அவசரம் உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.அவசரம் உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்.நான் 34 வாரம் கர்ப்பமா இருக்கேன் என் குழந்தை 2 கிலோ தான் இருக்கா டொக்ரர் நிறை குறைவு என்று சொல்ரார் இப்ப நான் என்ன செய்ய வேண்டும்.என்ன சப்பிட்டால் ஒரு மாதத்தில் குழந்தையின் எடை கூடும் தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள்

அன்புடன்
ரமா

ungkal pathilai avasarama ethir paarkren

அன்பு ரமா

ஒன்னும் பயப்படாதீங்க .. அயர்ன் கால்சியம் ஒன்னா எடுத்துக்காம பாத்துக்குங்க..

பால் ஒரு நாளைக்கு நாலு டம்ளர் குடிங்க. வேகவைத்த பயிரு வகைகளை ஒரு கப் தினமும் மாலை நாலு மணிக்கு சாப்பிடுங்க. முளைக்கட்டியதா இருந்தா இன்னும் நல்லது.

மதியம் பன்னெண்டு மணியிலிருந்து ஒரு மணிக்குள்ள மதிய உணவு எடுத்துக்குங்க ...தினமும் சாப்பாட்டில கீரை காய் வகைகள் நிறயா இருக்கிற மாதிரி பாத்துக்குங்க.

நீங்க அசைவம் சாப்பிடுபர்வகளா இருந்தா தினமும் காலைல வேகவைத்த முட்டை சாப்பிடுங்க. மதியம் ஆட்டு ஈரல் தினமும் சாப்பிடுங்க..

பேரிக்காய் இப்போ கிடைத்தா வாங்கி சாப்பிடவும்.., தர்பூசணி, சப்போட்டா, ஆப்பிள், ஆரன்ஞ் சாப்பிடுங்க இன்னும் உங்களுக்கு பிடித்த ஃபுருட்ஸ் நிறய சாப்பிடுங்க. மாதுளம்பழம் தவறாம சாப்பிடுங்க.

காலைல கால்சியம் எடுத்தீங்கன்னா இரவு அயர்ன் எடுத்துக்குங்க அதுக்கேத்த மாதிரி ஃபுட் வகைகளும் இருக்கிற மாதிரி பாத்துக்குங்க. சீஸ், கெட்டித்தயிர் ஒரு கப், ட்ரை ஃபுரூட்ஸ், நட்ஸ் இரண்டு இரண்டு சாப்பிடுங்க.. அதுவும் ஒரே சமயத்தில் சாப்பிட வேண்டாம், காலைல கால்சியம் எடுத்துக்கும் போது நட்ஸ் சாப்பிடுங்க அதே மாதிரி இரவு அயர்ன் எடுக்கும்போது ட்ரை ஃபுருட்ஸ் சாப்பிடுங்க. தினமும் இளநீர் குடிங்க.

ஸ்வீட்ஸ் சாப்பிடாதிங்க, சுகர் சேத்தாத ஜுஸ் சாப்பிடுங்க. முடிந்த வரை நிறய தண்ணி குடிங்க. காலையும் மாலையும் வாக்கிங்க் போங்க. இடையில டைம் கிடைக்கும்போது வீட்டுக்குள்ளேயே நடங்க .. சுருசுருப்பா இருங்க. எதாவது சின்ன சின்ன வேலை செய்யுங்க.. இரவு எட்டு மணிக்குள்ள சாப்பிட்டுருங்க. இது போதும்பா எனக்கும் முதல் பிரசவத்தின் போது இப்படிதான் இருந்தது.
என் குழந்தை மூணேகால் வெயிட்டோதான் பிறந்தான்;)

எதாவது டவுட்டுனா கேளுங்க;)

அன்புடன்
ஜெய்

Don't Worry Be Happy.

என்ன காரணம் ஜெயா அயர்னும் கால்சியமும் ஒண்ணாஎடுக்கக்கூடாது

அன்பு ராபி.,

அயர்ன் கால்சியம் ஒன்னா எடுத்தா ஹிமோகுளோபின் கம்மியாகும்பா. இதனாலயே குழந்தை வெயிட் போடறதும் குறைவாகும்.

http://www.arusuvai.com/tamil/node/16370 இந்த இழையில் இதப்பத்தி கொஞ்சம் பேசியிருக்கோம் படிச்சு பாருங்க;-)

மேலே குடுத்த உணவு முறை எனக்கு இந்தியாவுல என் பேறுகால மருத்துவர் பரிந்துரைத்ததுதான்.

அன்புடன்
ஜெய்

Don't Worry Be Happy.

தினம் ஒரு முட்டை.

எலும்பு சூப் வகைகள்

தினம், 5 லிருந்து 10 பாதம் பருப்பு மென்று சாப்பிடவும்

ஈரல், புரோக்கோலி, மட்டன் இது போல் சாப்பிடுங்கள்

தினம் இரண்டு அல்லது முன்று வேலை பால்/

இது போல் சத்தான ஆகாரஙக்ள் சாப்பிட்டாலே போதும்

Jaleelakamal

ரொம்ப நன்றி ஜலிலா பானு எனக்கு அமைதியா பதில் கொடுத்து இருகிங்க ரொம்ப தாங்ஸ்ப்பா.
எனக்கு இது இரண்டாவது குழந்தை முதல் குழந்தை 3600 இருந்தான் .இரண்டாவது குழந்தை வெயிற் கம்மி என்றதும் ரொம்ப பயந்து போய் நான் வேண்டாத தெய்வம் இல்ல ஒரே நேர்த்திப்பா.

ஒரு குழந்த பெற்று ஆரோக்கியமா அதை வ்ளர்க்க வேணுமே
மீண்டும் நன்றி ஜலீலா

அன்புடன்
ரமா

enku teryntha tholi tomato daily 1/4k sapidanga ethu doctor advice ethunala wait kuduchu baby nalla kalara errunthathu u consult doctor and u eat

அன்பு ரமா,
நேந்திரம் பழம் சாப்பிட்டா உடனே பலன் கிடைக்கும். முயற்சி பண்ணி பாருங்க.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

மேலும் சில பதிவுகள்