மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

சாப்பிடும் alau மற்றும் செய்யம் விதம் sollaum pls nan tablet eduthukiren ethanal side effect varuma pls tell me sister.this i take hsg test pls replay

நானும் treatment எடுத்துக் கொண்டே தான் ஜுஸ் குடித்தேன்.அதனால் எதுவும் side effect இல்லை தோழி. மாத விலக்கு ஆன முதல் 3 நாட்கள் morning வெறும் வயிற்றில் 1 டம்ளர் ஜூஸ் குடிக்க வேண்டும்.1 மாதம் மட்டும் குடித்தால் போதும்.

mixie ல் மலை வேம்பு இலையுடன் தண்ணீர் விட்டு அரைத்துக் சாறு பிழியவும்.

மலவேம்பு கிடைக்காத நாட்டில் என்ன் செய்வது இலையை பொடியாக்கி சாப்பிடலாமா சாப்பாட்டுல பத்தியம் இருக்கனுமா

ஆம் அது குடிக்கும் நாட்களில் எண்ணெய்,புளிப்பு அதிகமாக சேர்க்க கூடாது.மலை வேம்பு பொடியாக சாப்பிட்டால் அவ்வளவு effect இருக்காது தோழி.நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்.

வணக்கம் சரண்யா. வாழ்த்துகள்.
எனக்கு திருமணமாகி 1 வருடம் நான்கு மாதங்களாகிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு நாங்கள் டாக்டரிடம் பரிசோதனை செய்து கொண்டோம். எங்களிருவருக்கும் எந்த குறைபாடும் கிடையாது என்று முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்தது. எனக்கு சில மாத்திரைகள் கொடுத்து கருமுட்டை வளர்ச்சியை சோதனை செய்து அதிலும் குறைபாடுகள் இல்லை. அதன் பிறகு நான் சிகிச்சை எடுக்கவில்லை. உங்களது பதிவினை பார்த்த போது எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அவற்றை கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.

1. நீர்க்கட்டிகள் இருப்பவர்கள்தான் இந்த மலைவேம்பு சாறு அருந்த வேண்டுமா.?
2. மலைவேம்பு என்பது சாதாரணமான வேப்ப மர இலையா அல்லது
மலைவேம்பு என்பது வித்தியாசமானதா வேறு எந்த பகுதிகளில் கிடைக்கும்?
3. ஒரு டம்ளர் சாறு என்று கூறியுள்ளீர்கள் அதனை தயாரிக்க எவ்வளவு
இலைகள் சேர்க்க வேண்டும்.?
4. காபி அருந்தும் டம்ளரின் அளவு போதுமானதா அல்லது பழச்சாறு அருந்தும்
டம்ளரின் அளவு சரியானதா?
5. மாதவிலக்கான பத்தாம் நாளிலிருந்து இருபதாம் நாள் வரை கணவருடன்
சேர்வதை எப்போதும் போல தொடரலாமா? ஏனென்றால் இப்போது அந்த
முறையைதான் பின்பற்றி வருகிறோம்.
6. உணவுக்கட்டுப்பாடு ஏதேனும் கடைபிடிக்க வேண்டியது அவசியமா?

தயவு செய்து இதற்கான பதில்களை விரைவில் பதிவிடுங்கள். எல்லோருக்குமே உபயோகமாக இருக்கும்.

1.நீர்க்கட்டி இருந்தால் தான் குடிக்க வேண்டும் என்பது இல்லை.குழந்தை உண்டாவது தள்ளிப் போகிறவர்களும் குடிக்கலாம்.

2.மலை வேம்பு வேப்ப மரத்தில் வேறு வகை.பார்க்க கருவேப்பிலை போல் இருக்கும்.சிலர் வீட்டில் வைத்திருப்பார்கள்.நாட்டு வைத்தியரிடம் கேட்டு பாருங்கள் உங்கள் ஊரில் அந்த மரம் எங்கு இருக்கிற்து என்று.

3.இலைகளின் அளவு சரியாக தெரியாது.கருவேப்பிலை ஜூஸ் 1 glass எடுக்க எவ்வளவு இலை செர்ப்போமோ அவ்வளவு சேருங்கள்.

4.பழச்சாறு டம்ளரின் அளவு.

5.தொடரலாம்.

6.ஜூஸ் குடிக்கும் 3 நாட்கள் மட்டும் தான் எண்ணெய்,புளிப்பு இல்லாத சாப்பாடு சாப்பிடனும்.மற்ற நாட்கள் எப்போதும் போல சாப்பிட்டுக் கொள்ளலாம்.

எங்கள் குடும்பத்தில் என்னுடன் சேர்த்து 3 பேர் குழந்தை உண்டாகி இருக்கிறோம்.அதனால் முயற்சி செய்து பாருங்கள் தோழி...

மிக மிக நன்றி சரண்யா.
நானும் இந்த மாதமே முயற்சி செய்து பார்க்கிறேன். உங்கள் பதிலை போலவே எனக்கு பலனும் கூடிய விரைவில் கிடைக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.

நான் உங்களுக்காக கடவுளை வேண்டிக் கொள்கிறேன்...கண்டிப்பாக கிடைக்கும் தோழி...

நான் உங்களுக்காக கடவுளை வேண்டிக் கொள்கிறேன்...கண்டிப்பாக கிடைக்கும் தோழி...

மேலும் சில பதிவுகள்