சாக்லேட் குக்கீஸ்

தேதி: June 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

மைதா மாவு - 2 கப்
பேக்கிங் சோடா - 2 தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
வெண்ணெய் - 225 கிராம்
பிரவுன் சுகர் (நாட்டு சர்க்கரை) - 150 கிராம்
முட்டை - 2
வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
பாதாம் எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 150 கிராம்
சாக்லேட் சிப்ஸ் - 200 கிராம்
உப்பிட்டு வறுத்து பொடித்த பாதாம் - ஒரு கப்


 

ஓவனை 150 டிகிரி C முற்சூடு செய்யவும். முட்டை மற்றும் வெண்ணெய் குளிர்ந்திருக்க கூடாது. அறையின் வெப்ப நிலையில் இருப்பது அவசியம்.
முதலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து ப்ளெண்டரால் நன்கு கலக்கவும். ப்ளெண்டர் இல்லையென்றால் மிக்ஸியில் போட்டு சுத்தவும்.
கலவை இந்த பதத்திற்கு வரும் வரை கலக்க வேண்டும்.
பின்பு நன்கு கலக்கி வைத்துள்ள முட்டை மற்றும் எசன்ஸை சேர்த்து நன்கு கலக்கவும். மிதமான சுழற்சியில் இப்பொழுது கலக்க வேண்டும்.
கலவை இந்த பதத்திற்கு வரும் வரை கலக்கவும். இப்பொழுது மாவை சலித்து விட்டு அதனுடன் உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கலவையுடன் சேர்த்து கிளறவும். இப்பொழுது ப்ளெண்டரை உபயோகிக்காமல் ஸ்பாச்சுளா அல்லது கரண்டி கொண்டு கிளறவும். கிளறும் போது ஓரத்திலிருந்து நடுவாக கிளறவும்.
இது தான் பதம். ரொம்பவும் கிளறி விடக் கூடாது. மாவு வெண்ணெயுடன் கலக்கும் வரை கிளறினால் போதும்.
இப்பொழுது தேங்காய் துருவல், பொடித்த பாதாம், சாக்லேட் சிப்ஸ் சேர்த்து முன்னர் சொன்னது போல கிளறவும். அழுந்த கிளறினால் குக்கீ வன்மையாக ஆகி விடும்.
கலந்த மாவு இந்த பதத்தில் இருத்தல் வேண்டும்.
ஒரு ஐஸ்க்ரீம் ஸ்கூப் அல்லது சின்ன கரண்டி வைத்து கலவையை அள்ளி இரண்டு இன்ச் இடைவெளி விட்டு குக்கீ சீட்டில் வைக்கவும். ஓவனில் வைத்து 18-20 நிமிடம் பேக் செய்யவும்.
சுவையான சாக்லேட் கோகனட் க்ரன்ச் குக்கீஸ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சும்மா சொல்ல கூடாது... படங்களும் பளிச் பளிச்சுன்னு சூப்பர்... குக்கீஸும் பார்க்கவே சூப்பர்!! எப்படிப்பா இப்படிலாம் பண்றீங்க... என் குட்டீஸ் கொஞ்சம் வளரட்டும்... இதெல்லாம் செய்து அசத்துறேன் அவங்களை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவண்யா! உங்க குக்கீஸ் பாக்குறதுக்கே அழகா இருக்கு! கண்டிப்பா டேஸ்ட்டும் நல்லா இருக்கும்...... வாழ்த்துக்கள் .......

பார்க்க சாப்பிடனும் போல ஆசை வந்துடுச்சு ந இப்படி பண்ணுவேன்னு நம்பிக்கை இல்ல நீங்க தான் பார்சல் போட்டுவிடணும் வாழ்த்துக்கள் by Elaya.G

லாவண்யா ஓட்ஸ் குக்கீஸே இன்னும் கண்ணை விட்டு மறையல. அதுக்குள்ள இன்னொரு சூப்பரான குக்கீஸ் அனுப்பிட்டு வைச்சுட்டீங்களே. தெளிவான படங்களுடன் யம்மியா இருக்கு.

ஆதானே ..நம்ம தானே இதெல்லாம் செய்து அனுப்ப முடியும்.
சூப்பரா யம்மி குக்கீஸ்..சின்னுவும், அம்முவும் சாப்பிட்டு என்ன சொன்னாங்க ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

வனி நீங்கெல்லாம் யாரு.....குழந்தைகள் சின்னதா இருக்கும் போதே பல வித்தைகள் கையில் விளையாடுது.....அவர்கள் பெரியவர்கள் ஆனால் இன்னும் என்னனேல்லாம் பண்ணுவீங்களோ.....அப்பப்பா நினைக்கவே கண்ணை கட்டுது ;) வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் நன்றி!

சங்கீதா வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் நன்றி! இதில் இனிப்பு அதிகம் இருக்காது...அந்த சாக்லேட் சிப்ஸ் தான் அங்கே அங்கே அதன் வேலையை காட்டும்...அதனால் குழந்தைகளுக்கு இது ரொம்பவே பிடிக்கும்.

இளையா நீங்க முழு மூச்சா சமைக்க அராம்பிக்கும் இது என்ன இதை விட சூப்பரா செய்து அசத்துவீங்க. பார்சல் போட்டுட்டேன்...வந்ததும் சாப்பிட்டு பார்த்துட்டு கண்டிப்பா சொல்லுங்க ;)

அது ஒன்னும் இல்லை வினோ....எங்கள் வீட்டில் ஓட்ஸ் குக்கீஸ் தீர்ந்து போச்சு அதான் :) வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் நன்றி!

ரம்மி, முதலில் அம்மு சாப்பிட்டு எனக்கு வேண்டாம் என்றால், சின்னு கடிக்கும் போது அவள் வாயில் சாக்லேட் இருப்பதை பார்த்த அம்மு, (நானும் எப்படியோ மார்க்கட்டிங் பண்ணினேன்....இருந்தாலும் அவளின் தங்கை தான் இதற்க்கெல்லாம் லாக்கி) அம்மா இன்னொன்னு குடுன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டா...இதன் ரகசியமே அந்த சிப்ஸ் தான் ;)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,

என்னதிது, இப்படியா சூப்பர் சூப்பரா டிஷ்சஸ், குக்கீஸ் எல்லாம் பண்ணி ஒரேடியா டெம்ட் பண்ணறது?! :) அந்த பக்கம், டயட், அதுபாட்டுக்கும் போயிட்டுருக்கு, இங்க இதுவும் ஜமாய்ச்சிட்டு இருக்கிங்களா?! ;)

குக்கீஸ் யம்மியா இருக்கு லாவண்யா! ரெஸிப்பி & படங்கள் அருமை!
இப்ப ஊருக்குப்போற பிஸில இருக்கிறதால, அப்புறமா வந்துதான் ட்ரை பண்ணிப்பார்க்கனும். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

நாம தானே டயட்டில் இருக்கோம் ....அதனால் அதிகம் இல்லை இரண்டு அல்லது மூன்று மட்டும் தான் இது வரை சாப்பிட்டேன் (நம்புங்கப்பா !) பசங்களுக்க்காகவும் என் வீட்டு ஐய்யாவுக்காகவும் செய்தேன். ஒன்னும் அவசரம் இல்லை....ஊருக்கு போயிட்டு வந்து சாவுகாசமா செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி சுஜாதா :)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா சூப்பரா யம்மி குக்கீஸ் பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துக்கள்

லவண்யா உங்கள் குறிப்பு யம்மி சூப்பரோ சூப்பர். படங்களையும் மிகவும் அழகாகவும் விளக்கமாகவும் அனுப்பியிருந்தீர்கள். வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

லாவண்யா குக்கீஸ் செம சூப்பரா இருக்கு பார்க்கும்போதே சாப்பிட தூண்டுது வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவண்யா,
யம்மி குக்கீஸ் !!!
வாழ்த்துக்கள் !!!!

என்றும் அன்புடன்,
கவிதா

பாத்திமா உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

ரேவதி அப்போ இந்த குறிப்பின் படம் நல்லாயில்லையா :(.... இருந்தாலும் நீங்க சொல்ல வந்தது புரிந்தது :) வாழ்த்துக்கு நன்றி.

ஸ்வர்ணா சாப்பிட தூண்டினால் யோசிக்காமல் வீட்டுக்கே வந்திடுங்க......ஈவினிங் காபியுடன் தரேன் :)

வாழ்த்துக்கு நன்றி கவிதா.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கு லாவி. போட்டோஸ்லயே இவ்வளவு யம்மியா இருக்கே சாப்பிட எப்படி இருக்கும்? எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு சாப்பிடனும்னு என்ன பண்ண முடியாதே பார்த்து பார்த்து மனச தேதிக்க வேண்டியது தான்.

அன்பு லாவண்யா,

சூப்பரான குறிப்பாக இருக்கு. இதில் சில பொருட்கள் வாங்க வேண்டியிருக்கு. வாங்கி, செய்து பார்த்து, மீண்டும் பதிவு போடுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

லாவண்யா,
சாக்லேட் சிப் குக்கீஸ்,என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.விரைவில் செய்துட்டு பதிவு போடுறேன்.வாழ்த்துக்கள்.

யாழினி
எதுக்கு நீங்க பார்த்து மட்டுமே மனசை தேத்திக்கணும்....செய்துப் பாருங்க இல்லைனா சொல்லுங்க அனுப்பிடலாம்...வாழ்த்துக்கு நன்றி.

சீக்கிரம் ஊருக்கு போவதற்குள் செய்து பார்த்துட்டு பதிவு போடுங்கள் சீதாலக்ஷ்மி. வருகைக்கு நன்றி.

அன்பரசி உங்க பையனுக்கும் இது பிடிக்குமா....ரொம்ப நல்லது....செய்து பார்த்துட்டு பதிவு போடுங்க. வருகைக்கு நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!