பாண்டிச்சேரி ஸ்பெஷல்!

ஹலோ தோழிகளே,

எல்லாரும் நலமா? எனக்கு ஒரு உதவி வேண்டும். இந்த முறை இந்தியா பயணத்தின்போது, பாண்டிச்சேரி போகலாமென்று ஒரு ஐடியா இருக்கு! அங்கே எங்கெங்கே ஷாப்பிங் நல்லா பண்ணலாம்? எந்தெந்த கடைகளில் என்னமாதிரியான பொருட்கள் கிடைக்கும். அப்புறம் எந்தெந்த இடங்கள் குழந்தைகளோட சுற்றிப்பார்க்க நன்றாக இருக்கும்.

எனக்கு தெரிந்த இடங்கள், சுற்றிப்பார்க்க Auroville & Beach! இது இல்லாமல் என்ன ஸ்பெஷல் அங்கே?! அப்புறம் எங்கே தங்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் பாண்டிச்சேரி பற்றி தெரிந்த தோழிகள் வ‌ந்து சொல்லுங்களேன், ப்ளீஸ்! நான் பலப்பல‌ வருடங்களுக்குமுன் போனதுண்டு, இப்ப எதுவும் ஐடியா இல்லை! அதனால், உங்கள் கருத்துக்கள் கட்டாயம் உபயோகப்படும். நன்றி!

ஹாய் susri
pondicherry போறப்ப saturday, sunday, வர மாதிரி பாத்துகோங்க, மணக்குள விநாயகர் கோவில் இருக்கு, பக்கத்திலேயே அன்னை ஆஷ்ரம் இருக்கு. அத பாத்துகிட்டு அப்படியே J.N street போங்க, நிறைய ஷாப்பிங் பண்ணலாம் Saturday எல்லா கடையும் திறந்து இருக்கும் பா, சண்டே எல்லாம் க்ளோஸ் ஆகி platform kadai போட்டு இருப்பாங்க,

ஹோடேல்ஸ் பத்தி தெரியல, jn street la அர்டிபிசியால் ஜெவேல்ஸ் நிறைய கிடைக்கும், அப்புறம் நிறைய கடை இருக்கு டிரஸ் வாங்க, சென்னை ய விட கம்மியா இருக்கும். (my opinion)

http://www.pondicherrytourism.org/ indha site அ பாருங்க
அப்புறம் pondicherry govt, ponlait ghee வாங்க மறகாதிங்க. taste excellent a இருக்கும்,

try these shops
richie rich ice cream parlour
mittai mandhir chat shop
நிறைய இருக்கு இப்போ மறந்துடுச்சு நியாபகம் வந்தா சொல்றேன்

நம்ம செந்தமிழ் செல்வி பாண்டி தான்னு நியாபகம்... அவங்களை கேளுங்க ஹோட்டல்ஸ் பற்றி தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ப்ரியாமகேஷ்,

உடனடியா வந்து பல நல்ல தகவல்களோட பதிவு போட்டிருக்கிங்க. ரொம்ப தேங்ஸ் ப்ரியா. ஹோட்டல்ஸ் பத்தி வேற தோழிகள் வந்தும் எதாவது சொல்றாங்களான்னு பார்ப்போம், இல்லைன்னா நான் விசாரிச்சிக்கிறேன்.

நீங்க‌ சொன்ன‌ பாய்ண்ட்ஸை எல்லாம் நோட் ப‌ண்ணி வைச்சிகிட்டேன்! க‌ட்டாய‌ம் ஒரு வீக்கெண்ட் இருக்கிற‌ மாதிரி போய், அப்ப‌டியே மணக்குள விநாய‌க‌ரையும் த‌ரிசிச்சிட்டு வ‌ரோம். மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஆமாம் வ‌னி, பாண்டிச்சேரி என்ற‌துமே ந‌ம்ம‌ செல்வியக்கா நியாப‌க‌ம்தான் வந்தது. அவங்களை இப்பல்லாம் ரொம்ப அறுசுவையில் பார்க்கமுடிவதில்லை. அதான், எப்ப‌டி அவ‌ங்க‌ளை கான்டாக்ட் ப‌ண்ணுவ‌து என்றுதான் யோசித்துகொண்டு இருந்தேன். அக்க‌றையா வந்து எனக்கு நியாப‌க‌ப்ப‌டுத்திய‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி வ‌னி!

அன்புடன்
சுஸ்ரீ

hi, how r u? i am also pondichery. now i am in france.
for shoping J.N street, and boat house in near ariyankuppam,
panjavadi anjiniyar koil in near jipmer,
usstari boat house and pondicherry beach is super.
in M.G Road so many hotels.
for tourist i know one house for rent with all equipments.if you intrested means
give your landline no or email id. i will contact you......................

Hai, I am vijaya,pondicherry is an intresting place. There are more places to visit,just like manakulavinayagar koil,arabindo asharam,aurocille,birithiyangara devi koil,beach,boat house in nonankuppam,botanical garden,museum,sunday market, theatres,and water theme park near pondicheery usetari, and more. If you have further details pls conduct me in texgeevee@gmail.com.

sacrifice anything for love, donot sacrife love foe anything

சுஸ்ரீ,
ஊருக்கு போகும் முன்னரே டூர் பிளான் பண்ணுறீங்க!!!
நானும் இரண்டு முறை அங்கே போயிருக்கேன் பா..சென்னையில் இருந்து கிட்டே வேற.. மொத்தமா மூன்று நாள் பிளான் செய்யுங்க ..வீக் எண்டு பெஸ்ட்..

# தங்குவதற்கு:

அஜந்தா,அண்ணாமலை இது இரண்டுமே நான் சென்றது.. தங்குவதற்கு ஏற்றது ..

#சாப்பிட:

தயவு செய்து அங்கே இருக்கும் சரவணா பவன் சென்று விடாதீங்க..நொந்து போவீங்க!!
ஜெயராம்,india ---- house (பெயர் சரியாய் ஞாபகம் இல்லை), giovanni pizza ( நம்புங்க!!நம்ம பசங்களுக்காக:-)) ),ஆச்சிஅம்மா செட்டிநாடு இங்கெல்லாம் போங்க
முடிஞ்சா அங்கே ஒரு grt குரூப் ஹோட்டல் இருக்கு..பிரெஞ்சு food ட்ரை பண்ணுங்க
அசைவமா இருந்தா sea food எல்லாமே நல்லா இருக்கும்
அப்புறம் அங்கங்கே flavored popcorn ,icecream இதெல்லாம் விற்கும் இளநீர்,பதநீர் ரொம்ப சீப் இதையும் விடாதீங்க!!
(நாம எங்கே போனாலும் நல்லா சாப்பிடுவோம் இல்ல!!!)

#purchase :

எனக்கு சென்னையில் dress வாங்கிட்டு அங்கே வாங்கும் போது satisfaction இல்லை..
ஆனால் காதி,cooptex போன்று அங்கு இருக்கும் கடைகளில் salestax ரொம்ப குறைவு curtains ,காட்டன் materials , handbags,lightshade,wallhanging,ஆர்ட் பொருட்கள்,bamboo பொருட்கள்handicrafts,terracota,leather இதெல்லாம் நல்லா இருக்கும்
அரபிந்தோ ஆஷ்ரம் போனீங்கன்னா bamboo வைத்து இவ்ளோ பொருளா என்று ஆச்சர்யபடுவீங்க!!
அப்புறம் சண்டே அன்று பிளாட்போர்ம் கடைகளில் பேரம் பேசி புக்,துணி,பொம்மை,மூங்கில் கூடை,மர சாமான் வாங்கலாம்
grand பஜார் இருக்கு போய் பாருங்க

#ஊர் சுற்ற:

