வெஜ் சால்னா

தேதி: June 3, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (7 votes)

 

வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
பீன்ஸ் - சிறிது
பச்சைமிளகாய் - மூன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
கரம்மசாலா - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு - தேவையான அளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - மூன்று துண்டுகள்
பொட்டுக்கடலை - அரை கைப்பிடி
சோம்பு - ஒரு தேக்கரண்டி


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயம் தக்காளியை நறுக்கவும். காரட் பீன்ஸை நீளமாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கி காரட், பீன்ஸ் சேர்த்து உப்பு சிறிது சேர்த்து வதக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
காய்கள் சிறிது வெந்ததும் கரம் மசாலா சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
வெந்ததும் அரைத்தவற்றை சேர்த்து கிளறவும்.
ஐந்து நிமிடம் கொத்தித்ததும் இறக்கி பரிமாறவும்.
சூடான வெஜ் சால்னா ரெடி. பரோட்டா, சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ருக்ஸ் சப்பாத்திக்கு குருமா இந்த மாதிரி செய்வோம் நல்ல இருக்கும். நீங்களும் அதே மாதிரி செஞ்சு காண்பிச்சு இருக்கீங்க.

பரோட்டா கடையில் கிடைக்கும் சால்னாவா இது
பார்க்க நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என்னங்க கலர் கலரா குறிப்பு வருது, உங்களை காணோம்???!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ருக்சானா

வெஜ் சால்னா நல்லா கலர்ஃபுல்லாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

hi madam
your dish is super, yesterday i have tried for chapathi.
it will comes super, my husband told its like hotel veg challena.
that credits goes to you, thank u

Romba nalla irunthichi,, ipo tha samaika kathukiten..ana athukulave nalla samikaren nu ore paratu malai..thank you so much...

அருமையாக இருந்தது சால்னா... நேற்று இரவு பரோட்டாக்கு செய்தேன். சூப்பர். நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா