பிரசவத்திற்கு பின்னர் செய்யும் உடற்பயிற்சி(பாப்ஸ் உமாவின் ஆலோசனைகள்)

டியர் உமா எப்படி இருக்கீங்க?
ரொம்ப நாள் கழித்து இப்ப தான் அறுசுவைக்கு வந்து இருக்கீங்க.
உமா எனக்கு இப்பொழுது 9வது மாதம் கர்ப்பம்.இது எனக்கு 2வது குழந்தை.முதல் குழந்தை பிறந்த பிறகு, கன்னங்கள்,கைகள் குண்டாகிவிட்டது, அதோடு ,தொப்பை வேறு விழுந்துவிட்டது,இது எனக்கு 2வது குழந்தை,கன்னங்கள் கைகள் குண்டாகாமல் என்ன செய்வது?மேலும் சிசேரியனாக இருந்தால் தொப்பையை குறைக்க எத்தனை நாட்கள் கழித்து என்ன என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும் தயவு கூர்ந்து உடனடியாக பதில் கூறுங்கள்
ஏற்கனவே இந்த மாதிரி பதில் குடுத்து இருந்தாலும் எனக்காக 1 முறை வந்து பதில் கூறவும்.உங்கள் பதிலுக்காக ஆவலுடன் உள்ளேன்

மஞ்சு முதல்ல கொஞ்சம் கூலா இருங்க... இந்த இழை எப்படியோ என் கண்ணில பட்டுச்சி... இல்லைன்னா இப்படி ஒன்னு நீங்க போட்டிருப்பதே எனக்கு தெரியாம போயிருக்கும்.
இப்போவே உடல் அழகை பற்றி கவலை பட வேண்டாம். இது பற்றி கொஞ்சம் மட்டும் பழைய இழைகளில் பேசியதா ஞாபகம்.
அதாவது கர்பமாக இருப்போருக்கு தனியாக, குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுப்போருக்கு தனியாக என்று பயிற்சிகள் உள்ளன. கர்ப்ப காலத்தில் செய்வதினால் நமக்கும் பிறக்கும் குழந்தைக்கும் நன்மைகள், அப்புறம் லேபர் எப்படி ஃபேஸ் பண்ணுவது அதை எப்படி ஈசியாக எடுத்துக்கொள்வது என்பதெல்லாம் அடங்கும்.
பிறகு குழந்தை பிறந்த உடன், தாய்ப்பால் கொடுப்பதால் என்ன மாதிரி பயிற்சிகள் செய்யணும்ன்னு இருக்கு. பொதுவா இந்த இரண்டு காலக்கட்டதிலயுமே நம் உடலில் சாதாரண நாட்களை விட அதிக கலோரிகள் தேவைப்படும் அவை சேமிக்கப்படும். அவை கண்டிப்பாக உடலில் தேவைக்குத்தான்.
அதனால இப்போ கவலைப்படாம இருங்க... என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்க.

இந்த "' குழந்தை பிறந்த பிறகு வயிறு குறைய வேயில்லை"' பிரச்சனை பலரிடம் இருக்கு. அதற்கு தேவையான உணவு கட்டுப்பாடும் முக்கிய தசைகளை இயக்கும் பயிற்சியும் இல்லாதது தான் காரணம்.
மேலும் பலருக்கும் முதல் குழந்தை பிறக்கும் பொழுது இருக்கும் அனுபவம் கொஞ்சம் தான் மற்றவர் சொல் கேட்டு கொஞ்சம் தெரியும் அடுத்ததா கண்டிப்பாக இரண்டாவது குழந்தையின் பொழுது இன்னும் கொஞ்சம் விஷயம் மேலும் தெரிஞ்சிப்போம்... சிலர் இதிலும் விதிவிலக்கு நிறைய விஷயங்கள் தெரியாமலே இருப்பாங்க. அந்த விஷயமெல்லாம் .... குழந்தைக்காக நமது உடல், மனநிலை, உற்றார் உறவுகள், சூழலை தயார் படுத்துவது தான்.
இப்போ உங்களுக்கு இது இரண்டாவது குழந்தை என்பதால் லேபர் டைம் எக்சர்சைஸ் கொஞ்சம் தெரியும் என்று நினைக்கிறேன். சுகப்பிரசவம் ஆகவே பெரும்பாலும் முயற்சி செய்யுங்க. அப்படி தெரியலைன்னா சொல்லுங்க நான் முடியும் பொழுது இங்கே கொடுக்கிறேன்.
உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன்... எனக்கும் இப்போ ஒன்பது மாதம் இரண்டாவது குழந்தைக்கு. அதனால இந்த இழைய கண்டிப்பாக தொடர்ந்தால் நாம் ஸ்டெப் பை ஸ்டெப் போகலாம்...
வேற ஏதாவது சந்தேகம்ன்னா கேளுங்க... நானும் முடியும் பொழுது பதில் கொடுக்கிறேன்.

