மாங்காய் கொட்டை வத்தலில்லிருந்து *மாடர்ன் உணவு* வரை...

எல்லோருக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க? எனக்கு ஒரு ரெசிப்பி வேணும் அது இங்கே தேடி கிடைக்கல... அதனால தெரிஞ்சவங்க முக்கியமா பெரியவங்களுக்கு கண்டிப்பாக தெரிஞ்சிருக்கணும் எனக்கு கொஞ்சம் இங்கே சொல்லுங்க... அது எல்லோருக்கும் பயன்படும்.

மாங்காய் வற்றல் குழம்பு இங்கே ஒரு வெரைட்டி தான் இருக்கு... அதுலயும் வேற இல்ல. இந்த மாங்காய் வத்தல் இல்லாமல், அதோட கொட்டை மட்டும் ஓரத்தில கொஞ்சம் மாங்காய் ஒட்டி அது மட்டும் ஊறுகாய் போல இருக்கும் அந்த மாங்காய் கொட்டை வத்தல் வைத்து எப்படி குழம்பு செய்வது. எனக்கு சின்ன வயசில சாப்பிட்டது. இப்போ செய்யணும் போல இருக்கு. எங்கம்மா ஒரு புளிகுழம்பு போல சொன்னாங்க... அது செய்ய இப்போ கொஞ்சம் முடியல... உங்க யாருக்காவது கொஞ்சம் ஈசி ரெசிப்பி தெரிஞ்சா சொல்லுங்க.அது ஒட்டு மாங்காயில போட்டு இருப்பாங்க.

### மறக்காம மாங்காய் வத்தல் கொட்டை குழம்புன்னு யாரையாவது கேட்டாவது சொல்லுங்க...####
வெறும் மாங்காய் வத்தல்ன்னா அது ரொம்ப சுலபமா எல்லோருக்கும் தெரிஞ்சியிருக்கும் அதனால தான்.
வீட்டில பாட்டி போல இருந்தாங்கன்னா கண்டிப்பா சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.
கொஞ்சம் உதவுங்கள் தோழிகளே!!! ப்ளீஸ்.

*******************************************************

இப்போ அடுத்து இன்னும் ஒரு கேள்வி அது தான்.... அயல் நாட்டு உணவுகளை பற்றியும் அது எங்கெங்கே நல்லா இருக்கும்ன்னும் சொல்லணும் சரியா...

பொதுவா எனக்கு வெளியில சாப்பிடற பழக்கம் கொஞ்சம் குறைவு. எங்கே போனாலும் நான் நம்ம நாட்டு ஹோட்டல் தேடி போயி தான் சாப்பிடுவேன். அப்படி முடியாத இடங்களுக்கு வீட்டிலிருந்து கொண்டு போயிடுவேன். ஆனால் இங்கே வந்தப்புறம் நாளடைவில இந்த பழக்கம் மாறிப்போச்சு... அதுவும் இப்போ பல நாட்டு உணவுகளை ட்ரை பண்ற மூட்ல தான் இருக்கேன். அதனால வெளி நாட்டு உணவுகள் சாப்பிடும் பழக்கம் உள்ள அனைவரும், இல்ல உங்க வீட்டுல யாராவது சாப்பிட்டு வந்து சொல்லுவாங்க இல்ல... அப்படி இருப்போரும் எனக்கு சில தகவல்கள் கொடுங்க... நான் என்னென்னவோ ட்ரை பண்ணி எனக்கு மனசில நிற்கிற கொஞ்சம் பிடிச்ச ஐட்டம் சொல்லனும்ன்னா....

Pizzas - Pizza Hut.
Veg.Burrito and Chicken Tacos - Rubios (Fresh Mexican Grill).
Veg. Sandwich - Jason Delli
Thai Chicken Briyani spicy - Thai Resaurant.

Chinese foods in Panda Express, then Mc.Donalds, Carl's Jr, Elpollo Loco, Denny's, Jack in the Box, In & Out Burder, Burger King...
இங்கெல்லாம் கொஞ்சம் சான்ட்விச் ட்ரை பண்ணியிருக்கேன்.

இவை தான் இது போல நீங்களும் எந்த ஐட்டம் அது முக்கியமா எங்க நல்ல இருக்கும்ன்னு சொல்லுங்க. மேலே உள்ளதெல்லாம் கொஞ்சம் ஃபிரண்ட்ஸ் சொன்னப்புறம் சாப்பிட்டு பழகியது தான்.

இதுக்கு புதுசா ஒரு இழை போட வேண்டாம்ன்னு தோணுச்சி... அதனால இதுலே கன்டினியு பண்ணலாம். இந்த மாங்காய் வத்தல் சிலருக்கு தெரியாமலேயிருக்கும்... அதுவும் மாங்காய் கொட்டை வத்தல் பலருக்கு தெரியாது... இங்கே நீங்க கொடுத்த ரெசிப்பிஸ் பலருக்கு உதவுவது போல.... இன்னும் தெரிஞ்சவங்களும் கொடுக்கலாமே!!!

அயல் நாட்டு உணவை சுவைக்க அனைவரும் வாருங்கள்... வாருங்கள்... வாருங்கள்!

மாங்காய் கொட்டை வத்தல் என்கிட்டே இப்போ இருக்கு... அதை செய்து பார்க்க தெரியல... தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா...

இதுவான்னு பாருங்க

http://arusuvai.com/tamil/node/12897

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆமா லாவண்யா இதே தான். ஆனால் அதை தனியா போட்டு குழம்பு வைக்கலாமா? அப்புறம் நீங்க உள்ளே இருக்க பருப்பை தனியே எடுத்து வறுத்துன்னு சொல்லியிருகீங்க.... அந்த பருப்பு நல்ல இருக்குமா? வீணாகியில்ல போயிருக்கும்!நான் உங்க முறைப்படி செய்து பார்க்கிறேன். ஆனால் அந்த பருப்பு இல்லாமல் செய்யலாமா?
அப்புறம் சுண்டு வத்தல்ன்னு நீங்க சொல்லியிருகிறது சுண்டைக்காய் வத்தல் தானே! நான் இதுவும் மணத்தக்காளி வத்தலும் சேர்த்து தனி வத்தகுழம்பு வைப்பேன்.

இந்த மாங்கொட்டையை தனியேயும் குழம்பு வைக்கலாம். இப்படியும் செய்யலாம். இந்த குழம்பில் கசப்பு புளிப்பு காரம் என்று எல்லாமே இருக்கும்.

மாங்காய் வாங்கி வந்தவுடன் (நல்ல மாங்கையாய் பார்த்து) கழுவி அறிந்து காயவிட்டு எடுத்துவைத்து விடுவார்கள். ஊர்க்காய் முறை தான் அதனால் உள்ளியிருக்கும் பருப்பு கெட்டுபோக வாய்ப்பே இல்லை. அந்த பருப்பில் ஒரு துவர்ப்பு சுவை இருக்கும். வயற்றில் உள்ள பூச்சி போன்றவற்றை வெளியேற்றக் கூடிய மருத்துவ குணம் அதற்க்கு உண்டு.

அதே அதே......சுண்டு வத்தல் சுண்டக்காய் வத்தல் தான்.

செய்து சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்க......இல்லைனா வீட்டுக்கு வாங்க செய்து தரேன் ;)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப நன்றி லாவண்யா... ட்ரை பண்றேன். வீட்டுக்கு வந்தா நல்ல சமைச்சு போடுவீங்கள்ள!!! இதோ வந்துகிட்டே இருக்கேன்... அம்மா இன்னும் கொஞ்ச நாளில் வரபோறாங்க.... அதுவரை நீங்க...
குழந்தைங்கள வச்சிகிட்டு எப்படி சமாளிகிறீங்க? பெரிய பொண்ணு ஸ்கூல் போறங்களா? என்ன வயசாகுது? சம்மர் லீவா?
நாம தான் வீட்டுல இருக்கோமேன்னு நான் இங்கே ஒன்ன வீட்டுல வச்சிகிட்டு தினம் தினம் சொல்ல முடியல... எப்படா......... அவங்க அப்பா வீட்டுக்கு வருவாங்கன்னு இருக்கும்....

வேற யாராவது ரெசிப்பி தெரிஞ்சா சொல்லுங்களேன்...

பாப்ஸ் உமா எனக்கும் மாங்காய் வத்தன் குழம்பு என்றால் உயிர்.எனக்கு தெரிந்த முறைகளை உங்களுக்கு கூறுகிறேன்.பிடித்தால் பயன்படுத்துங்கள்.

1.தட்டைப்பயறு(காராமணி)புளிக்குழம்பு செய்யும் போது பயன்படுத்துவேன்.ஒரு 5 அல்லது 6 மாங்காய் வத்தல் எடுத்து சிறிது நேரம் தண்ணீரில் போட்டு குழம்பு முக்கால்வாசி ரெடி ஆகும் சமயத்தில் தண்ணீர்ல் இருந்து எடுத்து போடுவேன். அதற்கு தக்காளி மற்றும் புளி குறைத்து உபயோகித்துக் கொள்ளலாம்.ஏனென்றால் மாங்காயில் உள்ள புளிப்பும் அதிகமாக இருக்கும்.

