’’முதல் பிரசவமா?’’....

ஹாய் தோழீஸ்,முதல் பிரசவமா கொஞ்சம் பயமாய்தான் இருக்கும்.குழந்தை பிறந்தவுடன் அடுத்தது என்ன தாய்பால்தான்.தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம்.அரை மணி நேரத்துக்குள் தாய்பால் புகட்ட வேண்டும்.குழந்தயின் சரியான மூளை வளர்ச்சிக்கும் தேக ஆரோக்கியத்துக்கும் தாய்பால் மிகவும் அவசியம்.எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது தாய்ப்பால் எளிதில், வெதுவெதுப்பான சூட்டில் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்கக் கூடியது. கலப்படம் செய்ய முடியாதது. உயர்தரப் புரதம், கொழுப்பு, அமினோஅமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ்பேக்டர் போன்ற தடுப்புப் பொருட்கள் இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் ஆறு மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் எண்ணற்ற பயன்கள் உள்ளன. தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது. கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது. இப்படி இன்று முழுக்க தாய் பாலின் மகிமையய் கூறிக் கொண்டே போகலாம்.இந்த தளத்தின் ஆரம்பத்தில் தாளிகா அவர்கள் கூறியது போல

//சில குழந்தைகள் விதிவிலக்காக ஆரம்பத்தில் தடுமாறலாம். ஆனால், பழக்கத்தில் எல்லா குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வந்துவிடும். பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்று தொடர்ந்து வேறு வழிகளில் பால் புகட்டக்கூடாது. தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் குழந்தைகள் பாலை உறிஞ்சுக் குடித்தல் அவசியமான ஒன்று. எனவே, பால் புகட்டலை பழக்கத்தில் உண்டு செய்யவேண்டும்//அதற்கு குழந்தை வயிற்றில் இருக்கும் போதே 6 மாதம் தொடக்கம் நம் மார்பின் முளைக்காம்பில் சிறிது நல்லெண்ணை தடவி மசாஜ் செய்து காம்பை வெளியே எடுத்து விட வேண்டும்.குழந்தை கிடைக்கும் போது குழந்தைக்கு பால் குடிக்க இலகுவாக இருக்கும்.சில குழந்தைகள் மார்பில் வாய் வைத்து உறிஞ்சாது.15,20 நாட்கள் கூட ஆகலாம்.அதுவரை பொறுமையாக மார்பில் இருந்து பால் எடுத்து கரண்டியால் பருக்கவும்.இடை இடையே குழந்தையை அடிக்கடி மார்பில் வைத்து குடிக்க முயற்சி செய்ய வேண்டும்.தயவு செய்து பால் போத்தலில் கொடுத்து விடாதீர்கள்.அதற்கு
பழகினால் ஒரு போதும் மார்பில் உறிஞ்சாது.இது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

இந்த அனுபவம் எனக்கும் உள்ளது என் குழந்தை பிறந்து 1 மாதம் வரை சரியாக உறிஞ்சி பால் குடிக்கவில்லை மிகவும் கஸ்டப்பட்டேன் முடிந்த அளவு முயற்சி செய்து இப்போது நன்றாக இருக்கிறான்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

இப்ப என் அனுபவத்தை சொல்கிறேன்.கவனமாய் கேளுங்க.தவமிருந்து காத்திருந்து இலட்சக்கணக்கில் செலவளித்து ஆயிரக்கணக்கில் மாத்திரை விழுங்கி இறைவன் அருளால் திருமணம் முடித்து 5 ஆண்டுகள் நிறைவடையும் வேளை 15 மணி போரட்டத்தின் பின் 20 தையலுடன் செக்கச்செவேல் என 4 கிலோ எடையுடன் ஆண் குழந்தையை சுகப் பிரசவமாய் பெற்றெடுத்தேன்.என் குழந்தையை கையில் தந்தவுடன் நான் பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோட பால் கொடுத்தேன்.என் மார்பில் வாய் வைக்காமல் தூங்கி விட்டது.வார்ட்டுக்கு வந்த பின் என் தாய் மாமியார் எல்லோரும் முயற்சி செய்தார்கள்.குடிக்கவில்லை.இரவாகிவிட்டது.பிறந்து 10 மணித்தியாலங்கள் எதுவும் குடிக்கவில்லை.அதன் பின் நர்ஸ்மார்கள் ஒவ்வொருவராய் முயற்சி செய்தார்கள்.என் நெஞ்சை தள்ளிவிட்டு பயங்கரமாய் அழுதது.கூடவே நானும் சேர்ந்து அழுதேன்.பிறகு 2 முறை குழந்தயை கொண்டு போய் வயரில் பால் கொடுத்து கொண்டு தந்தார்கள்.மார்ச் பயங்கர சூடு.வீட்டில் போய் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று வைத்தியரிடம் விஷயத்தை சொல்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டேன்.என்னவரும் 15 நாட்கள் விடுமுறையில்தான் வந்திருந்தார்.வீட்டிற்கு வந்தும் எல்லோரும் ட்ரய் பண்ணினர்கள்.ஏலாதகட்டத்தில் என் மார்பை நெசித்து நெசித்து கரண்டியில் பருக்கினார்கள்.அது ஒரு சொட்டு தண்ணீர் போல் திரவமாக இருந்தது.வரவில்லை.சம் சம் தண்ணீரை கொடுத்தார்கள்.அடுத்த நாள் காய்ச்சல் கூடியது.திரும்ப ஹொஸ்பிடல் கொண்டு போய் கையில் சேலைன் பாய்ச்சு ஆடை இல்லமல் போட்டு.குழந்தைக்கு லைட் போட்டு விட்டார்கல்.7 நாட்கள் இருந்தேன்.மொத்தம் கை,காலில் 23 இடத்தில் என் கண் முன்னே ஊசி குத்தினார்கள்.26 சேலைன் போத்தல் பூட்டினார்களொவொரு முறையும் நான் கதறி கதறி அழுதேன்.எனக்கு கட்டில் இல்லை.நின்று நின்று என் கால் வீங்கி இருந்தது.அந்த உயர கட்டிலில் ஏறி ஏறி என் தையல் பிறிந்து விட்டது.அது வரை கரண்டியால்தான் எடுத்து பருக்கினேன்.5வது நாள்.என் 5வது திருமணநாள்.பகல் திடீர் என வைத்தியர்கள் என் குழந்தயை சூழ்ந்தர்கள்.குழந்தை மஞ்சளடித்து விட்டது என சுட்ரி வளைத்து ஏதேதொ கொண்டு வ்ந்து பூட்டினார்கள்.எல்லோரும் ஓடி திரிந்தார்கள்.பேபி டொக்டர் புடை சூழ வந்தார்.அவசரமாக அம்பியூலன்ஸ் வர வைக்கப்பட்டது.உடனே வீட்டுக்கு கோல் பண்ணி யாராவது வர சொன்னர்கள்.எனக்கு உயிரே போய் விட்டது.அழுது அழுது ஓய்ந்துவிட்டேன்.ஒரு நர்ச் பக்கத்தில் வந்து பால் போதாமல் குழந்தை மஞ்சள் அடித்துவிட்டது.அவசரமாக குழந்தையின் இரத்தம் முழுதாய் மாற்றனும்.குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்பு குரைவாக உள்ளது என்று.உடனே இறைவனிடம் இரு கரம் ஏந்தி மன்றாடினேன்.அவசரமாக 100 கிலோ மீட்டர் உள்ள கொழும்புக்கு கொண்டு போகனும்.என்னவர் எனக்கு பரிசளிக்க பெறுமதியான் நகைஉம் விஷேடம்மாய் தயாரிக்க பட்ட பகல் உண்வோடும் வந்திருந்தார்.நான் தூங்கி 6 நாட்கள்.என் பக்கத்தில் யாரும் இல்லை.குழ்ந்தையைஉம் யாருக்கும் பார்க்க முடியாது.என்னவரை கண்டவுடன் அவர் மேல் சரிந்து விழுந்துவிட்டேன்...

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

உங்கள் கதையை கேட்ட எனக்கே இவ்வளவு கவலையாக உள்ளது உங்கலுக்கு எப்படி இருந்துரிக்கும் என்பதை என்னால் உனர முடிகிரது கவலை வேண்டாம் தோழி!இறைவன் உங்கள் குழந்தைக்கு நீண்ட ஆயுழையும் சுகத்தையும் கொடுப்பான்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

என்னை எழுப்பி ஆறுதல் படுத்திவிட்டு.இது இறைவன் தந்த குழந்தை.மக்காவில் அவனிடம் மன்றாடி கேட்டு அங்கே வைத்து உருவான் குழந்தை.அவன் கை விட மாட்டான் என்று நம்பிக்கையுடன் கூற்னார்.ஒரு நர்ச் திரும்ப குழந்தையிடம் இரத்தம் எடுத்து சில நேரம் இங்க ரிப்போர்ட் பிழையாகலாம்.ப்ரைவெட்டா செக் பண்ணி வர சொன்னார்.என் கணவர் நேராக போய் இரத்தத்தை ஒப்படைத்து விட்டு பள்ளிக்கு போய் ஜும்மா தொழுதுவிட்டு ரிப்போட்டை வாங்கிட்டு வந்தார்.ரிப்போட் நோர்மல்.மெதுவாக குழந்தையை பூட்டி இருந்த உபகரணத்தை கழற்றினார்கள்.ஆளாளுக்கு பேசாமல் மெதுவாக நழுவி விட்டார்கள்.அவர்களின் கவனயீனத்தால் உயிர் போய் வந்தது.அதுக்கு பின் தொடங்கியது என் சோதனை.என் மைத்துனி இந்த கரண்டியால் கொடுத்து போதுமா பால் போத்தல் வாங்கி அதில் கொடுங்க என்று நல்ல ஐடியா தந்தாள்.கொடுத்தேன்.மட மட என தாகம் தீர உறிஞ்ச்சி குடுத்தான்.அதுக்கு பின் என்னிடம் குடிக்கவே இல்லை.6 மாதம் தனி தாய் பாலை 1 மணிக்கொருதரம் என் மார்பில் கடைசி சொட்டுவரை போராடி போராடி எடுத்து கொடுத்தேன்.அதன் வலி வார்த்தயால் சொல்ல முடியாது.என் குழந்தை மெலிந்து கொண்டுபோனான்.6 மாதம் நல்லது கெட்டது என வீட்டை விட்டு எங்கயும் போரதில்லை.விடிய விட்ய பால் எடுப்பதும் கொடுப்பதும்தான் என் வேலை.என் மாமியார்,தாய் எல்லோரும் நான் கொடுக்கிறேன் என கேட்பார்கள்.நான் கஷ்டப்பட்டு எடுத்ததை நானேதான் என் நெஞ்சோட் அணைத்து கொடுப்பேன்.அப்பதான் பாசம் அதிகரிக்கும் என்று.சில நேரம் நான் எடுப்பது போதாமல் அழுவான்.நானும் சேர்ந்து அழுவேன்.சில நேரம் மீதமாகும்.வெளியே கொட்டிவிடுவேன்.சில நேரம் பால் அதிகம் சுரந்து எடுக்க முடியாமல் வேதனையா இருக்கும்.1 வயது வரை சாப்பட்டோடு தனி தாய்பால்தான் எடுத்து கொடுத்தேன்.ஒரு வயதுக்கு பின் எனக்கு பால் வரல.இதுவரை குழந்தை வாய் வைத்து உறிஞ்சினால் என்ன சுகம் என எனக்கு தெரியாது.இப்ப பையனுக்கு 1 வயது 3 மாதம்.

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

நன்றி ரிசானா.இப்ப என் குழந்தை ஆரோக்கியமாய் உள்ளான்.நோய் வாராது மிகவும் குறைவு.ஆனால்,8.5 கிலோதான் இருக்கிறான்.இப்பவும் கொழு கொழு குழந்தைகளை கண்டால் கொஞ்சம் கவலை வாரதுதான்.உங்களுக்கு எத்தனை குழ்ந்தைகள்?