soori

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஹாய் உமா

நான் இப்போது 8 மாத கர்பம் முதல் குழந்தை எனக்கு கூட இந்த வயிறு பற்றிய dout இருக்கு
அதுமட்டும் அல்லாமல் நான் இப்போது 14 கிலோ எடை கூடியுள்ளேன் பிரசவத்துக்குபிறது இதை எப்படி குறைப்பது

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

டியர் உமா,
வாழ்த்துக்கள் உங்களுக்கு 2வது குழந்தை நல்ல படியாக பிறக்க.உமா நான் இருப்பது பஹ்ரைனில்,இங்கு பிரசவத்திற்கு முன்னால் உடற்பயிற்சி எதுவும் தரமாட்டார்கள்,பிரசவத்திற்கு பின்னால் சொல்லி தருவார்களா என்று தெரியவில்லை.டாக்டர் எனக்கு நார்மல் டெலிவரிக்கு சந்தர்ப்பம் மிகவும் குறைவு என்று கூறி விட்டார்.அதனால் சிசேரியன் என்று தான் நினைக்கிறேன்.எனக்கு கன்னங்கள்,கைகள் குண்டாகாமல் இருக்கணும் அதற்கு பயிற்சி கூறுங்கள்.அதை இப்பொழுது இருந்தே தொடங்கலாமா?
உமா உங்கள் அழகு குறிப்புகளால் அதிக பயன் அடைந்தவள் நான் தான்,அதனால் மருத்துவரை விட உங்கள் பதிலைதான் அதிகம் விரும்புகிறேன்,எதிர்பார்க்கிறேன்.நான் கண்டிப்பாக குழந்தைக்கு தாய்ப்பால் குடுக்க விரும்புகிறேன்,அதனால் எனக்காக கொஞ்சம் சிரமம் பாராமல்,இப்பொழுது செய்யும் உடற்பயிற்சியையும்(நான் இப்பொழுது 8மாதம்)டெலிவரிக்கு பிறகு செய்ய வேண்டிய உடற்பயிற்சியையும் கூறுங்கள் உமா,எனக்கு இப்பொழுது விட்டால் பின்னால் தொப்பையை குறைப்பதும்,உடல் எடையை குறைப்பதும் மிகவும் கடினம்.உங்கள் பதிலுக்காக ஆவலாக உள்ளேன்,உதவுங்கள் உமா.குறிப்பு நான் இதுவரை நடைபயிற்சி தவிர சிறப்பாக எந்த உடற்பயிற்சியும் செய்தது இல்லை.டெலிவரிக்கு பிறகு ஸ்லிம்மாக வேண்டும் அதுதான் என் ஆசை.நான் எடை குறைப்பதை பற்றி கவலைபடவில்லை உங்கள் மீது உள்ள நம்பிக்கையால்.

தயவு செய்து யாரும் இங்கே "அழகுக்கான" கேள்விகள் கேட்காதீங்க.... இந்த இழையை முழுக்க முழுக்க கர்ப்பிணி பெண்களுக்காகவும் அவர்களுக்கான இழையாக இருக்கும் படி கொண்டு போகலான்னு நினைக்கிறேன்.

