17 வார க்ர்ப்பம் -- வயிற்றில் எரிச்சல்?

ஹலோ தோழிகளே, நான் 17 வாரம் கர்ப்பமாக உள்ளேன். எனக்கு பசி சுத்தமாக இல்லை. சிறிது சாப்பிட்டாலும் வயிற்றின் வலப்புறத்தில் எரிச்சல் உண்டாகிறது .குழந்தையின் அசைவு எப்போதிலிருந்து தெரியும். எவ்வாறு உணர்வது வயிற்றுக்குள் எதோ குத்துவது போல் உள்ளது. இதுவும் அசைவு தானா. முதல் குழந்தை என்பதால் சந்தேகங்கள் பல உள்ளது. தெரிந்தவர்கள் சொல்லுங்க ப்ளிஸ்.............

ஹாய் கௌரி உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.இந்த சமயத்தில் மசாலா உணவுகளை தவிர்க்கவும். நான் கர்ப்பமாக இருக்கும் போதும் இது போல எனக்கும் ஒரே வயிற்று எரிச்சல் இருந்தது. பின் எனக்கு ட்ரிப்ஸ் ஏற்றினார்கள். அதிக மசாலா கலந்த உணவுகளை தவிர்க்குமாறு டாக்டர் அறிவுரை கூறினார்.முதலில் பயப்படாதீர்கள் பாசிடிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்ளவும்.5 மாதத்திற்கு பிறகுதான் இதய துடிப்பு கேட்கும்..எதற்கும் டாக்டரிடம் உங்கள் உணர்வுகளை சொல்லவும்.அழகான குழந்தையை பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்.

நன்றி சுந்தரி, வாழ்த்துக்கள்.

ஹாய் தோழிகளே,
நான் இப்போது 10 வார கர்ப்பம். எனக்கும் அதே வயிறு எரிச்சல், வயிறில் குத்துவது போன்ற வலி இருந்து கொண்டே உள்ளது. நானும் நிறைய தண்ணீர், தர்பூசணி சாப்பிடுகிறேன்.
ஆனாலும் எரிச்சல் குறைந்த பாடில்லை. இதற்க்கு எதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்களேன்.

அத்துடன் சிலர் பெட் இல் தூங்குவதால் சூடு அதிகம் ஆகும், அதனால் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

நன்றியுடன்,
மகாசங்கர்

வாழ்த்துக்கள்.நான் எரிச்சல் இருக்கும் போது சீரகம் சாப்பிடுவேன்.மற்றும் தினமும் சீரக தண்ணிர் குடிப்பேன்.இது உடம்பின் சூட்டை தணிப்பதுடன் செரிமான பிரச்சனையும் தவிர்க்கும்.

மேலும் சில பதிவுகள்