னையில் இருக்கேன்... எல்லா ஊர்லையும் ஸ்டேஷனரி ஷாப்பில் நிச்சயம் கிடைக்கும். ஸ்டோன்ஸ் நான் க்ராஃப்ட் ஷாப்பில் வாங்கினேன்... நீங்க ஜெயலஷ்மி சொன்ன இடத்தில் ட்ரை பண்ணுங்க :) அவசியம் செய்து பாருங்க. மிக்க நன்றி.

பதில் அளித்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஜெய். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி கவிதா. :) குழந்தைகள் நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹிஹிஹீ... எதையாவது கடையில் பார்த்தா கூடவே விலையும் பார்போமில்ல... “என்னடா இதுக்கு இவ்வளவு விலையா??” அப்படின்னு தோனுச்சுன்னா அல்லது பார்த்த பொருள் பிடிச்சிருந்தும் வாங்கலன்னா இப்படிலாம் நாமே ட்ரை பண்ண வேண்டியது தான் :D மிக்க நன்றி லாவண்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி சுமி. நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
புதுசு,புதுசா ஏதாவது செய்துட்டே இருக்கீங்க.அத்தனை என்வெலப்களும் அவ்வளவு அழகு.நல்ல க்ரியேட்டிவிட்டி உங்களுக்கு.பாராட்டுக்கள்.

வனி ரொம்ப அழகாக இருக்கின்றது. உங்களால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகின்றது. உங்களுக்கு ஆளில்லால் அழகுராணி சகலகலவள்ளி என்று பெயர் வைத்தது தவறே கிடையாது. சூப்பர் போங்க! வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மிக்க நன்றி ஹர்ஷா... இதெல்லாம் அறுசுவையில் கத்துக்கிட்டது தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றி ரேவதி... இப்படி சொல்லி சொல்லியே செய்ய வெச்சுடறாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா