ஆரத்தி தட்டு - 2

தேதி: June 24, 2011

4
Average: 3.9 (9 votes)

 

தெர்மாக்கோல் தட்டு - ஒன்று
பளிங்கு கற்கள் - 25
தெர்மாக்கோல் ஸ்பாஞ்ச்
பெவிக்கால்
கிலிட்டர்ஸ்
சம்கி தூள்
கத்தி

 

தெர்மாக்கோல் ஸ்பாஞ்சில் WELCOME என்ற வார்த்தை தடிமனாக எழுதி படத்தில் உள்ளது போல் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பேப்பரில் சம்கி தூளை கொட்டி வைக்கவும். தெர்மாக்கோலில் நறுக்கின ஒவ்வொரு எழுத்துக்களின் முன்பக்கத்திலும் பெவிக்கால் தடவி சம்கித்தூளில் நன்கு ஒற்றி எடுக்கவும்.
தெர்மாக்கோல் தட்டு, சம்கித்தூள் ஒட்டிய தெர்மாக்கோல் ஸ்பாஞ்ச், கிலிட்டர்ஸ், சம்கி, ஸ்டோன் ஆகியவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
தட்டின் மேல் ஓரத்தில் WELCOME என்ற வார்த்தை பெவிக்கால் வைத்து ஒட்டவும்.
தட்டின் கீழ் ஓரங்களில் நீலநிற 5 பளிங்கு கற்களை இடைவெளிவிட்டு ஒட்டவும்.
வேறு இரு நிறத்தில் பளிங்கு கற்களை எடுத்து கொண்டு இதுப்போல் ஹார்ட் வடிவில் பெவிக்கால் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
பின்னர் இடைவெளி தெரியும் இடத்தில் கிலிட்டர்ஸால் விரும்பிய டிசைனை வரைந்து விடவும். சிம்பிள் ஆரத்தி தட்டு இது. திருமணத்திற்கு மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பின் போது இந்த தட்டில் மணமக்களின் பெயர்களை கிலிட்டர்ஸால் எழுதி ஆரத்தி எடுக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

எப்படி தான் இப்படிலாம் யோசிக்க முடியுதோ...!!! கலக்கலா இருக்கு ஐடியாவும், கலர் காம்பினேஷனும் :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ரேவதி, பத்மா

பிரமாதமாக இருக்கு. பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

it looking simplly superp.pls develope ur activities&share to all members

இது ரொம்ப சூப்பர்

அழகா இருக்கு. ஆரத்தித் தட்டு என்று சொல்லி இருக்கீங்க. சுவர்லயே மாட்டிவைக்கலாம் போல இருக்கு.

‍- இமா க்றிஸ்

சூப்பர் தட்டு போங்க.. ;)
பளிச்சினு இருக்கு தட்டு.வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அழகா இருக்கு. சுலபமா செய்து காண்பித்து இருக்கிங்க....கலர் காம்பினேஷன் சூப்பர்..

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

really good idea NEENKALUM UNGAL KUDUMBAMUM VAALKA VAZAMUDAN

Nice valthukkal