காசு மேல காசு வந்து கொட்டினால்...

எல்லோருக்கும் "அருணாச்சலம்" படம் ஞாபகம் இருக்கும். அதில் ரஜினிக்கு அவங்கப்பா கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்திருப்பார். அந்த சொத்தில் ஒரு பகுதியை வரவில்லாமல் செலவு பண்ணினால் தான் மீதம் உள்ள பணம் கிடைக்கும் என்று பாடாய் படுவார். அதே அதே தான்...நீங்கெல்லாம் யாரு நான் சொல்வதற்குள் யூகித்தேவிட்டீர்களா?

நமக்குள்ளே எப்பொழுதுமே ஒரு கதாசிரியர் அல்லது ஒரு கற்பனை குதிரை ஒன்று ஓடிக் கொண்டே இருக்கும். அதனால் அதை தட்டி எழுப்பெல்லாம் வேண்டாம்.....அப்படியே உங்களுக்கு ஒரு அமௌன்ட் அப்படி கிடைத்து செலவு பண்ணனும் என்றால் என்ன செய்வீர்கள்...ரூல்ஸ் எல்லாம் அந்த படம் மாதிரி தான்......உங்களின் கற்பனையை படிக்க ஆவாலாய் காத்துகொண்டிருக்கும்.....

லாவண்யா

அன்பு லாவண்யா,

கோடிகளைக் கொட்டிக் கொடுத்திருக்கீங்க, மிகவும் நன்றி!

ரூல்ஸ் எல்லாம் அந்தப் படம் மாதிரிதானா? மிச்சம் வைக்காமல் செலவு பண்ணனுமா? அதுதான் ரொம்பக் கஷ்டம்! ஓ.கே., ஓ.கே., அப்படி 30 கோடிகளை செலவு பண்ணிட்டால், 3000 கோடிகளைத் தந்து விடுவீங்கதானே:):)

எனக்கு டூர் போக வேண்டுமென்று ரொம்ப ஆசை, ஆனால் நான் கொஞ்சம் சொகுசு சுந்தரி. அதனால் பயண அலுப்பை நினைச்சுப் பயந்தே, அதிகம் எங்கேயும் போவதில்லை.

இப்ப இந்த 30 கோடி கிடைச்சாச்சே, அதனால் முதலில் தமிழ் நாட்டில், இந்தியாவில் இருக்கும் இடங்களுக்கு,(108 திருப்பதி, 12 ஜோதிர்லிங்கம், 64 சக்தி பீடம், நவ நரசிம்மர் என்று பத்திரிக்கைகளில் வெளி வரும் எல்லாப் பகுதிகளையும் பத்திரமாக எடுத்து வச்சிருக்கேன், ரெஃபரன்ஸுக்கு) சொகுசு ரயில், ஃப்ளைட் என்று டிக்கட் எடுத்துக் கொள்வேன்(குடும்பத்தினர் எல்லோருக்கும் சேர்த்துத்தான்) இறங்குகிற இடத்தில், இனோவா காருடன் ட்ராவல் கைட் காத்துகிட்டு இருக்கணும். நல்ல ஸ்டார் ஹோட்டல்களில் ஸ்டே, சாப்பாடு. ஊரை சுத்திப் பாத்துட்டு, அந்த அந்த ஊர்களில் இருக்கும் ஆசிரமங்களுக்கு நன்கொடை, அன்னதானம், படிக்கிற பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ், ட்ரெஸ், புக்ஸ் என்று வாரி வழங்கி விடுவேன்.

30 கோடி போதுமா, இந்த ப்ளானுக்கு?

அப்புறம் அந்த 3000 கோடிக்கும் நிறைய ப்ளான் வச்சிருக்கேன், நீங்க பெர்மிஷன் கொடுத்தால் சொல்கிறேன். அல்லது அதற்கு ஒரு தனி இழை ஆரம்பிங்க, அங்கே சொல்றேன். இங்கே சொன்னால், இந்த இழையில் டைவர்ஷன் ஆகிடும் இல்லையா

அன்புடன்

சீதாலஷ்மி

முடியலை. வலிக்குது. அழுதுடுவேன்.

ஹையா முப்பது கோடி எனக்கே எனக்கா!!! உங்களை எல்லாம் விட்டுட்டு நான் மட்டும் அதை தனியா என்ஜாய் பண்ணுவேனா! யாரது அங்கே தொண்டையை செருமறது :D. நம்ப மாட்டீங்களே! ஆனா நீங்க நம்பித்தான் ஆகோணும். எனக்கு முப்பது கோடி கிடைக்குதுன்னு சொன்னா நம்பறீங்கல்ல அப்போ இதையும் நம்பித்தான் ஆகோணும் வேற வழியில்லை :))

நம்ப அறுசுவை உறுப்பினர்கள் எல்லாரையும் நம்ப பாபு அண்ணா தலைமையில் வேர்ல்ட் டூர் கூட்டிட்டுப் போவேன். பிசினஸ் கிளாசில் தான் பயணம். நட்சத்திர ஹோட்டல்களில்தான் உணவு ஓய்வு எல்லாம். சொகுசு கார்களில்தான் ஊர் சுற்றல். (இதுக்கெல்லாம் அந்த முப்பது கோடி போதுமா!)

அந்த டூர்பற்றிய பயணக்கட்டுரை விரைவில் நம் அறுசுவையில் வெளியாகும். ஹி ஹி முடிஞ்சா நானே எழுதறேன். இல்லேன்னா நம்ப மக்கள்ஸ் எல்லாருகும் கற்பனை குதிரை வேகமா பறக்குமே! நல்லா நகைச்சுவையா எழுதி கலக்குங்க பார்ப்போம். நாம கற்பனை டூர் போய் ரொம்ப நாளாகுதுல்ல!

சரி சரி லாவண்யா அந்த மூவாயிரம் கோடி எப்போ கிடைகும்?!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கு அந்த மாதிரி பணம் கிடைத்தால் என்னவெல்லாம் பண்ணுவேன் என்று யோசித்தேன். கீழே உள்ள அனைத்தையும் பண்ணனும்னு ஆசை.

கடைசி நிமிஷத்தில் பிளைட் டிக்கெட் புக் பண்ணி ஊர் சுற்றி பார்த்து விட்டு வருவேன். கடைசி நிமிஷத்தில் புக் பண்ணினால் தானே டிக்கட் விலை மலை போல இருக்கும்.

ஒரு பர்சனல் ட்ரெய்னர் வெச்சி சைஸ் ஜீரோவுக்கு போய்டுவேன். (சொல்லும்போதே ஆசையாய் இருக்கே...இதெல்லாம் கனவுலேயும் நடக்கவே நடக்காதுன்னு உள்மனசு (உண்மையை மட்டும் தான் பேசும்) சொல்லுது!)

எனக்கு எதெல்லாம் படிக்க ஆசையாய் இருக்கோ அந்த கோர்செல்லாம் படிப்பேன் (இது படிப்பு தானே அதனால் வரவு கணக்கில் வாராதில்லையா?)

ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாடகைக்கு வாங்கி எதாவது ஒரு பண்டிகையை வானத்தில் கொண்டாடுவேன்.

நல்லாயிருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை ரிப்பேர் ஆக்கி விட்டு சரி பார்ப்பேன் இல்லைனா புதுசு வாங்கிவிடுவேன். (இது எப்படி சொத்தாகும்...அது தான் நமக்கு ஏற்க்கனவே இருந்ததில்லையா?)

எதாவது ஒரு ஹாபியை கற்றுக்கொள்ள செலவழிப்பேன்.

இன்னும் யோசித்துவிட்டு வந்து சொல்கிறேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்க இருந்தாலும் உஷார் தான்....செலவு பண்றதுக்கு முன்னாடி வரவை பற்றி உறுதி படுத்திக் கொண்டு தான் ஆரம்பிக்குறீங்க.... சரி முதலில் செலவு பண்ணலாம்...அப்புறம் யாருக்கு அந்த மூவாயிரம் கோடி என்று பார்க்கலாம்.

செல்லாது செல்லாது.....பணத்தை செலவு செய்ய சொன்னா.....நீங்க என்னடானா ஆன்மீக டூர் போறீங்களா? அதுவும் நீங்க மட்டுமல்லாது குடும்பத்தையும் வேற சேர்த்துக் கொண்டு .......என்ன கொடுமைடா இது.....(இதுல புக்கெல்லாம் வேற ......) ஐயோ முடியலை....

முப்பது கோடி பிளானை படித்தே நான் ஆடி போய் இருக்கிறேன்....மூவாயிரம் கோடி பிளானை தாங்குற அளவுக்கு எந்த சின்ன ஹார்ட்டில் இடம் இல்லை :(

உங்களுக்கு குடுத்த பணத்தை வாபஸ் வாங்க போறேன் பாருங்க :)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வித்யாவுக்கு இந்த டாபிக் பார்த்து முடியலையா இல்லை சீதலக்ஷ்மியின் ப்ளான் பார்த்தா :)

எது எப்படியோ உங்களுக்கு குடுத்த முப்பது கோடிக்கு கணக்கு வரலையே?

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//நாம கற்பனை டூர் போய் ரொம்ப நாளாகுதுல்ல! //- ஆமாம் கவி. எங்களையெல்லாம் ஒரு முறை அழைச்சுட்டு போங்களேன். சீனியர் டூ ஜுனியர் வரை எல்லோரும் உங்க டூர்ல வரமாதிரி அழைச்சுட்டு போகனும். //அந்த மூவாயிரம் கோடி எப்போ கிடைகும்// யூஎஸ்ல பத்திரமா ஒரு பங்களாவுல வைச்சு இருக்காங்களாம்:-) லாவண்யா. அப்புறம் அட்ரெஸ் கேட்டு சொல்லுறேன். நம்ம போய் எடுத்துக்கலாம்.

இருந்தாலும் கவி உங்களின் மனதை நான் என்னன்னு சொல்ல....

பாசக்கார பய புள்ளைக...விட்டுட்டு (அதுக்கு மேல பேச்சு வரலை அழுகாச்சி தான் ).... :) தொண்டையை செருமல.....விம்முறேன்......யாரவது தண்ணி குடுங்கப்பா....அப்படியே கைக்குட்டை இருந்தாலும் குடுங்க...

நான் நம்புறேன்....நீங்க சொல்லுங்க...

உலகத்தை சுத்தி காட்ட போறீங்களா.....ஐ ஜாலி....தலைமை ஓகே....இதற்க்கு கைட் யாரு, கோஆர்டினேட்டர் யாரு, நம்பலை மேய்க்க போற டீச்சர் யாரு (அது தான் பாபுவா?).....

டூர் முடிஞ்சி ஊருக்கு திரும்பி வந்தவுடன்....உங்களுக்கு மூவாயிரம் கோடி வந்துடும்....ஓகேவா.....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அமாம் கவி.....இதற்க்கு முன் நீங்கள் எழுதிய கற்பனை டூர் எங்கோ படித்து சிரித்து ரசித்த ஞாபகம்...திரும்பவும் ஒன்று வெளியிடுங்கள்.....

வினோ...பணமெல்லாம் அப்புறம் கேட்டு வாங்கி கொடுக்கலாம்.....உங்களுக்கு குடுத்த பணத்துக்கு என்ன வழி....முதலில் அதை சொல்லுங்க :) (இருந்தாலும் இப்படி யூஎஸ்ல இருக்கு னு சொல்லாதீங்க....இங்கிருக்கவங்களுக்கு தெரிஞ்ச அந்த கற்பனை பணத்திற்கும் டாக்ஸ் கட்ட சொல்லுவானுக.)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கு வாயெல்லாம் பல்லா தான் இருக்கு இவளோ கோடி திடிர்னு குடுத்து செலவு பண்ண சொன்ன என்ன பன்வேன் ந
லாவண்யா அக்கா சொல்லிடிங்க அதுக்காக என்னோட ஆசைலாம் சொல்லுறேன் முதல் ல என் நண்பர்கள கூப்டுகிட்டு ஊற நல்லா சுத்துவேன் என்னலாம் தின்னநுண் ஆசைபட்னோ அதலாம் வாங்கி கொஞ்சமா ருசி பார்ப்பேன் அப்பறம் முக்கியமா சீனா போய்ட்டு சீனா பெருஞ்சுவர் சுத்தி பார்ப்பேன் அநாதை குழந்தைகளுக்காக நெறைய செய்வேன். எங்க ஊருல பெரிய பொருட்காட்சி நடத்தி எங்க ஊரு ஆளுங்களுக்குலம் ஆச்சரியத்த குடுத்து சந்தோசபட்துவேன்இப்டி நெறைய இருக்கு அக்கா by elaya.G

மேலும் சில பதிவுகள்