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

உங்கள் சொந்த ஊர் எது?நான் மாத்தளை இப்போது டுபாய் ஒரு மகன் 5 மாதம் கொலு கொலுவென்ரு இல்லவிட்டால் என்ன ஆரோக்யமாக இருக்கிறான் தானே அல்ஹம்துலில்லஹ்!அது போதும் சந்தோஷமாக இருங்கள் உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

நன்றி.என் ஊர் புத்தளம்.இப்ப கடாரில் இருக்கிறேன்.இன்ஷா அல்லாஹ் நம் நட்பை தொடர்வோம்.

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

இன்ஷா அல்லாஹ்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

மிகவும் அவசியமான பதிவு. பால் வரவில்லை என்று சொல்லி புட்டிபாலுக்கு பழக்கும் சிலரை பார்க்கும் போது கோபம் தான் வரும்.
சொன்னாலும் அவர்களுக்கு பிடிபதில்லை. ...பால் கொடுக்கும் தாய்மாருக்கு மார்பக புற்றுr நோய் வரும் வாய்ப்பும் குறைவாம்.

தோழி ஷிமி...

இதே அனுபவம் எனக்கும் உண்டு.
2004 ல் திருமணமான அடுத்த வருடமே என் மகள் சிசேரியனில் பிறந்தாள்.நார்மல்வெயிட்.நர்ஸ் ,டாக்டர் எல்லாம் குழந்தை லட்டு மாதிரி இருக்கிறாள்னு சொல்லிட்டே இருந்தாங்க.பிறந்த்து முதலே அழுது கொண்டே இருந்தாள். பாலும் குடிக்கவில்லை.அப்பப்போ குடிப்பாள்.பிறகு ஒரே அழுகைதான்.கண்ணெல்லாம் மஞ்சளாக இருந்தது.பால் போதவில்லை என்றாஅர்கள் ப்ளட் டெஸ்ட் எடுத்தார்கள்.பிறகு வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொன்னார்கள்.அங்கே ஒரு நாள் இருந்தோம்..

அங்கே இன்னும் கூடி விட்டது.ப்ளட் மாத்த வேண்டும் என்றார்கள். பிறகு வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொன்னார்கள்.அங்கெ உடனே அட்மிட் செய்து சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தார்கள்.பிறந்து 5 நாட்கள் ஆன என் குழ்ந்தையின் கையில் ட்ரிப்ஸ் ஏற்றினார்கள்.அடுத்த நாள் காலையில்தான் பார்க்க விட்டார்கள்.என் நெஞ்சே வெடித்து விட்டது.

ஒரே அழுகை..பால் குடிக்காததால் கட்டிக்கொண்டது. ப்ரெஸ்ட் பம்ப் வைத்து எடுத்தும், பீய்ச்சி எடுத்தும் அப்பபோ கொடுப்பார்கள்.வலி தாங்க முடியாது.குழ்ந்தைக்காக எவ்வளவு வலியும் தாங்க முடியுமே.. நியொனேட்டல் ஐசியூ கு வெளியே நின்று பார்த்து விட்டு அழுது கொண்டே வந்து விடுவேன்.3 நாட்கள் ஃபோட்டொதெரப்பி கொடுத்தார்கள். பிறகு நார்மல் ஆகி விட்டாள்.வீட்டிற்கு வந்தபின் நார்மலாக பால் குடித்தாள்.

இப்ப நினத்து பார்த்தாலும் அந்த 10 நட்களும் பட்ட கஷ்டம்...அப்பா.தையல் வேறு பிரிக்கவில்லை.டெலிவரி முடிந்து வீட்டுக்கு போக முடியாமல் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக அலைந்தது.என் கண்மனியை அருகிலிருந்து பார்க்க முடியாம..அய்யய்யோ எந்த தாய்க்கும் அப்படி நடக்கவே கூடாது.

உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது ஷிமி.
இனி எந்த கஷ்டமும் வராது உங்கள் மகனுக்கு.நன்றாக இருப்பான்.

கவிதாசிவகுமார்.

anbe sivam

மேலும் சில பதிவுகள்