தேங்காய்ப்பால் கோழி குழம்பு

தேதி: June 7, 2006

பரிமாறும் அளவு: 4 - 5 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - ஒன்று
தேங்காய் - பாதி மூடி
சின்ன வெங்காயம் - 25
முழு பூண்டு - 2 அல்லது 20 பல் பூண்டு
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 15
இஞ்சிப்பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - 4
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு பிடி
சூரியகாந்தி என்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்


 

கோழியை வெட்டி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயம்,பூண்டை உரித்துக்கொள்ளவும்.
தேங்காயை துருவி கெட்டியான முதல் பாலை தனியாகவும், இரண்டாவது பாலை தனியாகவும் வைக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைக்கவும்.
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
கோழி சேர்த்து நன்றாக வதக்கி, இரண்டாவது தேங்காய்ப்பாலை சேர்த்துக்கிளறி பாத்திரத்தை ஒரு தட்டு போட்டு மூடி 15 நிமிடம் வேக வைக்கவும்.
நன்றாக வெந்தததும் முதல் பாலை ஊற்றி கிளறி 5 நிமிடம் கழித்து எண்ணெய் தெளிந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


இந்த சமையல் என் பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்டது. மிளகாய்த்தூள் இல்லாமல் செய்யப்படும் குழம்பு இது.
மட்டன் உபயோகப்படுத்தியும் செய்யலாம். இதே செய்முறைதான். ஆனால் மட்டனை குக்கரில் 3 சவுண்ட் வரை வேக வைக்கவும். பிறகு முதல் பாலை ஊற்றவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தேவா,
இதுவரை கோழிக் குழம்பை தேங்காய்ப் பால் சேர்த்து சமைக்கலாமுன்னு உங்கள் மூலம் கத்துக்கிட்டேன்.
வீட்டில் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் பாராட்டினார்கள்.
நான் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தேவா மேம் உங்கள் கோழிகுழம்பு செய்தேன் சுவை வித்தியாசமாக இருந்தது ..சூப்பராக இருந்தது நன்றிமேம்..

வாழு, வாழவிடு..