குழந்தையின் முதல் பிறந்தநாள்

என் தோழியின் மகளுக்கு அடுத்த மாதம் முதல் பிறந்தநாள்,அதை இங்கு us-ல் கொண்டாட உள்ளனர்...உங்கள் குழந்தையின் பிற்ந்தநாள் கொண்டாட்டம் பற்றி இங்கு பகிற்ந்துகொண்டால் அனைவருக்கும் idea கிடைக்குமே...உங்கள் அனுபவமும் ideas-ம் சொல்லுங்க பார்ப்போம்...share ur experience&plz give theme party ideas also

ideas plz

இது விஷயமா நிறைய இழையில் ரொம்ப விளக்கமாவே தோழிகள் பேசிக்கிட்டதா நினைவு... தேடி பாருங்க... கிடைக்கும். நமக்கு இது போல் பிறந்த நாள் விழா எல்லாம் பழக்கம் இல்லை... அதனால் அத்தனை நல்லா தெரியல. இன்னைக்கு வெள்ளிக்கிழமை ஆச்சே... யாரும் அதிகம் வர மாட்டாங்க... பதிலுக்கு காத்திருக்காம மன்றத்தில் தேடினா நிறைய தகவல் கிடைக்கும். அலங்காரம், உணவு என எல்லாம் பேசப்பட்டிருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

http://www.partycity.com/

http://www.partyamerica.com/

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

மன்றத்தில் பாருங்க!

Eat healthy

இந்த இழை உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்

http://www.arusuvai.com/tamil/node/18046
http://www.arusuvai.com/tamil/node/16234

பதில் அள்த்த ராஜி,வனிதா,ரசியா,அனு க்கு நன்றிகள்..என் தோழி எல்லா லிங்கையும் பாத்தாங்க...ரொம்ப உதவியா இருந்ததாம்.அவங்க பிங் பார்டி(Pink party) வைக்க போரங்களாம்,அதுக்கு தனியா ideas கேட்குறாங்க..இதுக்கும் கொஞம் உதவுங்களென்...please frns.

Pink Party Ideas என்று போட்டு கூகிளில் பார்த்தால் நிறைய ஐடியாஸ் கிடைக்கும். Pink Party - க்கு எல்லாமே பிங்க் கலரில் ச்சூஸ் பண்ணனும். பொண்ணு குழந்தை தானே! பிங்க் இன்விட்டேஷன், ட்ரஸ், கேக், பலூன்ஸ், டெக்கறேட்டிவ் ஐட்டம்ஸ்... இப்படி எல்லாமே...

அன்பு சாய்ஸ்ரீ,

பிங்க் கலரில் கேக் ஆர்டர் கொடுக்கலாம். பிஸ்கட் க்ரீம் கூட இங்கே பிங்க் கலரில் கிடைக்கும். டிஸ்போஸபிள் கப், ப்ளேட், நாப்கின், ஸ்பூன் செட் என்று எல்லாமே பிங்க் கலரில் வாங்கிக்கலாம்.

வருகிற குழந்தைகளுக்கு ரிடர்ன் கிஃப்ட், பிங்க் கலர் பைகளில்,பிங்க் கலர் ரிப்பன் கட்டி, பாக் செய்து கொடுக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

www.evite.com

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

பிங்க் பார்ட்டி என்றால் சுலபம். மேலே எல்லாரும் சொல்லி இருக்கிறாங்க. செய்றது எல்லாமே பிங்க்ல பண்ணிட்டா போதும். ஈட்டபிள்ஸ்... பிங்க் கேக், ஐஸ் க்ரீம் சொல்லி இருக்கிறாங்க மேலே. வேற... மாஷ்மலோஸ், கிஸ்ஸஸ் பிங்க்ல பண்ணலாம். ட்ரிங் கூட பிங்க சுலபம்தான். கிஃப்ட் பாக்ல குட்டி piggybank ஒன்று வைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்