முள்ளங்கி சாறு(ஜூஸ்)

ஹாய்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.

முள்ளங்கி சாறு(ஜூஸ்) செய்வது எப்படி? தினமும் இதை குடிக்கலாமா? இதை குடிப்பதனால் என்ன நன்மைகள்?.

தெரிந்த தோழிகள் கூறவும்.

நன்றி.
amutharidhu

அமுதரிது.,

முள்ளங்கி தோல் சீவி ஜூசரில் போட்டு வடி கட்டுங்க. கூட உங்களுக்கு பிடிச்ச ஃப்ளேவர்( புதினா இலை, கொத்தமல்லி இலை, இஞ்சி) வர மாதிரி எதாவது போட்டு காரத்துக்கு பெப்பர் அப்புறம் உப்பும் சேர்த்துக்குங்க.

நல்ல புது ரத்தம் ஊறும்னு சொல்லுவாங்க தினமும் சாப்பிடலாமான்னு தெரியலை., உங்கலுக்கு ஒத்திக்கிட்டா குடிச்சுப்பாருங்க;)

தோழீஸ் வந்து மேலும் கருத்துக்கள் சொல்வாங்க வெயிட் பண்ணுங்க;-)

வெயிட் லாஸுக்காக கேக்கறீங்களா??

Don't Worry Be Happy.

ஜெயலட்சுமிக்கு மிக்க நன்றி.

வெய்ட் குறைக்கதான் கேட்கிறேன். அது மட்டுமின்றி இது உடலுக்கும்
நல்லது என்று கேள்விபட்டேன்.
மற்ற தோழிகளும் வந்து பதில் சொல்வார்கள் பார்ப்போம்.

வெள்ளை முள்ளங்கிச் சாறு பித்தப்பைக் கல்லைக் கரைக்கும். வாரம் இருமுறை இந்த ஜூஸ் செய்து சாப்பிட்டால் நல்ல பலனுண்டு.

மேலும் சில பதிவுகள்