பாண்டிச்சேரி ஸ்பெஷல்!

ஹலோ தோழிகளே,

எல்லாரும் நலமா? எனக்கு ஒரு உதவி வேண்டும். இந்த முறை இந்தியா பயணத்தின்போது, பாண்டிச்சேரி போகலாமென்று ஒரு ஐடியா இருக்கு! அங்கே எங்கெங்கே ஷாப்பிங் நல்லா பண்ணலாம்? எந்தெந்த கடைகளில் என்னமாதிரியான பொருட்கள் கிடைக்கும். அப்புறம் எந்தெந்த இடங்கள் குழந்தைகளோட சுற்றிப்பார்க்க நன்றாக இருக்கும்.

எனக்கு தெரிந்த இடங்கள், சுற்றிப்பார்க்க Auroville & Beach! இது இல்லாமல் என்ன ஸ்பெஷல் அங்கே?! அப்புறம் எங்கே தங்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் பாண்டிச்சேரி பற்றி தெரிந்த தோழிகள் வ‌ந்து சொல்லுங்களேன், ப்ளீஸ்! நான் பலப்பல‌ வருடங்களுக்குமுன் போனதுண்டு, இப்ப எதுவும் ஐடியா இல்லை! அதனால், உங்கள் கருத்துக்கள் கட்டாயம் உபயோகப்படும். நன்றி!

கவிதா... உங்க பதிவை பார்த்ததும் எனக்கும் பாண்டி போக ஆசை வந்துட்டுது ;) போக சீக்கிரமே ப்லான் போட்டுடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்