முடி உதிர்வதை தடுக்க ஹெல்ப் பண்ணுங்க frnds

என்னக்கு முடி ரொம்ப கொட்டுது பா வாங்கு எடுக்கிற இடத்துல முடியி இல்ல .........என்ன மாதிரி ஆயில் உபயோகம் பண்ணனும்னு எனக்கு டிப்ஸ் கொடுங்க உங்களூட பதிலுக்காக காத்திருக்கிறேன்........முடி வளர்ரதுக்கும் உதவி செய்யுங்க

... waiting fr ur rply frnds

-சபி

இந்த பிரச்சனை எல்லாருக்கும் இருக்கு,யார் யார் என்ன என்ன முறைகள் கடைப்பிடிக்கிறீங்க,எது எது உபயோகமானதுன்னு தயவுசெய்து எல்லோரும் தெரியப்படுத்தவும்.சபீனா கவலைப்படாதீங்க நம்ம தோழிகள் நிறைய பேர் வந்து இது பற்றி பேசுவார்கள்.எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு.

இதுவும் கடந்துப் போகும்.

அன்பு சபீனா.,

நேர் வகிடு எடுக்கும் இடத்தில் முடிகொட்டினா சின்ன வெங்காயச் சாறு தடவி ஒரு பத்து பதினைந்து நிமிசம் வச்சிருந்து குளிச்சிருங்க... அந்த இடத்தில சீக்கிரம் முடி வளர்வதை நீங்க கண்கூட பாப்பீங்க. (கொஞ்ச நேரம் கண்மூடி உக்காந்துக்குங்க.. வேற என்ன பண்ண... முடி வளரனுமே)

முடி கொட்டாமல் இருக்க முந்தின நாள் இரவே வெந்தயம் தயிரில் ஊறவைச்சுடுங்க. மறுநாள் அதை அரைச்சு தலையில் ஒரு அரைமணிநேரம் பேக் போட்டு குளிங்க. சாம்பு வேண்டாம் வெந்தயப்பேக்கே போதும். முடியும் நல்லா சயினிங்கா இருக்கும். முடியும் கொட்டாது வளரவும் செய்யும். இப்போ நான் இதைதான் செய்துட்டு இருக்கேன்.

ஆலிவ் ஆயில் போடலாம். மற்ற ஆயில் சில பேருக்கு ஒத்துக்குது, சில பேருக்கு ஒத்துக்கிறது இல்லை.

அடர்த்தி கம்மியா இருக்கிற மாதிரி இருந்தா.... வெந்தயம் இரண்டு ஸ்பூன், முட்டையின் வெள்ளைக்கரு ஒன்று, ஒரு வாழைப்பழம் , ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலும் போடலாம் ... இவையனைத்தையும் போட்டு மிக்ஸியில் அடித்து அரை மணி நேரம் பேக் போட்டு தலைக்கழுவனால் போதும். கடைசி இரண்டு மக்கில் எலுமிச்சை சாறைப் பிழிந்து ஊற்றிக் கழுவனும். நார்மலா முட்டை வெள்ளைக்கரு ஸ்மெல் இருக்காது...ஆனாலும் ஸ்மெல் இருக்குமோங்கிற டவுட்டுக்கு இந்த எலுமிச்சை தண்ணி. இந்த பேக் தலைமுடிக்கு நல்ல கண்டிசனர்,தலைமுடிக்கு தேவையான புரோட்டீன் எல்லாம் கிடைக்கும். நல்லா அடர்த்தியா முடி ஒன்னுமேல ஒன்னு ஒட்டாம அழகா இருக்கும்.

இந்த பேக் எல்லாம் போடறதுக்கு முன்னாடி நல்லா எண்ணெய் போட்டு கொஞ்ச நேரம் ஊற வைச்சிக்குங்க. நைட்டே போட்டு அடுத்த நாள் குளிச்சாலும் ஓகேதான். ஆனா கண்டிப்பா எண்ணை போட்டிருக்கனும்.

இதெல்லாம் நான் இப்போ பண்ணிட்டு இருக்கிறதுதான். நீங்களும் பண்ணிப்பாத்து என்ன ஆச்சுன்னு சொல்லுங்க;)

இன்னொன்னும் சொல்ல மறந்துட்டேன்... எவ்வளவு காஸ்ட்லியான ஷாம்புவா இருந்தாலும் எல்லாத்தையும் ஓரம் கட்டிடுங்க.....இயற்கையான முறையில் அரப்பு, சீயக்காய், பாசிப்பயிருனு எது உங்களுக்கு கம்ஃபர்ட்டோ அதையே உபயோகப்படுத்துங்க.

Don't Worry Be Happy.

