சீடி மொசைக் வாஸ்

தேதி: June 3, 2011

5
Average: 4.1 (10 votes)

 

ப்ளாஸ்டிக் டம்ளர் - 1
பாவனைக்குதவாத சீடிக்கள் - 8-10(டம்ளரின் அளவைப் பொறுத்து)
PVA க்ளூ
சீடி ஷ்ரெட்டர்

 

சீடி மொசைக் வாஸ் செய்ய அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
முதலில் நான்கு சீடிக்களை ஒவ்வொன்றாக ஷ்ரெட்டரில் போட்டு எடுக்கவும்.
சீடி துண்டுகளை வெளியே எடுத்து, சிறிய சதுரத் துண்டுகளாகும் வரை திரும்பத் திரும்ப ஷ்ரெட்டரில் போட்டு எடுக்கவும். (நடுத்துண்டு சீடியை ஒதுக்கி விடவும்.)
நான்கு சீடிக்களை நீளத் தீரைகளாக வரும் விதமாக வெட்டி வைக்கவும்.
டம்ளரின் வாய்ப் பகுதியில் PVA க்ளூ பூசி சதுரத் துண்டுகளை வரிசையாக ஒரு வரி ஒட்டி விடவும்.
நீள சீடித்துண்டுகளை படத்தில் காட்டி இருப்பது போல் கூடியவரை நெருக்கமாக ஒட்டவும். தேவைப்பட்டால் மேலும் துண்டுகள் வெட்டி ஒட்டிக் கொள்ளவும்.
மீதமிருக்கும் கீழ்ப்பகுதியில் மீண்டும் சதுரத்துண்டுகளை ஒட்டி விடவும்.
நடுவே வரும் இடைவெளிகளுக்கு, சதுரங்கள் தெரிந்து எடுத்தது போக மீந்து இருக்கும் சீடி துண்டுகளில் இருந்து பொருத்தமான வடிவங்களில் சிறிய துண்டுகளாகத் தெரிந்து ஒட்டி முடிக்கவும். காயவைத்து எடுத்தால் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் அழகான வாஸ் கிடைக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வீட்டில் ஏகப்பட்ட சீடி இருக்கிறது. இருந்தாலும் ஷ்ரெட்டர் தான் இல்லை. சரி நீங்கள் கூறியது போல் கத்திரிக்கோலால் வெட்ட முடியும் சீடியை தெரிவு செய்து செய்கிறேன். அழகான வாஸ் செய்துக் காட்டியதற்கு மிக்க நன்றி. நல்ல கற்பனை அதை நேர்த்தியாக செய்து காட்டியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சீடியை வேஸ்ட் ஆகாமா ஒரு ப்ளாஸ்டிக் டம்ளரா ஜொலிக்கும் படி செஞ்சு காண்பிச்சு இருக்கீங்க. ரொம்ப அழகாக இருக்கு. PVA க்ளு சீடி ஒட்டுறதுக்குனு பிரத்யோகமாக இருக்கா?

இமா அம்மா நல்லா இருக்கு நீங்க செய்த வாஸ் நானும் முயற்சி செய்து பார்கிறேன் என்கிட்ட வீணான cd இருக்கு..

பார்த்து, பத்திரம். ;) முதல்ல சின்னதா செய்து பாருங்க லாவண்யா.
கத்தரிக்கோல், கிச்சன் சிசர்ஸ் எல்லாம் ட்ரை பண்ணிட்டு... கடைசியா இதுல இறங்கிட்டேன். ஒண்ணு ரெண்டு வெட்டினா கை தாங்கும். அதிகமா வெட்டினா கொப்புளம் போட்டாலும் போடும். (போட்டுது) சீரியசாவே சொல்றேன்.... எதுக்கும் ஒரு 'கார்டனிங் க்ளவ்' போட்டுக்கங்க; பாதுகாப்பா இருக்கும். பிறகு என்னைத் திட்டப்படாது, ம்.

வினோஜா... //சீடி ஒட்டுறதுக்குனு பிரத்யோகமாக இருக்கா?// தெரியல. இது பலகை, ப்ளாஸ்டிக், கடதாசி எல்லாத்தையும் நல்லா ஒட்டுது. இருக்கிற க்ளூவையே ட்ரை பண்ணிப் பாருங்க.

நன்றி தேவி, செய்து பாருங்க. ;)

‍- இமா க்றிஸ்

சிடி ஷ்ரெட்டர் கேட்டால் என் வீட்டுக் காரர் என்னை ஷ்ரெட் பண்ணிடுவார்..

கத்திரிக்கோலால் கோழியை வெட்டும் போதே சில நேரங்களில் விரல் வீங்கும்...

இந்த விஷப் பரீட்சைகள் இல்லாமல் நீங்கள் செய்து வைத்திருக்கும் அந்த பூக்கூடையை பூக்களுடன் எனக்கு அனுப்பி வைக்கவும்....

