ஹனிமூன் ட்ரிப் ஐடியா தாங்க :-)

தலைப்ப பாத்த உடனே யாருன்னு பாக்க வந்தீங்களா? நான் தான் நானே தான் :-)

என்னுடைய நெருங்கிய நண்பனின் திருமணம் வரும் நவம்பர் ல நடக்க போகுது. அவனுக்கு என்ன கிபிட் பண்ணலாம்ன்னு யோசுச்சு மண்டைய ஒடச்சுட்டு இருந்தேன், கடைசியா நாங்க பிரண்ட்ஸ் நாலு பேர் சேந்து, அவனுக்கு ஹனிமூன் ட்ரிப் புக் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம்.அவனுக்கு மறக்க முடியாத ட்ரிப் ஹா இருக்கனும்ன்னு நினைக்கறோம்.

இந்தியாக்குள்ள / பாரின் ட்ரிப் தரலாம்ன்னு இருக்கோம், எங்களோட பட்ஜெட் 50000 தான், இதுக்குள்ள நல்ல பாரின் கன்ட்ரி போக முடியுமா? வித்தியாசமான அழகான கன்ட்ரி, தீவு இப்படி எது வேணாலும் இருக்கலாம். நம்ம அறுசுவை ல நிறையா பேரு பாரின் ல இருக்கீங்க, இங்க இருக்கவங்க அங்க போய் இருப்பீங்க, இந்தியாவில் இருக்கும் அழகான இடங்களும் சொல்லலாம். அதுனால தான் இந்த இழை தொடங்கி இருக்கேன். நல்ல ஐடியா தாங்க பாக்கலாம்......

சீப் அண்டு பெஸ்ட் ப்லேஸ்... மாலத்தீவு தான்!!! ;) எதாவது ஒரு ரிசார்ட் புக் பண்ணி 4 நாள் தங்கிட்டு வரலாம். நம்ம ஊர் பெரிய ஆட்கள் பலர் ஹனீமூன்க்கு அங்க வராங்கப்பா. பட்ஜட்டுக்கு ஏத்த மாதிரி தீவும், ரிசார்ட்டும் செலெக்ட் பண்ணிக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் கூட யாரோ புதுசா கல்யாணம் ஆனவங்க தான் என்று நினைத்தேன்...உள்ளே வந்து பார்த்த சுகி....இருந்தாலும் சந்தேகத்துடன் படித்தா இது உங்க நண்பருக்கு என்றதும் புஸ் ஆகிவிட்டேன் ....

இப்படி ஒரு அன்பான (பறந்த மனசுள்ள) நண்பி என் கணவருக்கு இல்லாமல் போயிட்டங்களே :(

உங்க பட்ஜெட் தான் இடுக்குது....நீங்கள் வெறும் டிக்கெட் செலவு மட்டும் தானா இல்லை ஹோட்டல் சாப்பாடு சுற்றி பார்க்கும் செலவு எல்லாம் உங்களுடையதா? நீங்கள் பட்ஜெட் ஸ்ப்ளிட் பண்ணி சொன்னப்புறம் நான் இடங்கள் சொல்கிறேன்.

இப்போ நான் சொல்ல போறது என் தனிப்பட்ட கருத்து .....என்னை பொறுத்தவரையில் இந்தியாவில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கு. சுற்றுலா தளங்கள் இல்லாமல் நிறைய இருக்கு. உங்களின் நண்பரின் டேஸ்ட் என்ன என்பதை பொருத்து இடத்தை செலக்ட் பண்ணுங்க.இது என்னுடைய தனி பட்ட கருத்து. சில வருடங்களுக்கு முன்பு கார் எடுத்து டெல்லியிலிருந்து மணாலி சென்று வர ஒன்றரை இலட்சம் மூன்று நாட்களுக்கு செலவானது :(

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நானும் இதை தான் நினைத்தேன், மாலத்தீவு பத்தி உங்க கிட்ட கேட்டுட்டு தான் முடிவு பண்ணனும்ன்னு நினைச்சேன், லிஸ்ட் ல இந்த தீவுக்கு இடம் தந்தாச்சு. போயிட்டு, வரதுக்கு எவளோ வரும்? ட்ராவல்ஸ் ல பேக்கேஜ் மாதிரி சொல்லிகலாம? இல்ல நெட் ல பாத்து நாமே புக் பண்ணலாமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி,
லாவண்யா சொல்வது உண்மைதான்.........இந்தியாவில் பார்க்க நிறைய இடங்கள் உண்டு......அட நீங்களவது காரில் போய் பார்த்தீங்க,நாங்க ட்ரெயின்,பிளைட்டுனு கோவைலயிருந்து மணாலி போய்வரவே ஒருலட்சத்தை தாண்டியது......பட்ஜட் இடிக்குது.உங்க பிரண்ஸ்கிட்ட சொல்லி நம்நாட்டு ட்ரிப்னா சொல்லுங்க நிறைய இடம் தருகின்றேன்............

//நான் கூட யாரோ புதுசா கல்யாணம் ஆனவங்க தான் என்று நினைத்தேன்...உள்ளே வந்து பார்த்த சுகி....இருந்தாலும் சந்தேகத்துடன் படித்தா இது உங்க நண்பருக்கு என்றதும் புஸ் ஆகிவிட்டேன் ..../// இந்த இழை தொடங்கும் போதே நினைச்சேன், எல்லாரும் ஒரு எதிர்பார்ப்போட வருவீங்கன்னு (ஹி ஹி ஹி).

//இப்படி ஒரு அன்பான (பறந்த மனசுள்ள) நண்பி என் கணவருக்கு இல்லாமல் போயிட்டங்களே :(//// - சிரிப்பா கண்ட்ரோல் பண்ணவே முடியல, அவளோ பரந்த மனசா எனக்கு... நான்கு பேர் சேந்து தான் பண்றோம்

//நீங்கள் வெறும் டிக்கெட் செலவு மட்டும் தானா இல்லை ஹோட்டல் சாப்பாடு சுற்றி பார்க்கும் செலவு எல்லாம் உங்களுடையதா?/// இதை தான் நாங்களும் யோசுச்சுட்டே இருக்கோம், கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு. இதுக்கு முன்னாடி இப்படி யாருக்கும் பண்ணினது இல்ல, அதான் யோசனை. உங்க ஐடியா சொல்லுங்க? டிக்கெட் செலவு மட்டும் தரலாமா? இல்ல எல்லா செலவும் நாங்க பண்ணட்டுமா?(அதுக்கு ரொம்ப செலவாகுமோ? :-(

//சில வருடங்களுக்கு முன்பு கார் எடுத்து டெல்லியிலிருந்து மணாலி சென்று வர ஒன்றரை இலட்சம் மூன்று நாட்களுக்கு செலவானது :(/// - இது என்ன புது கதை? இதுக்கே இவளோ செலவயிடுச்சா??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

தலைப்புல இந்தியா ல இருக்க ஊரும் சொல்லுங்கன்னு மாத்திட்டேன், நீங்க இனி நம்ம நாடும் சொல்லலாம் ரேணு

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குலு , மணாலி அருமையான இடம்

அந்த குளிர்ச்சியும் பள்ளதாக்கும் பனிக்கட்டிகளும் பிரயாணத்தின்போது நம் கூடவே வரும் பியாஸ் நதியும் தான் specials
அதுவும் அவர்கள் திருமணம் நவம்பரில் என்று கூறியுள்ளீர்கள்.டிசம்பர் 25லிருந்து அங்கு திருவிழாபோல இருக்கும்.
கிரிஸ்மஸ் ஸ்பெஷல் ஸ்கேட்டிங் இருக்கும்.மேலும் நாங்கள் சென்றதும் டிசம்பரில்தான் என்பது உங்களுக்கே தெரியும்,நான் பார்த்து நனைந்த ஐஸ்கட்டி மழையும்,பனித்தீரலும், சில்லென்ற ஆற்று நீரும் ரொம்ப அருமை.இந்த வாய்ப்பை உங்கள் நண்பருக்கும் தரலாமே.....
அதற்கு உண்டான செலவுகள் எவ்வளவு ஆனதென்று நான் என்னவரிடம் விசாரித்து சொல்கிறேன்.....(ட்ரெயினில் சென்றால்)
கோவையிலிருந்து பனிக்கர் ட்ரேவல்ஸில் புக்பண்ணலாம்.டெல்லியிலிருந்து kumar ட்ரேவல்ஸில் நேரா சண்டிகர் சென்று மணாலி செல்லலாம்....அங்கே ரூம் போய்போடுவதே நல்லது.நிறைய ரெஸிடன்ஸ் இருக்கு.ரொத்தாங் போனால் இன்னும் அருமையா இருக்கும்,நல்லா என்ஜாய் பண்ணலாம்,
"வாழ்வில் உங்களை மறக்கவே மாட்டார்கள்".அப்படி குளுமையான அனுபவம் கொடுத்த பெறுமை உங்களைச்சேரும் மணாலிக்கு அனுப்ப முடிவெடுத்தால்........
மணாலி பற்றி,செலவுகள் பற்றி இன்னும் தகவல்களுடன் வருகின்றேன்.........

என் நண்பன் சொந்த ஊரு கும்பகோணம், கல்யாணம் கூட அங்க தான். நீங்க சொல்றதுலையே மணாலி எப்படி இருக்கும்ன்னு தெரியுது!!!!
கண்டிப்பா நீங்க உங்க கணவரிடம் செலவு பத்தி கேட்டு சொல்லுங்க. மணாலி தவிர வேறு இடம் பத்தி ஐடியா இருந்தாலும் சொல்லுங்க ரேணு

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கண்டிப்பா சுகி,
கண்டிப்பா என்னவரிடம் கேட்டு செலவுகள் விவரத்தையும் சொல்கிறேன்,மேலும் எந்த வழியில் சென்றால் சுலபம்னும் கேட்டு சொல்கிறேன்.......
நீங்கள் மணாலி என்றால் டிக்கட் மற்றும் ஹோட்டல் பில் செலவு செய்யலாம்.....அங்கு சாப்பிடும் மற்றும் பர்ச்சஸ் செலவுகள்,டாக்ஸி இப்படிப் பட்டதை அவர்களிடம் விட்டுவிடலாம்.....ஏன்னா உங்களுக்கும் அதுதான் ஈஸி,அவர்களுக்கும் பெரிதா செலவாகாது.....

மெயில் பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்