2.இதே மாதிரி பாசிப்பயறு குழம்பு செய்யும் போதும் பயன்படுத்தலாம்.

3.சாதாரண சாம்பார் செய்யும் முறையில் காய்கறி இல்லாத சமயத்தில் மாங்காய் வத்தன் மட்டும் போட்டு செய்வேன்.து.பருப்பு மஞ்சள்தூள் போட்டு நல்லா வேக வைக்கவும்.சிறிதளவு எண்ணெய் விட்டு சி.வெங்கயாம் ,தக்காளி போட்டு வதக்கவும்.அதை பருப்பில் போட்டு கொஞ்சம் சாம்பார் பொடி போட்டு உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். நல்லா கொதித்து வரும் சமயத்தில் மாங்காய் வத்தல் போட்டு சிறிதளவு புளி ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் கடுகு,சீரகம், வெந்தயம்,பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் போடவும்.

பின்குறிப்பு:மாங்காய் வத்தல் பயன்படுத்தும் போது தக்காளி,புளி குறைத்து பயன்படுத்தவும்.

Expectation lead to Disappointment

மிகவும் நன்றி மீனாள். நீங்க சொல்லியிருக்கிறது மாங்காய் வத்தல் தானே! மாங்காய் கொட்டையும் இதற்கு பொருந்துமா? ஆனால் உங்க ரெசிப்பிகள் ரொம்ப நல்லா இருக்கும்ன்னு தோணுது முடியும் பொழுது செய்து பார்க்கிறேன்.

வேற யாருக்கும் இது பற்றி தெரியலையா... ஒரு நிறைமாத கர்ப்பிணி கத்தி கத்தி கேட்கிறேனே!!! காரணம் சொன்னா தான் வந்து பதில் போடுவீங்களா??? எனக்கு தெரியாதுன்னாவது வந்து சொல்லிட்டுபோங்க.

எனக்குத் தெரியாது. ;) அதான் தலைப்புல 'அம்மா' என்று போட்டு இருக்கீங்களா!! வாழ்த்துக்கள் உமா.

‍- இமா க்றிஸ்

இருந்தாலும் நான் உங்க பேச்சு டூ.....வந்தீங்களா வழிக்கு....நாங்களும் நீங்களா சொல்வீங்க சொல்வீங்கன்னு தான் எதிர்ப்பார்த்தோம் :) சரி என்ன குழந்தை? உடம்பை அம்மா வரும் வரை நன்றாக பார்த்துகோங்க....

நானும் காத்தாலேர்ந்து வீட்டுக்கு வருவீங்கன்னு கடவை திறந்து வைத்துக் கொண்டு வழி மேல் விழி வைத்து பார்த்துக்கிட்டே இருக்கேன். ஏதோ சுமாரா சமைப்பேன். என் பெரிய பொண்ணு (மூன்று வயசாகுது) ப்ரீஸ்கூல் போறா...அதனால காத்தால வீட்ல கொஞ்சம் நேரம் கிடைக்கும் அப்போ எல்லா வேலையும் பார்ப்பேன்....மிச்சத்தை மதியம் தூங்கும் போது பார்ப்பேன். எனக்கு பழகி போச்சு.....இருந்தாலும் சில நேரங்களில் எப்போடா இவங்க அப்பா வீட்டுக்கு வருவாங்கன்னு இருக்கும் :(

இந்த மாங்கொட்டையை வைத்து சாம்பார் கூட செய்யலாம். கொஞ்சம் நேரம் சுடு தண்ணீரில் ஊறவைத்து பிறகு செய்து பாருங்கள். தக்காளி புளி எதுவும் தேவையிருக்காது. அதே போல் புளிக்குழம்பும் செய்யலாம். (நீங்க நாங்க சொல்லியிருக்கும் எல்லாத்தையும் செய்வதற்குள் உங்களிடம் இருக்கும் மாங்கோட்டையே தீர்ந்தே விடும்ன்னு நினைக்கிறேன் !)

இருந்தாலும் நீங்க நான் சொன்ன ரெசிபியை ட்ரை பண்ணி பார்த்திருக்கலாம்......

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்குத் தெரியாது...
வாழ்த்துக்கள்.

மாங்காய் நிறைய சாப்பிட்டு இப்ப கொட்டைகளா சேர்த்து வச்சுருக்கீங்களா?

சரி இது செய்து சாப்பிட்டுட்டு அடுத்து மாங்கொட்டை ஓடுகளை என்ன செய்யப் போறீங்க? அதுக்கும் ரெசிப்பிக் கேட்டு வச்சுக்கோங்க.

மேலும் சில பதிவுகள்