பிரசவத்திற்கு எப்படி தயாராவது?

ஹாய் தோழிகளே,
எனக்கு ஆகஸ்ட் 15 டெலிவரிதேதி சொல்லி இருக்கிறார்கள்,நான் வசிப்பது பஹ்ரைனில்,இன்னும் டெலிவரிக்கு 1 1/2 மாதங்களே உள்ளது,,குழந்தைக்கு என்ன என்ன வாங்க வேண்டும் என சொல்லுங்கள் தோழிகளே,இங்கு எங்கள் வீட்டில் கார்ப்பெட் தான் குழந்தை 1 பாத்ரூம்,2 பாத்ரூம் போனால் கார்பெட்டில் வாடை அடிக்கும்,டயாப்பர் பிறந்த குழந்தைக்கு அதிக நேரம் போடலாமா?ஆலோசனை கூறுங்கள்,மேலும் எனக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டில் பெண் குழந்தை என சொன்னார்கள்,பெண் குழந்தை என்றால் டெலிவரி தேதி தாண்டி தான் பிறக்குமா?எனக்கு குழந்தைக்கு என்ன என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என யாராவது விரிவாக கூற முடியுமா?

இதை பற்றி ஏற்கனவே மன்றத்தில் இருக்குன்னு நினைவு.. நானும் பதிவிட்டிருக்கேன்னு நினைக்கிறேன். இருந்தாலும் நீங்க கேட்டு என்னால பதில் சொல்லாம போக முடியல. முதல்ல வாழ்த்துக்கள்... நல்லபடியா பிள்ளை பெற்றெடுக்க பிராத்தனைகள்.

முதல்ல மனதை மகிழ்ச்சியா வைங்க. பயம் கூடாது. டென்ஷன் கூடாது.

1. குழந்தைக்கு டயப்பர் போட விரும்பினா தாராளமா போடலாம்... ஆனா அடிக்கடி மாற்றி விடனும்... அப்போ ரேஷஸ் வராம குழந்தைக்கும் பிரெச்சனை இல்லாம இருக்கும். என் பிள்ளைகளுக்கு போட்டு தான் விட்டிருந்தேன்... அதனால் பயம் வேண்டாம்.

2. டயப்பர் போடாம விட விரும்பினா “quick dry mats” என்று கடைகளில் கிடைக்கும். அது நம்ம ஊரில் முன்ன வந்த ரப்பர் ஷீட் போல தான், ஆனா உடல் சூடாகாது, பெட் சைஸ் கூட கிடைக்கும்... வாங்கி கார்ப்பெட் மேல் விரிச்சுடுங்க... குழந்தை யூரின் போனா 10 நிமிஷத்தில் ஈரம் காயும். மோஷன் போனாலும் எடுத்து அலசி போட்டா 10 நிமிஷத்தில் காய்ந்து போகும். கார்பெட்லையும் ஈரம் ஆகாது.

3. குழந்தை பெண் என்று தெரிந்துவிட்டதால் பெண் பிள்லைக்கு துணி எடுத்து துவைத்து, காயவைத்து எடுத்து வைங்க. புது துணி அப்படியே போட வேண்டாம்.

4. எடுக்கும் துணி எல்லாம் காட்டன், அல்லது அங்கே குளிரும் என்றால் அதுக்கு ஏற்ற மாதிரி எடுங்க. துணியின் மேலே கயிறு கட்டுவது போல், அல்லது முழுக்க front open உள்ள மாடல் வாங்குங்க. பின்னாடி பட்டன், ஜிப் இருந்தா படுத்தே இருக்கும் குழந்தைக்கு சிவந்து போகும், அழும். தலை நிக்காத குழந்தைக்கு தலை வழியா போடும் ஆடைகள் போட சிரமமா இருக்கும்.

5. நல்ல டவல் வாங்கி துவைத்து வைங்க. டயப்பர்ஸ் (துணி அல்லது யூஸ் & த்ரோ) எல்லாம் வாங்கி வைங்க. துணி வகை எது வாங்கினாலும் துவைத்து காயவைத்து வைங்க.

6. பேபி பவுடர், பேபி சோப், பேபி ஆயில், பேபி லோஷன் எல்லாம் வாங்கி வைங்க.

7. குளிராம இருக்க குழந்தையை நல்லா சுற்றி வைக்கனும்... அதுக்கு நல்ல பெரிய டவல்ஸ் வாங்கிக்கங்க. தலையும் சேர்த்து கவர் செய்யும் விதமா கிடைக்கும். அதையும் மறக்காம துவைங்க.

8. உங்களுக்கு தேவையான நைட்டி, ஆடைகளை தயார் செய்துக்கங்க. முடிந்தவரை பால் கொடுக்க ஏதுவா front open நைட்டிகள் எடுங்க.

9. எதுக்கும் குழந்தைக்கு feeding bottle கூட வாங்கிக்கங்க... சில நேரம் பால் புகட்ட முடியல, இல்லை குழந்தைக்கு உடனே குடிக்க தெஇர்யலன்னா கேட்பாங்க.

10. ஹாஸ்பிடலில் எத்தனை நாள் தங்க வேண்டி வரும் என்று பார்த்து அதுக்கு ஏற்றபடி எல்லா பொருளும் எடுத்து வைங்க. சோப், பேஸ்ட், சீப்புன்னு தேவையான எல்லாமே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்