# பல்கிஸ் நீங்க வேற "அழகு குறிப்பு" பகுதிக்கு வாங்க.

@@@ மஞ்சு முதல்ல இந்த இழையின் தலைப்பை ***** " கர்ப்ப காலத்திலும் அதற்கு பிறகும் கடைபிடிக்க வேண்டிய உடற்பயிற்சிகளும் உணவு கட்டுப்பாடும் " ***** என்றோ இல்லை அதற்கு ஏற்ற மாதிரி ஏதாவது சின்ன தலைப்பா மாத்துங்க.கர்ப்பிணி பெண்களுக்கான பகுதியில (or Exercise) கூட போடலாம், அழகு குறிப்பில தேவை இல்லைன்னு நினைக்கிறேன்.@@@

# மீரா, நீங்களும் இப்போவே அதை பற்றி கவலை படாம இருங்க. உடல் எடையை பற்றி நீங்க மனசில நினைக்க அது வேற மாதிரி அமைந்து விடும். கர்ப்ப காலத்திலேயே அதை பற்றி கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கலாம் அதற்காக ரொம்ப... எப்படி எடை குறைப்பது? திரும்ப அழகாவதுன்னு நினைத்து அதையே வருந்துனா அது குழந்தையை பாதிக்கலாம். மனசை ரிலாக்ஸா வச்சிக்கோங்க. இப்போ எடை கூடுவது நார்மல் தான் அது உங்க உடலில் சேமிக்கப்படும் சத்துக்கள், குழந்தையின் எடை, தண்ணீர் எடை, பிளசண்டா ... இப்படி எல்லாமும் அடங்கும், அவை எல்லாம் குழந்தை பிறந்த உடனே கொஞ்சம் குறைந்து விடும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சிறிது காலத்தில குறைந்து நீங்க பேக் டு நார்மல் வருவீங்க.

# மஞ்சு, உங்களின் ((( உமா உங்கள் அழகு குறிப்புகளால் அதிக பயன் அடைந்தவள் நான் தான்,அதனால் மருத்துவரை விட உங்கள் பதிலைதான் அதிகம் விரும்புகிறேன்,எதிர்பார்க்கிறேன்.))) இந்த வரிகள் பார்த்து மிகவும் சந்தோசம். எத்தனை பேருக்கு எனது இழைகளும் பதிவுகளும் உதவுச்சோ! ஆனால் உங்கள மாதிரி ஒருத்தர் ரெண்டு பேருக்கு உதவினாலே போதும்... அதை சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

அப்புறம், உங்களுக்கு உடலில் ஏதாவது பிராப்ளம் இருந்தா டாக்டருக்கு தெரியும் அதனால தானோ என்னவோ சிசேரியன்னு சொல்லியிருக்காங்க. நீங்க அதற்காக வருத்தப்பட வேண்டாம். பொதுவா டாக்டர்ஸ் யாரும் உடற்பயிற்சி செய்யுங்கன்னு கர்பகாலத்தில சொல்றது குறைவுதான். இதுல உடலில் சில சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அது பற்றி அவங்க பேசமாட்டாங்க. அதாவது, பிளட் பிரஷர், வேற உடலில் ஏற்படும் பிரச்சனைகள்(நோய்கள்) , வயது, காலம்... இப்படி, இது செய்தால் இவங்களுக்கு ஏற்குமா என்பது அவங்களுக்கு தெரியுமில்லையா!!! அதனால டாக்டர் ஆலோசனை இல்லாமலும் பயிற்சிகள் செய்யக்கூடாது.
நான் எப்பவும் சொல்ற மாதிரி, ///*** வாக்கிங் ***/// மாதிரி எந்த காலத்திலயும், எல்லா வயதினருக்கும், எப்பவும் எந்த ஒரு பாதகமும் இல்லாத உடற்பயிற்சி ஒண்ணுமே இல்லை. அதை நீங்க செய்தீங்கன்னாலே போதும்.

