வெங்காயம் மற்றும் தக்காளி அரைத்த விழுது

நான் காலையில் என் குழந்தை தூங்குவதால் மிக்ஸி போடுவதில்லை ஆனால் கார குழம்பு,kurma மற்றும் வெங்காய சட்னி போன்றவை செய்ய வெங்காயம் மற்றும் தக்காளி அரைத்த விழுது இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். விழுது களை முந்தின நாள் இரவே தயாரித்து பிரிட்ஜில் வைக்கலமா? இரு வேளை உனவையும் நான் காலையில் 40 நிமிடத்திகுல் செய்தாகவென்டும் என்பதால்,தெரிந்வர்கள் சொல்லுஙல் please.எவ்வாறு அரைத்து வைக்கலாம் என்றும் எவ்வளவு நேரம் வதக்கினால் பச்சை வாசம் போகும் என கூறவும்.

தக்காளி வைக்கலாம். வெங்காயமும் வைக்கலாம் என்றுதான் நினைக்கிறேன். கலர் மட்டும் கொஞ்சம் மாறி இருக்கும். எதுக்கும் மற்ற தோழிகள் என்ன சொல்றாங்க என்று பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

என்னுடைய தோழி இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒரு நாளைக்கு தேவையான அளவுகளில் பாக்கட்டில் போட்டு ப்ரிசரில் வைத்து விடுவாள். சமைப்பதற்கு முன்பு பாக்கெட்டோடு லேசான சுடுநீரில் போட்டு அரைப்பு இலகியவுடன் சமைப்பாள். நான் இதை ட்ரை பண்ணியதில்லை. இன்னிக்கு பண்ணிப்பாத்து எப்படி இருந்ததுன்னு நாளைக்கு சொல்றேன்மா;) இஞ்சி பூண்டு விழுது, ஸ்பைனாச் இவைகளையும் இதே முறையில் சமைப்பாள்.

Don't Worry Be Happy.

நன்றி imma,jaya sisters, ப்ரிட்ஜில் வைப்பதை விட ப்ரிசரில் வைத்தால் நன்றக இருக்கும் என நினைக்கிறேன். குறிப்புக்கு நன்றி

எனக்கு தெரிஞ்சு தக்காளி அரைத்து பிரிஜ்ஜிலேயே வைக்கலாம். நான் பார்ட்டிக்கு அப்படி வைத்து பயன்படுத்துவதுண்டு. ஆனா வெங்காயம் நறுக்கி கூட வைக்க கூடாதுன்னு சொல்வாங்க. நறுக்கி வைத்தா அதில் இருந்து வரும் ஒரு நீர் போன்ற திரவம் உடம்புக்கு கெடுதல் தரும்னு ஒரு செஃப் சொன்னார். சில தோழிகளும் சொல்லி கேட்டிருக்கேன். அதனால் எத்தனை வேலை இருந்தாலும் நான் வெங்காயம் மட்டும் நறுக்கியோ, அரைத்தோ பிரிஜ்ஜில் வைப்பதில்லை. குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு... சற்று நல்லா விசாரிச்சு செய்யுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்