காஃபி பெயிண்டிங் - 3

தேதி: June 28, 2011

4
Average: 3.8 (17 votes)

 

அவுட்லைனாக உள்ள டோரா படம் - சார்ட் பேப்பரில்
காப்பித்தூள் போட்டு ஃபில்டரில் இறக்கிய காஃபி டிகாக்‌ஷன்
சன்ரைஸ் காஃபி பௌடர் – நீரில் கரைத்துக் கொள்ளவும்.
சிறிய பிரஷ்

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
படம் முழுவதும் காஃபி டிகாக்‌ஷனினால் ஷேட் செய்யவும்.
ஷூக்கள் மற்றும் பையின் ஓரத்தில் மீண்டும் இரண்டு முறை பெயிண்ட் செய்யவும்.
டோரா உடைகளின் மீது, சன்ரைஸ் காஃபி பௌடர் கரைசலினால், பிரஷ் கொண்டு சின்ன சின்ன தீற்றலாக அழுத்தவும். தலை முடிக்கு இரண்டு மூன்று முறை பெயிண்ட் செய்யவும்.
அதிக அடர்த்தி தேவைப்படும் இடங்களில்(பார்டர் போன்று) மீண்டும் ஒரு முறை பெயிண்ட் செய்யவும்.
தலைமுடிக்கு கொஞ்சம் அடர்த்தியான கரைசல் எடுத்து, மீண்டும் ஓரிரு முறை பெயிண்ட் செய்யவும். வாய்ப் பகுதிக்கும், அடர்த்தியான கரைசலினால் பெயிண்ட் செய்து முடிக்கவும். திருமதி வனிதா அவர்களின் காஃபி பெயிண்டிங்கை பார்த்து, சீதாலெக்ஷ்மி அவர்கள் முயற்சி செய்த படத்தை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

உங்களுடைய முதல் கைவினை பகுதி குறிப்புக்கு முதல் பின்னூட்டம் நான் தான்... சூப்பர் சூப்பர் சூப்பர்... சம கியூட்டா இருக்கு டோரா. டோராக்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கு உங்க பெயிண்டிங். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா..எத்தனை இடத்தில் பாராட்டி கருத்து தெரிவிப்பது
டாரா ஏற்கனவே அழகு..அவளை இன்னும் கமகமனு அழகு படுத்தி இருக்கிங்க.
வாழ்த்துக்கள்.. மிக அழகாக வரைந்து இருக்கிங்க. நுணுக்கமான படைப்பு..:)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

க்யூட்டா இருக்காங்க டோரா. சிம்பிளா அழகாக பெய்ன்ட் செய்து காட்டி இருக்கிறீங்க. இனி அடுத்தடுத்து கைவினைக் குறிப்புகள் வரும்ல. ;) வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

சீதா அம்மா,

சூப்பர் போங்க!!!
இப்போ என் மகள் தான் "அம்மா!!லுக் டோரா" சொன்னாங்க..
இத்தனை நாள் ஓவியர் உள்ளே இருப்பதை சொல்லாமலே இருந்துடீங்க!!!!வாழ்த்துக்கள்!!!

என்றும் அன்புடன்,
கவிதா

காபி பெயிண்டிங்கில் டோரா அழகா சிரிக்கிறாங்க....நான் கூட வனி தான் புதுசா அனுப்பியிருக்காங்கன்னு பார்க்க வந்த இங்கேயும் நீங்க.....பெரிய பேத்தியை சமாதானம் பண்ணும் முயற்சியா? கலக்குங்க.....உங்களுக்கு தெரிந்த மற்ற கைவிணைகளை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

எப்படியோ வனி உங்களிடம் இருந்த ஓவியரை எழுப்பி விட்டிருக்காங்க.....வாழ்த்துக்கள் வனி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா மாதிரி நானும் வனியோட படம்னு தான் நினைச்சேன்.

மூன்றாவது பெயிண்டிங்கில் என்ன வித்தியாசமாகவோ செய்திருக்கிறாரோ என்று ஆவலோடு கிளிக்கினால் இங்கே ஓவியரே வேற.

ரொம்ப அழகா கலர் பண்ணியிருக்கீங்க.

நமக்கு காஃபி பெயிண்டிங்க்லாம் முடியாது. ஒன்லி குடிச்சிங்க்.

வாழ்த்துக்கள்.

அன்பு வனிதா,

ஏகலைவன் மாதிரி, உங்க படைப்புக்களைப் பார்த்து, கத்துக்கணும்னு ஆசைப்பட்டு, பெயிண்ட் செய்தேன். நீங்க பாராட்டியது, ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இது முதல் முயற்சி. நீங்கதான் குரு. குருவிற்கு பெருமை சேர்க்கற மாதிரி, இன்னும் நன்றாக செய்கிறேன். உங்க வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

அன்பு ரம்யா,

வனிதா சொல்லிக் கொடுத்திருப்பது மாதிரி, ஸ்டெப் பை ஸ்டெப்பாக செய்தேன். என்னால் கூட, இந்த மாதிரி செய்ய முடிஞ்சிருக்கு என்று சந்தோஷமாக இருக்கு. பாராட்டுக்களுக்கு நன்றி.

அன்பு இமா,

இந்தப் பகுதியில் வரும் எல்லாவற்றையும் ஆசை ஆசையாகப் பார்த்து, ரசிப்பேன். நாமும் செய்யணும் என்று தோணும். தயக்கமாக இருக்கும். நீங்க ஃப்ளவர் வாஸ் பகுதியில், கைவினைகள் செய்து அனுப்புங்க, என்று சொல்லியிருந்தது, ரொம்பவும் மோடிவேடிங் ஆக இருந்தது. நன்றி, இமா.

அன்பு கவிதா,

உங்க மகளுக்குப் பிடிச்சிருந்ததா? ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
உங்க பாராட்டுக்கள் கேட்டு, இன்னும் இது போல அடிக்கடி கைவினைகள் செய்து பார்க்கணும்னு ஆர்வமாக இருக்கு.

அன்பு லாவண்யா,

நீங்க சொல்வது நிஜம்தான். பேரக் குழந்தைகளுக்காக, இந்த மாதிரி, கற்று வைத்துக் கொண்டால்தான், நம்மை கன்சிடர் பண்ணுவாங்க வனிதாவுக்கு என்னுடைய மனம் நிறைந்த நன்றி.

அன்பு தேன்மொழி,

வனிதா அளவுக்கு பெர்ஃபெக்‌ஷன் என்பதெல்லாம் இன்னும் ரொம்ப நாள் ஆகும்னு நினைக்கிறேன்.

இது சுலபமாகத்தான் இருந்தது. வனிதா கொடுத்திருக்கும் பேஸ் பெயிண்டிங் ஸ்டெப்ஸ் விளக்கமாக இருக்கு. பாராட்டுக்களுக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

ஒவ்வொருத்தரும் கலக்குஙக ம்ம்ம் நம்மளோட தெறமையை எல்லாம் தூசிதட்டி எடுத்துப்பாக்கணும் போல உங்களுக்கெல்லாம் இந்த அறுசுவை தளம் நல்ல வாய்ப்பைத் த்ருது நன்றாக இருக்கிறது

அன்பு ரபியா,

வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா நீங்களா...!

நானும் வனியாதான் இருக்கும்னு நினைச்சேன்;)
ஒரு தடவை நீங்க என் பதிவைப் பார்த்து கேட்டிருந்தீங்க இப்போ அம்மாக்களெல்லாம் பிள்ளைகளுக்காக எவ்வளவு செய்ய வேண்டியிருக்குன்னு ....அப்போ நான் சொன்னில்ல ... நீங்களும் உங்க பேத்திக்காக இனி பண்ண வேண்டி இருக்கும்னு..... பாருங்க இப்போ உண்மையாயிடுச்சுல;-)

ரொம்ப அழகா இருக்கா டோரா;)
இந்த லீவுல அவனுக்கு சொல்லிக்குடுக்க இன்னொரு ஹேண்ட்வொர்க் கிடைச்சாசு;)

நன்றி சிதாம்மா
இன்னும் நிறய கைவினைகள் கொடுத்து எங்களை மிகிழ்வியுங்கள்;-)

Don't Worry Be Happy.

அன்பு ஜெயலஷ்மி,

ஆமாம், நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட். இன்னும் இந்த மாதிரி கார்டூன் காரக்டர்ஸ்ல என்னல்லாம் செய்து எடுத்து வைக்கணும்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்:) அதோட சிம்பிளான க்ராஃப்ட்ஸ் எல்லாம் தேடத் தொடங்கியாச்சு:):)

நீங்களும் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

பாராட்டுக்களுக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா ரொம்ப அழகா செய்து இருக்கீங்க. மற்றவர்களை பார்த்து கத்துகிட்டு செய்தாலும் அதில் ஒரு பர்ஃபக்ஷன் இருக்கனும்ல அதில் உங்கள் படத்தில் ரொம்ப நல்லாவே வந்திருக்கு. எனக்கும் இதுப் போல் செய்து பார்க்கனும்னு ஆசை வந்துடுச்சு இதோ காபிதூள் பாக்கெட்டோட உட்கார்ந்துட்டேன். இன்னும் நிறைய கைவினை பகுதிக்கு அனுப்பி வைங்க மா

சீதாம்மா காபி பெயிண்டிங் சூப்பர். நல்லா பெயிண்ட் பண்ணி இருக்கீங்க. முதல் க்ராஃப்ட்டோட நிறுத்திட கூடாது. சிம்பிளா செய்யற க்ராஃப்ட் எல்லாம் மறக்காம எங்களுக்கும் சொல்லி கொடுத்துடுங்க. வாழ்த்துக்கள்.

டோரான்னா எப்போதும் ஆரஞ்சு & ரோஸ் கலர் ட்ரெஸில்தான் இருக்கும்,ஆனால் அவளுக்கு ட்ரெஸ் சேஞ்ச் பன்ன முதல் ஆள் நீங்கதான்மா!என் மகளுக்கும் டோரான்னா ரொம்ப இஷ்டம்,வாழ்த்துக்கள்மா!!!

Eat healthy

சீதாம்மா நீங்களாம்மா நான் வனின்னு நினைச்சு வந்தேன் சூப்பர்ம்மா டோரா சூப்பரா இருக்கா அழகுக்கு அழகு உங்க பெயிண்டிங் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு யாழினி,

அவசியம் செய்து பாருங்க. எங்களுக்கும் அனுப்பி விடுங்க, பார்த்து ரசிக்கிறோம்.

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.

அன்பு வினோஜா,

உங்களுடைய உற்சாகமூட்டும் பதிவுகள், இன்னும் கற்றுக் கொள்ளணும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

அன்பு ரிஸானா,

இந்த காஃபி கரைசலில், அதன் திக்னெஸ்ஸைப் பொறுத்து, அடுத்தடுத்து செய்யும்போது, நிறைய ஷேட்ஸ் கிடைக்கும். உங்கள் மகளுக்கு ஒரு பெயிண்டிங் ட்ரை பண்ணுங்க.

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.

அன்பு ஸ்வர்ணா,

வனிதாவின் பெயிண்டிங் என்று நினைத்ததாக நீங்கள் சொல்வதே, எனக்கு மிகப் பெரிய பாராட்டாக இருக்கிறது.

மிக்க நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

வணக்கம் சீதா அம்மா காபி பைண்டிங் என்றதும் வனிதா என்று நினைத்தேன் பார்த்தால் நீங்க வாழ்த்துக்கள் மிகவும் அருமையா செய்து இருக்கீங்க....

ரொம்ப அழகா இருக்கு சிதா அம்மா ..............மிக அருமை .......எங்களோட பகிர்ந்து கொண்டததற்க்கு நன்றி

"காயத்தின் வலியை உணர்ந்தவர்கள்

மற்றவர்களை காயபடுத்த மாட்டார்கள் "

சீதா நீங்களா? நான் வனின்னு நினைச்சேன் சூப்பர் இன்னும் என்ன என்னதிறைமைகளை ஒளிச்சி வ்ச்சி இருக்கீங்க அவுத்து விடுங்க நாங்க பார்க்கணும்ல வாழ்த்துக்கள்

அன்பு கௌசல்யாமீனா,

வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி

அன்பு மதுரைப் பொண்ணு,

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி, மதுரை என்றதும் உங்க ப்ரொஃபைல் பார்த்தேன். (நான் பிறந்து, வளரந்தது மதுரைதான்).
இடியாப்பம் வித் பாயா என்று சொல்லியிருக்கீங்க, நம்ம ஊரில் ஃபேமஸ் இடியாப்பம் வித் தேங்காய்ப்பூ, சீனி, இடியாப்பம் வித் தேங்காய்ப்பால் ஆச்சே, அது பிடிக்காதா?! (சும்மா ஜோக்):):)

அன்பு ஃபாத்திமா,

உங்க பாராட்டுக்கள் எனக்கு மிகவும் உற்சாகத்தைத் தருகிறது. மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

என் பேரு ரிஸானா இல்ல,ரஸியா!!!பரவாயில்ல நீங்க வச்ச பேரும் நல்லாதான் இருக்கு சீதாம்மா!

Eat healthy

சீதாலக்ஷ்மி அம்மா,
டோரா படம் ரொம்ப நல்லா பெயிண்ட் பண்ணி இருக்கீங்க.முதல் முயற்சி'னு நம்பவே முடியல.அவ்வளவு அழகா செய்து இருக்கீங்க.இன்னும் தொடர்ந்து கைவினை பகுதியிலும் கலக்குங்க.வாழ்த்துக்கள்.

சீதா லக்ஷ்மி உங்க டோரா ரொம்ப அழகா இருக்காங்க...வாழ்த்துக்கள்...

அன்பு ரஸியா,

பேரை மாத்தி சொல்லிடேனா, சாரிப்பா. இனிமேல் கரெக்டாக எழுதறேன். இனி மறக்க மாட்டேன்.

அன்பு ஹர்ஷா,

அதுக்குதானே, ஈஸியாக இருக்கும் க்ராஃப்ட் எடுத்துகிட்டேன். :):)வாழ்த்துக்களுக்கு நன்றி.

அன்பு சுமதி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாலஷ்மி... இதுவரை நான் எந்த பகுதியிலும் எல்லாம் பதிவையும் படிச்சதில்லை. எனக்கு வரும் பதிவுகளை மட்டுமே படிப்பது வழக்கம். நேரம் போதாது என்பதே காரணம்... உங்களுக்கும் தெரியும்.

இம்முறை உங்களுக்கு வந்த அனைத்து பதிவையும் படிச்சேன்.. நான் அனுப்பிய காபி பெயிண்டிங்க்கு வந்த பின்னூட்டத்தை விட உங்களுக்கு வந்த பின்னூடம் என்னை அளவில்லை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உங்க கைவினையின் நேர்த்தியும், அழகும் பார்க்கும் போது நான் அனுப்பியதை பார்த்து இப்படி செய்தாங்களா என்று நம்பவே முடியாத அளவுக்கு பிரமாதமா இருக்கு. அத்தனை மகிழ்ச்சியையும் பெருமையையும் எனக்கு தேடி தந்த உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. ரொம்ப ரொம்ப நன்றி சீதாலஷ்மி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா