அனைவருக்கும் வணக்கம்,
நான் 6மாத கர்பமாக உள்ளேன், கர்பிணி பெண்கள் பொதுவாக சுரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது எந்த வேலையும் செய்ய கூடாதுனு சொல்லுவாங்க இதை பற்றி மேலும் தெரிந்தால் என்னை போன்ற கர்பிணிகளுக்கு உதவுங்கள். நாளை சந்திர கிரகணம் எற்படும் என்று நெட்டில் கண்டேன். உதவுங்கள் தோழிகளே..........
மூட நம்பிக்கை
தோழி கலைநிதி முதலில் இது போன்ற மூட நம்பிக்கையை விட்டு விடுங்கள்
இயற்கயாக நடப்பது எல்லாம் இயற்க்கை தான் அதனை ஒன்றும் செய்ய இயலாது அதற்க்காக வேலை செய்யக் கூடாது என்றெல்லாம் இல்லை
நானும் இப்போது 8 மாத கர்பம் தான்
உதாரணத்திற்க்கு 9 மாத கர்பமான பெண்ணுக்கு சூரிய சந்திர கிரகண நாட்களில் வலி வந்து விட்டால் என்ன செய்ய முடியும்??
குழந்தை பெறக்கூடாது என்று தள்ளி போட முடியுமா?? இயற்க்கை இயற்க்கை தான்
இது மூட நம்பிக்கை அல்ல முன் எச்சரிக்கை.
வணக்கம் nafi,
நீங்கள் சொல்வது எற்கபட வேண்டிய ஒன்று. எல்லாமே மூடநம்பிக்கை என்று ஒதுக்க முடியாது முன்னெச்சரிக்கையும் தேவை. இதில் scientific ஆக பார்க்க வேண்டியதும் இருக்கிறது. இந்த பதிவு எனக்கு மட்டும் அல்ல pregnancy ladies எல்லோருக்கும் பயனுல்லதாக இருக்கும் என நினைத்தேன். பதிவிட்டேன்.
BE HAPPY MAKE OTHERS HAPPY
கிரகண உன்மைகள்
சூரியனில் இருந்து வெளிவரக் கூடிய கதிர்களால் மின் சாதனங்கள் பழுதடையும் வாய்ப்பு உள்ளதென்று சென்ற வருடம் அறிவியலாளர்கள் கூறினார்களே, அதுபோல சந்திர, சூரிய கிரகணங்களின் பொழுது கர்ப்பினி பெண்களுக்கு கெடுதல் உண்டாகலாம் என்பதை விஞ்ஞானம் இப்பொழுது ஒத்துக் கொண்டு எச்சரிக்கை செய்துள்ளது. ஆகவே நாளை இரவு 11.30க்கு ஆரம்பித்து அதிகாலை 2.50வரை நீடிக்கும் கிரகண சமயத்தில் கர்ப்பினி பெண்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இது மூட நம்பிக்கை அல்ல. விஞ்ஞான உன்மை.
அன்புடன்
THAVAM
என் மாமியார் எனக்கு சொன்னது
என் மாமியார் எனக்கு சொன்னது கிரகணம் ஆர்ம்பிப்பதற்கு இரண்டு மணி நேரத்க்குமுன்பே சாப்பிட்டுவிட வேண்டும் கிரகணனேரதில் சாப்பிட்டால் செரிக்காது அந்நேரத்தில் வெளியில் எங்கும் செல்லக்கூடாது வெட்டுவது தைப்பது போன்ற்வறேஇ செய்யக்கூடது கிரகணம் முடிந்ததும் தலைக் குளித்துவிடவேண்டும்
நன்றி,...
பதிவு அளித்த தோழிகளுக்கு நன்றி,...
BE HAPPY MAKE OTHERS HAPPY