*அரபிந்தோ ஆஷ்ரம்
*auroville
*botanical கார்டன்
*பீச்,ஆயிமண்டபம்,அதன் பக்கத்தில் பாரதி பார்க் (குழந்தைகள் என்ஜாய் பண்ணுவாங்க)
*museum
*ஓஸ்தேறி,சுண்ணம்பார் போட் ஹவுஸ்
*அப்புறம் விழி மூடி யோசித்தால் பாட்டில் வரும் location அங்கே இருக்கு..வாக் போங்க கணவரோடு..
*அப்புறம் நிறைய கோவில்கள் இருக்கு(அப்பா,அம்மா கூட போகும் போது கோவில் டூர் போலே இருந்தது இப்போ உங்களுக்கு சொல்ல உதவுது) ..பஞ்சவடி ஆஞ்சநேயர்,மணக்குள விநாயகர்,வரதராஜ பெருமாள் கோவில்,வேதபுரீஸ்வரர் கோவில் ,மாரியம்மன் கோவில்,ஹயக்ரிவர் கோவில்,செங்கழுநீர் அம்மன் கோவில்(பெரிய குளம் இருக்கும்),ஒரு காளி கோவில் போனோம்பா (ஊர் பேர் ஞாபகம் இல்லை) வாழ்க்கையில் அவ்ளோ பெரிய சிலை பார்த்தது இல்லை (பயத்தில் fever வந்திட்டு!!)
*முடிந்தால் பக்கத்தில் தான் சிதம்பரம்,பிச்சாவரம் இருக்கு போய் பாருங்க..

ஊருக்கு போயிட்டு வந்து எப்படி இருந்தது என்று சொல்லுங்க..

என்றும் அன்புடன்,
கவிதா

பாண்டிச்சேரி குறித்து, பார்க்கவேண்டிய இடங்கள் பற்றி பதிவு போட்டதற்கு மிக்க நன்றி அனு & விஜயா!

மேற்க்கொண்டு தகவல்கள் வேண்டுமாயின் உங்களை தொடர்பு கொள்கிறேன் விஜயா! மீண்டும் நன்றிகள்!

அன்புடன்
சுஸ்ரீ

சும்மா அசத்திடிங்க கவிதா! :)
எவ்வளவு அருமையான தகவல்கள் கொண்ட நீண்ட பதிவு!!! இத‌, இத‌த்தான் நான் எதிப்பார்த்தேன்! ரொம்ப‌ தேங்ஸ் க‌விதா!

ஆமாம் கவிதா, மொத்தமே இந்தியப்பயணம் ஒரு மாதம்தான். அதிலயும் என்னன்ன பண்ணலாமுனு ஓரளவு இங்கேயே யோசிச்சிட்டு போவேன்! (ப்ளான் பண்ண எல்லாமும் செய்யமுடியாவிட்டாலும்... அங்கே போய் குழம்பாமல், முடிந்தமட்டும் விடுமுறையை நல்லபடி அனுபவிக்க‌ ஏதுவாக இருக்கும்)

எங்க‌ த‌ங்க‌லாம், என்ன‌ வாங்க‌லாம், எங்கெங்கே சாப்பிட‌லாம் (பின்னே, வெக்கேஷ‌னில் இது இல்லாமையா?! :)) என்னென்ன‌ இட‌ங்க‌ள் சுற்றிப்பார்க்க‌லாம்னு சும்மா டீடெய்லா சொல்லி அச‌த்திடிங்க!. சூப்ப‌ர் க‌விதா!.

இவ‌ற்றில் எத்தனை நாள் போறோம்கிறத பொருத்து, எத்தனை பார்க்கறமோ தெரியலை,ஆனால் உங்க‌ளை நிச்சயம் நினைத்துக்கொள்வேன் க‌விதா!

உங்க நீண்ட பதிவை படிக்கவும், இப்ப‌வே என‌க்கு ஊருக்குப்போகும் உற்சாக‌ம் வந்துவிட்ட‌து! :) கட்டாயம் ஊருக்கு போயிட்டு வந்து எப்படி இருந்தது என்று சொல்கிறேன்.

மீண்டும் ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்