கட்டைவிரல் சப்பும் பழக்கத்தை எப்படி நிறுத்துவது

என் குழந்தைக்கு 5 மாதம் ஆகிறது. அவள் கட்டைவிரல் சப்புகிறாள். எப்படி நிறுத்துவது. இப்பொழுது நிறுத்தாவிட்டால் வளர்ந்தாலும் அந்த பழக்கம் மாற்றமுடியாது அல்லவா. விரல் சப்பினால்தான் தூங்குகிறாள், மிகவும் கவலையாக உள்ளது. ஏதேனும் வழிமுறை உள்ளதா, உதவுங்கள் தோழிகளே.

help me friends plssssss

வேப்பெண்ணை யை விரலில் வைத்து விடவும் by elaya.G

hai meena என் மகளும் இப்படித்தான் செய்தாள். நான் அவளுக்கு குளிர் காலத்தில் wollen hand gloves அணிவித்தேன்.முதலில் அழுதாள். பின்பு விட்டுவிட்டாள். 2 நாளில் மறந்துவிட்டாள். நீங்களும் இதே போல் செய்து பாருங்க.

அன்பு மீனா,

anjutvl தோழி சொன்னமாதிரியே பண்ணுங்க நானும் அப்படிதான் செய்தேன்.
காட்டன் கிளவுஸும் கிடைக்கும். எலாஸ்டிக் டைட் இல்லாமப் பாத்துங்குங்க. போட்டதும் அழுதா கொஞ்சம் கழட்டிட்டு மறுபடியும் போட்டு விடுங்க. வேப்பெண்ணை வேண்டாமுனு நினைக்கிறேன் அஞ்சு மாதக் குழந்தையில்லையா.

அன்புடன்
ஜெய்.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்