@ அஷ்வினி - அம்மாம் உங்களுக்கும் நல்ல பதில் வரும் ...........உங்கள் பதிலுக்கு நன்றி அஷ்வினி

@ ஜெயா

ரொம்ப நன்றி உங்களுடைய டிப்ஸ்க்கு மிக்க நன்றி .....நான் உபயோகம் படுத்திட்டு எப்படி இருக்குனு உங்களுக்கு சொல்லுறேன் ஜெயா.........இன்று முதல் நான் ட்ரை பண்ணுறேன் ஜெயா

- சபி

"காயத்தின் வலியை உணர்ந்தவர்கள்

மற்றவர்களை காயபடுத்த மாட்டார்கள் "

ரொம்ப நன்றி!

நான் இந்த வெந்தயம் பேக் மற்றும் ஆலிவ் ஆயில் முயற்சி செய்திட்டு சொல்கிறேன்.
ஆனால் ஒரு வாரத்திற்கு எத்தனை தடவை இந்த பேக் போடலாம் என்று கூறவும்.

இதுவும் கடந்துப் போகும்.

உங்க டிப்ஸ் நல்லா இருக்கு..:) அதில அந்த வெந்தயம் தயிர் பேக்குக்கு வெந்தயம் எந்த அளவுல எடுத்துக்கணும்.. அதிகமா வெந்தயம் போட்டா முடி வெடிக்கும்னு (spilit hairs) எங்கேயோ படித்த ஞாபகம்..

nellikka, karuveppilai, maruthani moonraiyum mixiyil pottu nandraaga arathu nalla ennai kothikka vaithu athil pottu konjam nandraaga kothithathum irakki daily podavum mudi kottathu nanraga valarum, ella keerayum araithu paste seythu thalaiyil pottu one hour weekly two times panna mudi nandraga valar kirathu na try pannen parala ippo

வாரத்துக்கு இரண்டு தடவைப் போடுங்கபா.. போட்டு பாத்துட்டு ரிசல்ட் எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க;-)

கண்டீசனர் பேக் போடறதா இருந்தா மாதம் இரண்டு தடவை போடுங்க போதும்.

Don't Worry Be Happy.

எங்கே போயிருந்தீங்க... ரொம்ப நாள் ஆளைய காணோம்?? நல்லாயிருக்கீங்களா.? திரும்பவும் உங்கள பாத்ததில ரொம்ப சந்தோஷமா இருக்குபா;-)சும்மா கொஞ்சம் கொஞ்சம் எட்டிப் பாருங்க;-)

எனக்கு இடுப்பு வரை மட்டுமே முடி வச்சுக்குவேன்...அதுக்கான அளவு ஒரு ஒண்ணரை ஸ்பூன் போதும். நல்லா ஊறி இருக்கிறதுனால அரைக்கும்போது பொங்கி வரும். ஊற வச்ச தயிர் பத்தாத போது இன்னும் கொஞ்சம் தயிர் அரைக்கும்போது சேர்த்துக்கலாம்.

வெறும் தலையில போடாதிங்கபா...நல்லா எண்ணெய் போட்டு போடுங்க... நல்லாயிருக்கும்..ஒரு தடவை ட்ரை பண்ணிப்பாருங்க பிடிச்சதுன்னா கண்டினியூ பண்ணுங்க.. போட்டதுக்கு அப்புறம் என்னாச்சுனு இங்க மறக்காம ஒரு பதிவு போடுங்க;)

Don't Worry Be Happy.

நான் இங்கு நலமே.. நீங்க,குழந்தைகள் அங்கே நலமா.. :)

இங்கயேதான் பா இருக்கேன்.. ;) ஊருக்குப் போனது விருந்தினர் வருகை மற்றும் சில காரணங்களால் ஏதும் பதிவிட முடியலை.. ;( அப்பப்போ பார்வை யிட்டுக் கொண்டு மட்டும் இருந்தேன்.. இனி பதிவுகளும் இருக்கும்.. :)

இடுப்புவரை முடிக்கு ஒண்ணரை ஸ்பூனா.. அப்போ எனக்கெல்லாம் முக்கால் ஸ்பூனுக்கும் கம்மியா போதும்.. ;) ட்ரை செய்து பார்த்து விட்டு கண்டிப்பாக பதிவிடுகிறேன் ஜெய்.. :)

இங்க எல்லாரும் ரொம்ப சௌக்கியம்;-)

அச்சச்சோ.....இடுப்பு வரை முடின்னா வால்யூம் ரொம்ப ரொம்ப கம்மிங்க;( முடி கொட்டோ கொட்டுனு கொட்டி இப்பதான் ஒளிவட்டம் மாதிரி புது முடி முளைச்சு தலைய சுத்தி நின்னுட்டு இருக்கு;) கஷ்டப்பட்டு ஹெட்பேண்டு, ஃப்ரண்ட்டுல மட்டும் ஃப்ரஞ்ச்பிளாட்டுனு மாத்தி மாத்தி போட்டு எழும்பாம அடக்கி வச்சிட்டு இருக்கேன்;) உங்க முடி நல்லா வால்யூமா இருக்கும்னு நினைக்கிறேன் ஒரு ஸ்பூன் போடுங்க. பேக் பத்தலைனா அடுத்த தடவை கொஞ்சம் சேர்த்துக்குங்க;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்