% கார்ப காலத்தில செய்ற ஒரு சில தசைகளுக்கான முக்கிய பயிற்சிகளால் பெண்களுக்கு ஏற்படும் இடுப்புவலி, லேபர் பெயின் அதிகம் இல்லாமை, எந்த மற்ற பிரச்சனைகளும் எளிதில் கையாளக்கூடிய நிலை ஏற்படும். இது எல்லாத்துக்கும் வாக்கிங் போதும், அதுவுமே நடக்கும் பொழுது சிலருக்கு கால்கள், வயிறு வலிக்கலாம், பிளட் பிரஷர் ஏறலாம், வேற எந்த நெகடிவ் அறிகுறிகள் இருந்தாலும் செய்தல் கூடாது, இதற்கெல்லாம் தான் டாக்டர் சொற்படி நடப்பது நல்லது.

(((டெலிவரிக்கு பிறகு ஸ்லிம்மாக வேண்டும் அதுதான் என் ஆசை.நான் எடை குறைப்பதை பற்றிகவலைபடவில்லை உங்கள் மீது உள்ள நம்பிக்கையால்.))) இதை பற்றிய சிந்தனை நம் மக்களிடம் அதிகமா பரவியிருக்குன்னு நினைகிறேன். பொதுவா ஒரு காலத்தில இதை பற்றி நினைக்க கூட நேரமில்லாமல் பிரசவத்திற்கு பிறகு எல்லோரும்....... ஒரே மாதிரி குண்டாகிடுவாங்க அதை அப்புறம் குறைக்கவே முடியாம கஷ்டபடுவாங்க இல்ல???
நல்லது, நான் முக்கியமான ஒரு விஷயம் மட்டும் இங்கே இப்போ சொல்றேன்... பிறகு பதிவுகள் தொடர தொடர அது பற்றி பேசலாம்.

% தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, பிரியட்ஸ் நாட்கள் போன்றே வலிகள் அடிவயிற்றில் ஏற்படலாம்... அதற்கு பயம் தேவை இல்லை காரணம் தாய்பால் கொடுக்க கொடுக்க தான் குழந்தைக்கும் நல்லது தாயின் அடி வயிறு குறையும் (கர்ப்பப்பை பழைய நிலைக்கு திரும்புதல்) ... தாய்க்கும் நல்லது. % அப்படி வயிறு பகுதி குறைந்தாலே பலருக்கு சந்தோசம் தானே!!!

% அடுத்ததா, தாய்ப்பால் கொடுக்கும் காரணத்தால் தாய் மிகவும் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். அது மட்டுமில்லாமல் சாதாரண நாட்களை (கர்பமோ, குழந்தை பேறோ இல்லாத நாட்கள்) விட அவரவர் உடலை பொறுத்து 500 முதல் 1000 கலோரிகள் வரை அதிகம் உட்கொள்ளவேண்டும். இது இல்லாமல் நாம சாப்பிட்டு விட்டு ஒரு பக்கம் உடற்பயிற்சி செய்து கலோரிகளை கறைத்தால் அது நமக்கு சோர்வு மட்டுமின்றி குழந்தைக்கான தாய்ப்பால் பெருக்கையும் குறைக்க வாய்ப்புகள் உண்டு. %

அதனால தான் இப்போவே உடலை குறைப்பது பற்றி நினைக்காமல் சந்தோஷமாக இருங்கள், மனநிலை சந்தோஷமா இருந்தாலே எதை பற்றியும் கவலை படவேண்டாம். இல்ல அதுவே பெரிய ஸ்ட்ரெஸ் ஆகிடும். இவை பற்றிய விளக்கம் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

மிக்க நன்றி உமா இந்த காலகட்டதிலும் உடனுக்குடன் பதில் தருகிறீர்களே
நான் ரொம்ப கவலை படவில்லை ஆனால் நான் ஏறகன்வே ரொம்ப வெய்ட் அதுமட்டும் அல்லாமல் 8 மாததில் 14 கிலோ கூடியுள்ளேன் அதுதான் பயம்மா இருக்கு 75 கிலோவிலிருந்து இப்போது 89 டாக்டர்சும் எண்ணெய் சேர்த்தாதீங்க சக்கரை சாப்பிடாதீங்கனு ஒரே அட்வைஸ். இதில் கொடுமை என்னனா நானும் என் ஹஸ்சும்தான் வீட்டில் எல்லா வேலையும் நான் தான் செய்கிறேன் நானே தான் சமைத்து சாப்பிடுகிறேன் no oil, no sweets, no hotels. அதுதான் கவலை