இமா சிடியை வச்சு அழகான ப்ளவர் வாஸ் பண்ணி காட்டி இருக்கிங்க...உங்க கற்பனை திறன் அருமை.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

கிடைத்த விதத்தைச் சொல்லவா தேன்! ;) போன வருஷம் 'ஸ்கூல் காலா' (gala) சமயம் கிடைத்தது. 'பேப்பர் ஷ்ரெட்டர்' உடைந்திருந்தது. யாரும் இதை வாங்கவில்லை. குப்பையில் போக இருந்ததை ஒரு குட்டி டொனேஷன் கொடுத்துவிட்டு வீடு கொண்டுவந்து சேர்த்தேன். second hand கடைகளில் இந்த மாதிரிப் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும், பாருங்க.

நன்றி சங்கீ. ;)

‍- இமா க்றிஸ்

சூப்பர் போங்க. சீடியில் பெயிண்டிங் மற்றும் வால் ஹேங்கிங் தான் பார்த்து இருக்கேன். இப்படி ஒரு கலை நய பொருளை இப்போ தான் பார்க்கிறேன். எப்படி இந்த யோசனை வந்தது உங்களுக்கு ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இமா மேடம்,
ரொம்ப அழகா இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆஹா..அருமை..பூக்களுக்கு நடுவே புல் போல் தெரிவது உங்கள் சொந்த முயற்சியா..இல்லை கடையில் வாங்கியதா.. கிராப்ட் ஒர்க் உங்களுக்கு அழகான கற்பனை திறனுடன் நன்றாக வருகிறது :))

radharani

சிடி கட் பண்றக்கு எவளோ பொறுமை வேணும் :-(
ரொம்ப அழகா நிதானமா பண்ணி இருக்கீங்க. ஷ்ரெட்டர் இல்லாம பண்ண முடிஆதுன்னு நினைக்கறேன், சரியா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

//http://www.arusuvai.com/tamil/node/9635// கமண்ட்ஸ் பாருங்க ரம்யா. (படம் இப்போ இல்லை.) தாஹிரா பானுவுக்கு ஒரு பெரிய தாங்ஸ் சொல்ல வேண்டும் நான். நினைவுபடுத்தியமைக்கு நன்றி. 30/12/2009 முதல் சீடீ வெட்ட முயற்சிக்கிறேன். இங்கு கிடைக்கும் சீடீ எதுவும் அவங்க சொல்லி இருந்த மாதிரி கிச்சன் நைஃப் கொண்டு வெட்ட முடியவில்லை. ;( ஒவ்வொன்றாக முயற்சித்து கடைசியில் ஷ்ரெட்டர் ஐடியா வந்தது.

நன்றி கவி.

அது ரெடிமேட் ராதா. ;)

கையால் வெட்ட முடிந்தால் விளிம்புகள் அழகாக வரும் சுகி. (மேலே ரம்யாவுக்கு சொன்ன பதில் பாருங்க.) அளவும் விரும்பிய மாதிரி வெட்டலாம். இங்கு கிடைக்கும் சீடீக்களை வெட்ட இயலவில்லை. ;(

‍- இமா க்றிஸ்

இப்படிலாம் வித்தியாசமா வித விதமா யோசிக்க உங்களால் தான் முடியும்!!! அசத்திட்டிங்க!!! வேறென்ன சொல்ல??? சொல்ல வார்த்தை வராத அளவுக்கு அழகு உங்க கைவினை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உபயோகமில்லாத சாதாரண பொருள்களையும் கூட அழகான கலை நயமிக்க பொருள்களாக மாற்ற முடியும் என்று செய்து காண்பித்துள்ளீர்கள். மிக அழகாக இருக்கிறது.

அன்புடன்
THAVAM

அன்பு இமா,

சூப்பராக இருக்கு.

பல வருடங்களுக்கு முன், கிராமஃபோன் ரெகார்டுகளை, ஓரங்களில் மெழுகுவர்த்தியினால் சூடு படுத்தி, அழகிய வளைவுகளாக வளைத்து, ட்ரேக்கள் செய்ததுண்டு. அது ஞாபகம் வருது. சி.டி.களை அப்படி சூடு படுத்தினால் .. முழுதும் உருகி விடுமோ என்னவோ, தெரியலை.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி வனி, தவமணி & சீதாலஷ்மி. ;)

மெழுகு வர்த்தி டெக்னிக் முயற்சித்துப் பார்க்கிறேன். சொன்னதுக்கு நன்றி. கார்ல டாஷ்போட்ல இருக்கிற சீடீ சமயத்தில் நெளிஞ்சு போய் இருக்கும். சோ.. சரிவரலாம். என்ன, ப்ளாஸ்டிக் எரியும் போது வாசனை ஒன்று வரும்.... அதுதான் யோசனையாக இருக்கிறது சீதாலக்ஷ்மி.

//க்ராமஃபோன் ட்ரே// ஆன் த வே. ;)) நல்ல ஐடியால்லாம் குடுக்கிறீங்க. நல்லா க்ராஃப்ட் செய்வீங்க என்று தெரியுது. சமையல் மாதிரி இதையும் எங்களோட இங்க பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா? எதிர்பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா ரொம்ப அழகா இருக்குங்க உங்களோட சீடி மொசைக் வாஸ்....வாழ்த்துக்கள்....

பாராட்டுக்கு நன்றி சுமதி. ;)

‍- இமா க்றிஸ்