அவல் மிக்சர்

தேதி: June 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (7 votes)

 

அவல் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு பிடி
கடலை பருப்பு - ஒரு பிடி
உடைத்த கடலை - ஒரு பிடி
எண்ணெய் - பொரிக்க
கறிவேப்பிலை - சிறிது


 

முதலில் தேவையானவற்றை தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். பின்பு அதே எண்ணெயில் கடலை பருப்பு, உடைத்த கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றை தனித் தனியே வறுக்கவும்
அனைத்தையும் டிஷு பேப்பரில் போட்டு ஆற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு கொதித்ததும் அவல் சேர்த்து பொரித்து எடுக்கவும். நன்கு பரத்தி விட்டு ஆற விடவும். இல்லையெனில் நமுத்து விடும்
நன்கு சூடு ஆறியவுடன் காற்று புகாத பாத்திரத்தில் அவல், வறுத்த பருப்பு, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்
எளிமையான அவல் மிக்சர் தயார்.

இதே போல் உலர்ந்த திராட்சை, கிஸ்மிஸ், முந்திரி, ஏலம், சர்க்கரை தூள் சேர்த்து ஸ்வீட் மிக்சர் செய்யலாம். அவலில் உப்பின் அளவை பார்த்து உப்பு சேர்க்க வேண்டும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா

மாலை நேர எளிமையான ஸ்நாக். வாழ்த்துக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆஹா!! ;P ;)

‍- இமா க்றிஸ்

சூப்பர் மிக்சர்.... பார்த்ததுமே முதல் வேலையா செய்து வீட்டில் எல்லாரையும் அசத்தனும்னு முடிவு பண்ணிட்டேன். இருங்க வந்து பதிவு போடுறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல காரமான ஸ்நாக்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள் by Elaya.G

ஹ்ம்ம் இந்த கூல் கிளிமட் க்கு தகுந்த சூப்பர் ஸ்நாக்ஸ, பிரமாதம் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கவிதா,
அவல் மிக்சர் செய்வது இவ்வளவு சுலபமா?மிக்சர் எங்க வீட்டில் எல்லார்க்கும் ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பா செய்துட்டு சொல்றேன்.விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு.நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

சூப்பர் ஸ்னேக்ஸ்.. கண்டிப்பா அவல் வாங்கி விட வேண்டியது தான்.
மாலை நேரத்துக்கு நல்லா இருக்கும்
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் கவி சூப்பர் குறிப்பு, அவல் வீட்டில் இருக்கு செய்து பார்கிறேன் .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,குழுவினர்க்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

லாவண்யா,

எளிமையான குறிப்பு தான் செய்து பாருங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இமா மேடம்,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா மேடம்,

அசத்துங்க ..செய்து பார்த்துட்டு சொல்லுங்க..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இளையா,

செய்து பாருங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சுகந்தி,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,

எளிமையான முறைதான் தான் செய்து பாருங்க

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா,

செய்து பாருங்க

அவல் வைத்து நிறைய செய்யலாம்..அறுசுவையிலேயே நிறைய குறிப்பு இருக்கு

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

குமாரி மேடம்,

செய்து பார்த்துட்டு சொல்லுங்க

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவி மொறு மொறுப்பான ரெசிப்பி. இப்பொழுதிருக்கும் கிளைமெட்டுக்கு இந்த ரெசிப்பி ரொம்ப சூப்பரா இருக்கும். வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சூப்பர் குறிப்பு. செய்து பார்க்க விரும்பும் போது தான் சந்தேகம் வந்தது அவல் கெட்டி அவலா அல்லது தட்டை அவலா என்று plese clear my doubt

ரேவதி மேடம்,

செய்து பார்த்துட்டு சொல்லுங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வின்யா,

கெட்டி அவலில் தான் நான் செய்தேன் தட்டை அவலிலும் செய்யலாம் ஆனால் சீக்கிரம் பொரிந்துவிடும் பார்த்து எடுங்கள்

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய், அவல் மிக்சர் super

ஹாய் , quiz டாப் 10 சேர்வது எப்படி,யாராவது பதில் சொல்லுங்களே please

கவிதா அவல் மிக்சர் செய்து சாப்பிட்டாச்சு. ரொம்ப நல்லா இருந்துச்சு. நன்றி கவி!
சின்னதா ஒரே ஒரு மாற்றம் செய்தேன். எல்லாவற்றையும் தனித்தனியே மைக்ரோவேவ் அவனில் பொரித்தேன். அதனால் மொத்தமே ஒரு தேக்கரண்டி எண்ணெய்தான் ஆனது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

விஜி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

quiz டைம் பகுதிக்கு செல்லவும்

என்றும் அன்புடன்,
கவிதா

கவி ,
நல்ல ஐடியா..எத்தனை நிமிஷம் வைத்தீங்க?
மைக்ரோவேவில் நான் கூட ட்ரை பண்றேன் ..நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு கவிதா,

லேட்டாக வந்து பதிவு போடுவதில் கூட, ஒரு நன்மை இருக்கு போல. அடிஷனலாக ஒரு டிப்ஸ் கிடைச்சிருக்கு. கவிசிவாவின் மைக்ரோ அவன் டிப்ஸைத்தான் சொல்றேன்.

மிக்ஸர் எல்லோருக்கும் பிடிச்ச மாலை நேர ஸ்னாக்ஸ். அவசியம் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

கவி நல்ல குறிப்பு சீக்கிரம் செய்துட்டு சொல்கிறேன் வாழ்த்துக்கள்

சீதா அம்மா,

அடிக்கடி செய்யும் எளிய ஸ்நாக் இது செய்து பாருங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பாத்திமா அம்மா,

செய்து பாருங்க

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சாரி கவி உடனே பதில் போட முடியலை.

நான் அரைகப் அவலில் செய்து பார்த்தேன். அந்த அளவை சொல்றேன். முதலில் அவலில் கால் முதல் அரைத் தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கையால் நன்றாக பிசிறிவிட்டு மைக்ரோ ஹையில் 1நிமிடம் வைக்கணும். அப்புறம் வேர்க்கடலையில் சில துளிகள் எண்ணெய் விட்டு பிசிறி மைக்ரோ ஹையில் முதலி 1நிமிடம் வைத்து எடுத்து கிளறிவிட்டூட்டு மீண்டும் 1நிமிடம் வைக்கணும். பொட்டுக்கடலையும் கறிவேப்பிலையும் சேர்த்து இதே போல் ஆனால் ஒரு நிமிடம் போதும். கடலைப் பருப்பு வேர்க்கடலைக்கு செய்தது போலவேதான். கடைசியில் எல்லாம் கலந்து மிளகாய்த் தூள் உப்பு பெருங்காயம் சேர்த்து 10 முதல் 20 விநாடிகள் வைத்து எடுத்தேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவி
நானும் இந்த முறையில் செய்து பார்க்கிறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்க அவல் மிக்சர் செய்து வைத்துவிட்டேன். ரொம்ப நல்லா இருக்கு.. டீ சாப்பிட்டா சாப்பிடுவோம். ;) நன்றி..

கவிசிவா..அவன் முறையில் அடுத்து செய்து பார்க்கிறேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா,

செய்து பார்த்துவிட்டு சொன்னதற்கு நன்றி மைக்ரோவேவில் செய்தாலும் நல்லா இருக்கு..கவிக்கு திரும்பவும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா