ரம்யாவை வாழ்த்தலாம் வாங்க :-)

நமது தோழி திருமதி.ரம்யா கார்த்திக்
சில்வர் ஸ்டார் வாங்கி,கூட்டாஞ்சோறில் புதிதாக இணைந்துள்ளார்.அவரை வாழ்த்தலாம் வாங்க,தோழிகளே.

மேலும் பல குறிப்புகள் தந்து கோல்டு ஸ்டார் வாங்க எனது வாழ்த்துக்கள் ரம்ஸ்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

congratulation to give more recipes . regards.g,gomathi.

ரம்ஸ்.,

கையில எடுத்த கரண்டிய கீழே வைப்பேனான்னு விடாப்பிடியா பிடிச்சு சில்வர் ஸ்டார் வாங்கிட்டீங்க;-) இதே ஸ்பீடுல கோல்டு
ஸ்டாரும் அப்புறமா அறுசுவையில இடம்பெறப்போற பிளாட்டினம் ஸ்டாரும் (ஞானதிருஷ்டி) வாங்கிடுங்க;) வாழ்த்துக்கள் ரம்ஸ்;-)

Don't Worry Be Happy.

பார்ரா....... நம்ம ரம்ஸ், சில்வர் ஸ்டார் ரம்ஸ் ஆகியாச்சா....... பலே......... வாழ்த்துக்கள் திருமதி. ரம்யா கார்த்திக்........ நீங்க மென்மேலும் பற்பல சாதனைகள் புரிய என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்........ (அதுசரி எப்ப ட்ரீட்????........)

ஒவ்வொருத்தரும் பொறுமையாக சமையல் அப்புறம் கவிதை , கைவினைன்னு அசத்துரீங்கப்பா இருங்க இருங்க நானும் ஒரு நாள் வாரேன் அவவளவு பேரும் ஓடியே போயிரூவீங்க பாருங்கலேன் (வெறுத்து)

எப்போ எப்போ இந்த மேட்டர் நடந்தது???!!! கொஞ்ச நாள் இந்த பகுதி பக்கம் எல்லாம் போகலன்னா இது போல் எதாவது நல்ல விஷயம் நடந்துடுது... :) ரம்யா... சமையல்ல இத்தனை சிறப்பான விஷ்ச்யத்தை கத்துக்கிட்டு எதுவுமே தெஇர்யாத மாதிரி ஏமாத்திட்டீங்க ரொம்ப நாள்... இனி முடியாது.... கூட்டாஞ்சோறு பகுதியில் இருந்தா நாங்க எப்பவும் குறிப்பு கேட்டுகிட்டே இருப்போமே ;) வாழ்த்துக்கள் ரம்யா... சீக்கிரமே அசத்தலான பல குறிப்புகளோடு வெள்ளி தங்கமாகனும்... தங்கத்தின் எண்ணிக்கை அதிகமாகனும்!!! சரியா??? கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சில்வர் ஸ்டார் வாங்கி கூட்டாஞ்சோறில் இணைந்த ரம்யாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.சீக்கிரமே கோல்டு ஸ்டார் வாங்குகள்.

Expectation lead to Disappointment

நன்றி

ஸ்வரு

திடிர்னு என்னடா என்னை வாழ்த்தி இழை ஆரம்பிச்சிருக்கிங்கனு பார்த்தேன். நானே இன்னும் கூட்டாஞ்சோறு பாக்கலை.. நீங்க பார்த்து வாழ்த்து இழை தொடங்கியதற்கு மிக்க நன்றி ஸ்வரு ;)

கோமதி
வாழ்த்துக்கு மிகவும் நன்றி

ஜெய்
:) இன்னும் கூட கரண்டியை பிடிச்சிட்டுதான் இருக்கேன் .. ஹீஹீஹீ வாழ்த்துக்கு மிக்க நன்றி

தீபா
ட்ரீட் தானே வீட்டுக்கு வாங்க.. வாழ்த்துக்கு நன்றி டா

ரபியா
கண்டிப்பா வாங்க.. நாங்களும் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.. அதுக்காக வெறுத்தெல்லாம் பதிவு போடப்படாது.;) நன்றீ

வனி
ரொம்ப நன்றி வனி.. உங்களை பார்த்து கத்திக்கிட்ட விஷயம் தான், இரண்டு குட்டிஸ்ஸை வைத்து நீங்கள் எல்லா பகுதியிலும் கலக்கறீங்க.. நீங்க சொன்ன மாதிரியே இன்னும் பல குறிப்பு அனுப்பறேன் ;)

மீனாள்
வாழ்த்துக்கு மிக்க நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாழ்த்துக்கள்...............

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ரம்ஸ்,ரொம்ப சந்தோஷம்டா.வாழ்த்துக்கள் ரம்ஸ்.

அனைவரும் விரும்பும் வண்ணம் பலவிதமான குறிப்புகளை கண்கவரும் அழகிய படங்களோடு விருந்தளித்த அன்பு ரம்ஸிற்கு மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.இன்னும் பல சிறந்த குறிப்புகளை கொடுத்து தங்கமென மின்ன வாழ்த்துக்கள் ரம்ஸ்.

அன்புடன்
நித்திலா

மேலும் சில பதிவுகள்