பாட்டு பாட வா...பாடம் சொல்ல வா

காலம் எவ்வளவு தான் மாறி போனாலும் நம் மனதில் சில விஷயங்கள் பசுமையாக இருக்கும், அதை மனம் திரும்ப திரும்ப அசை போடும். நம்ம அறுசுவையே எடுத்துக் கொள்ளுங்களேன் எவ்வளவு தான் நாகரீகம் வெளிநாடு தொழில் முன்னேற்றம் மருத்துவ வளர்ச்சி என்றேல்லாமுமே இருந்தாலும் இன்றும் நாம் கை வைத்தியம் பாட்டி சமையல் துணியில் சாயம் போனால் என்ன செய்வது முகத்துக்கு கடலை மாவா இல்லை பயத்தம் மாவா என்று தான் கேட்கிறோம். (சரி கேட்குது இப்போ நீ என்னத்தான் சொல்லா வரேன்னு.....இருங்க நானே சொல்றேன்). நாம் சின்ன வயதில் கேட்ட பாட்டு அல்லது விளையாட்டின் போது பாடிய பாட்டு பாட்டி அத்தை எல்லாம் பாடிய பாட்டு என்று உங்களுக்கு ஞாபகம் வரும் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளலாம். இதை பார்த்து நாமும் நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.

குழந்தை பிறந்திருக்கும் போது என் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைக்கு விக்கல் எடுத்தால் குழந்தைகள் படுத்திருக்கும் துணியிலிருந்து ஒரு இழையை எடுத்து குழந்தையின் தலையில் வைக்கும் போது இதை பாடிய படியே வைப்பார்கள் "விக்கலடையான் விருந்துக்கு போனான் வைக்கோலை போட்டு விக்கல் எடு".

நாம் சின்ன வயதில் கண்ணாமூச்சி விளையாடும் போது பாடுவோமே "கண்ணாமூச்சி ரே ரே .." இந்த பாட்டுக்கு யாரவது லிரிக்ஸ் சொல்லுங்கப்பா

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா இந்த பாட்டு இப்போதான் ஞாபகம் வந்திச்சி,ஆனால் 2வது வரி தெரியலப்பா!
கண்ணாமூச்சி ரே ரே!
______________________!
நல்ல முட்டைய தின்னுப்புட்டு!
கூழுமுட்டைய கொண்டு வா!

Eat healthy

லாவண்யா!!!நீங்க சொன்னது போல பழைய ஞாபகங்களை நினைத்துப் பார்த்தால் சிரிப்பும் அதே சமயம் சந்தோஷமும் வருது,எப்படி எப்படியெல்லாம் விளையாடினோம்,எத்தனை சண்டைகள் போட்டோம் நம் குழந்தை பருவத்தில்,நினைத்தாலே மனம் குளிருது,எனக்கு தெரிந்த சில பாட்டுக்கள் இதோ:
விளையாட்டு ஆரம்பிக்கும் முன் யாரிடமிருந்து முதலில் ஆரம்பிப்பது என்பதற்காகவே சில பாடல்கள் இருந்தது,அதை பாடி முடிக்கும் போது யார் இறுதியில் மிஞ்சுகிறார்களோ அவரிடமிருந்து தான் ஆரம்பிப்போம்!
"கொக்காச்சி கொக்கு
ரெட்ட ப்ளாக்கு
முட்ட முழுங்கி
கானாங்கோழி
கழுத்துல வெள்ள
வெள்ளச் சாறு
வெங்காயச் சாறு
கம்ப்ளி,சிம்ப்ளி...செவந்திய ரோஜா!!!!!"
இதற்க்கு அர்த்தமெல்லாம் கேக்காதீங்கப்பா!எனக்கே தெரியாது,இந்த பாட்டெல்லாம் எழுதிய பாடலாசிரியர் யாரென்று இப்போது தேடத்தோனுது,
அப்புறம் இன்னொன்னு.........
"ஐ சா பூ த்ரீ
என் மன் வாட் கலர்" நு சொன்னதும் யார் முன் கை நீட்டியுள்ளோமோ அவர் ஒரு கலர் சொல்ல வேண்டும்,அவர் சொன்ன கலரில் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொருவர் முன் கை நீட்டி சொல்லி முடிக்கும் போது யாரிடம் முடிகிறதோ அவர் விலகிடுவார்,அதாவது இறுதியாக இருப்பவர் தான் ஆட்டத்தை ஆரம்பிக்கனும்,இன்னும் நிறைய இருக்கு,மறந்திடுச்சி,யோசிச்சி அப்புறம் எழுதுகிறேன்!

Eat healthy

முதலில் இந்த இழை ஆரம்பித்ததற்கு என் நன்றிகள்.இப்போதான் சமீபத்தில் என் பையனுக்கு சொல்லி கொடுக்க நெனைச்ச போது நிறைய மறந்து போனதே ஞாபகத்துக்கு வந்தது.என்னால் என் ஞாபகத்துக்கு கொண்டு வர முடிந்ததை இங்கே சொல்கிறேன்.
ஆக்கு பாக்கு,வெத்தலை பாக்கு,தாம் தூம் தையா,அஸ்க லக்கடி (புஸ்கலக்கடி)லாலா சுந்தரி என் பெயர் கொய்யா..ஒரு ஒரு வெரலா தொட்டு தொட்டு இந்த பாட்ட பாடி முடியற வெரலை மடக்கிடனும்.அதான் வெளையாட்டு.
அந்த பாட்டுக்கு எனக்கும் வரி தெரியலை..

இதுவும் கடந்துப் போகும்.

எனக்கு கண்ணாமூச்சி ரே ரே... தெரியல்லே.

எனக்குத் தெரிஞ்ச பாட்டுகள்

1. தாம்தூம் பருப்பு
தவலையில வேகுது
மைசூர் அப்பளப்பூ
பொரிச்சு பொரிச்சு வையுங்கோ
சம்பந்தியக் கூப்பிடுங்கோ
சாப்பாடு போடுங்கோ
வெத்தல பாக்கு கொடுங்கோ
வெளிய பிடிச்சு தள்ளுங்கோ.

2. மழ வருது மழ வருது
நெல்ல அள்ளுங்கோ
முக்காப்படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்கோ
வேலை செஞ்ச மாமனுக்கு
அள்ளிக் கொடுங்கோ
சும்மா நின்ன மாமனுக்கு
சூடு வையுங்கோ

குத்து குத்து,கும்மாங் குத்து,பாட்டி குத்து,பேரன் குத்து,பிள்ளையார் குத்து,பிடிச்சிக்கோ குத்து.

இதுவும் கடந்துப் போகும்.

1. நிலா நிலா ஓடிவா
நில்லாமலே ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா

நடுவீட்டில் வை
நல்லதுதி செய்
தத்தி தத்தி ஓடிவா
தம்பியோடு ஆடவா

2. குள்ள குள்ள வாத்து
குவாக் குவா வாத்து
பள்ளத் தண்ணீர் கண்டால்
பாய்ந்து நீந்தும் வாத்து

மெல்ல உடலை சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து

3. தோசையம்மா தோசை!
தோசையம்மா தோசை;
அம்மா சுட்ட தோசை;
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை;
அப்பாவுக்கு நாலு;
அம்மாவுக்கு மூணு;
அண்ணனுக்கு ரெண்டு;
பாப்பாவுக்கு ஒண்ணு;
தின்னத் தின்ன ஆசை
திருப்பிக் கேட்டா பூசை.

4. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு;
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோவில் புறாவே சாய்ந்தாடு!

5. அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா;
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப்பழம் கொண்டு வா;
பாதிப்பழம் உன்னிடம்
மீதிப் பழம் என்னிடம்;
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.

6. கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு;
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் திங்கலாம் கைவீசு;
கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு!

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

பூ பூ புளியாம்பூ,
பொட்டியில வச்ச தாழம்பூ,
தாழம்பூவ ரெண்டாக்கி,
தங்கச்சி கையில மூணாக்கி,
சித்தாத்தா அடுப்புல
கத்தரிக்காய் வேகலை,
மாமா வர ஜோருல
மல்லிகப்பூ பூக்கல,
பூக்கல,
பூக்கல,
பூத்திரிச்சு.

இதுவும் கடந்துப் போகும்.

நல்ல இழை லாவன்யா,

அ ஆ பாட்டு:
*******************
அணிலும் ஆடும், அ ஆவாம்..
இலையும் ஈட்டியும், இ ஈயாம்..
உரலும் ஊசியும், உ ஊவாம்...
எலியும் ஏணியும், எ ஏவாம்...
ஐவர் ஒட்டகம், ஐ ஒவாம்...
ஓணான் ஔவை, ஓ ஔவாம்...
அ ஆ பாடம் கற்றோமே..,
அன்னை முத்தம் பெற்றோமே.........

அ ஆ பாட்டு:
*******************

அம்மா இங்கே வாவா,
ஆசை முத்தம் தா தா,
இலையில் சோறு போட்டு,
ஈயை தூர ஓட்டு,
உன்னைப்போல நல்லவர்
ஊரில் யாரும் இல்லை,
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்,
ஔவை சொன்ன மொழியாம்,
அஃதே எனக்கு வழியாம்.

தட்டு கையைத் தட்டு:
********************************
சிட்டு சிட்டு சிட்டு
சிட்டுக் குருவி சிட்டு!
பட்டு பட்டு பட்டு
பட்டுச் சட்டை பட்டு!
பொட்டு பொட்டு பொட்டு
பொட்டு நெற்றிப் பொட்டு!
மொட்டு மொட்டு மொட்டு
மொட்டு மல்லிகை மொட்டு!
தட்டு தட்டு தட்டு
தட்டு கையைத் தட்டு!

குட்டி முயல் ஓடுது:
*****************************
குட்டி முயல் பாருங்கள்
குதித்துக் குதித்து ஓடுது !
பஞ்சு போன்ற வெண்முயல்
பதுங்கிப் பதுங்கி ஓடுது !
குட்டிக் குட்டிப் பல்லினால்
கரட் கடித்து தின்னுது !
குண்டு போன்ற கண்ணையே
உருட்டி உருட்டி பாக்குது !
தத்தித் தத்தி வானையே
தாவிப் பிடிக்கப் பாக்குது !
பச்சைப் புல் தரையிலே
பாய்ந்து பாய்ந்து ஓடுது !

மாம்பழம்:
**************
மாம்பழமாம் மாம்பழம்
மாமா தந்த மாம்பழம்
இனிப்புத் திகட்டும் மாம்பழம்
இனிமை தரும் மாம்பழம்
சுவை மிகுந்த மாம்பழம்
சொக்க வைக்கும் மாம்பழம்
சத்து நிறைந்த மாம்பழம்
சக்தி தரும் மாம்பழம்
நேற்று பறித்த மாம்பழம்
நினைவில் நிற்கும் மாம்பழம்.....

ஹாய் லாவண்யா, நீங்க ரொம்ப புதுசு புதுசா நல்லா யோசிக்கிரிங்க வெரி குட்...;) நான் 3ம் வகுப்பு படிக்கும் போது ஒரு குண்டு டீச்சர் ஒரு பாட்டு சொல்லி கொடுத்தாங்க அது எனக்கு ஞாபகம் இருக்கு பாடவா??????

குத்தடி குத்தடி சைனக்கா;
குமிஞ்சி குத்தடி சைனக்கா;
பந்தளிலே பாவக்கா,
தொங்குதடி ஏலக்கா ;

பையன் வருவான் பார்த்துகோ;
பணம் கொடுப்பான் வாங்கிகோ;
சுத்தியும் முத்தியும் பார்த்துகோ;
சுருக்கு பையில போட்டுக்கோ;

தஞ்சாவூர் போயிக்கோ;
தாலம் பூ வாங்கிகோ;
தலையில வெச்சிகோ;
தடவி தடவி பார்த்துகோ.

லாவண்யா இந்த பாடல எங்க டீச்சம் ஆக்சனோட செய்வாங்க பாருங்க செம சிரிப்பா இருக்கும்.ஜாலியா இருக்கும்;)))))) ஞாபக படுத்தியதற்க்கு நன்றி...;)

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்