மேலும் நேத்து scan பண்னியபோது குழந்தை எடை 1.6g இருக்கு 31 வாரத்துக்கு இது normala இல்லை நான் மட்டும் எடை கூடுகிறேனா இல்லை இனிதான் குழந்தை weight போடுமா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

டியர் உமா ரொம்ப நன்றி,
உங்க பதில்களுக்கு,ஆனால் உமா,எனக்கு சுகர்,பிரஷர் என்ற எந்த பிரச்சனையும் இல்லை எல்லாம் நார்மல் தான் முதல் குழந்தை சிசேரியன் என்பதால் 2வது குழந்தை சிசேரியன் பண்ண வேண்டிய கட்டாயம்.உமா நானும் உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் பார்வையிட்டு விட்டேன்,நீங்கள் டயட் முறையைதான் திரும்ப திரும்ப சொல்லி இருக்குறீர்களே தவிர தொப்பையை குறைக்க உடற்பயிற்சி என்று எதையும் சொல்லவில்லை.நீங்கள் எனக்கு தயவு செய்து தொப்பையை குறைக்க உடற்பயிற்சியை சொல்லுங்கள்,பிரச்சனை என்ன என் உடம்புக்கு வந்தாலும் நான் சமாளித்து கொள்வேன்,இல்லை லவண தைலம் தேய்க்கலாமா?என்று சொல்லுங்கள்,லவண தைலம் பலன் தருமா?
எனக்கு கன்னங்கள் குண்டாகாமல் இருக்க என்ன பயிற்சி செய்ய வேண்டும் என்று இன்னும் நீங்கள் கூறவே இல்லை,உமா தயவு செய்து உடற்பயிற்சியை கூறுங்கள்.டயட் இருப்பதை பற்றி நீங்கள் அதிகமாகவே கூறிவிட்டீர்கள்.

நீங்கள் உங்கள் உடற்பயிற்சி பகுதியிலேயே கூறி இருக்குறீர்கள் டயட்டில் இருந்தாலும் தொப்பைக்கு என்று தனியாக உடற்பயிற்சி செய்தால்தான் குறையும் என்று.என் கணவருக்குகூட ஸ்லிம்மாக இருப்பார் உடற்பயிற்சி செய்வார் ஆனால் அவருக்கு தொப்பை மட்டும் குறையவே இல்லை,அதனால் தான் தனியாக பயிற்சி பற்றி கேட்கிறேன்

பின்குறிப்பு:
வயிற்றை சுற்றி துணி இருக்கமாக பிரசவத்திற்கு பிறகு கட்டிகொண்டால் தொப்பை குறையுமா?சிசேரியன் செய்பவர்கள் எத்தனை நாட்களுக்கு பிறகு துணி கட்ட வேண்டும் இதற்கும் பதில் கூறுங்கள் பிளீஸ்

# மீரா, பரவாயில்லை குழந்தைக்கு தற்போது இன்னும் கொஞ்சம், இரண்டு கிலோ அளவு இருக்கலாம் அதனால ஒன்னும் தப்பில்லை. சில பெண்கள் சாப்பிடும் சாப்பாடு அவர் உடல் நிலை எல்லாம் இப்படி தான் அவர்களுக்கு மட்டுமே எடை கூடும் குழந்தைக்கு கூடாது. இது நானும் பார்த்ததுண்டு. நீங்க கொஞ்சம் ஆரம்பகால கர்பத்தில நல்லா கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிட்டு இருக்க வேண்டும் இது குழந்தையின் முழு உடல் வளர்ச்சிக்கும் உங்களின், குழந்தையின் எடைக்கும் உதவி இருக்கும். இது நெருங்கிய காலம் என்பதால் இப்போ உங்க டாக்டர் சொற்படி கேளுங்க.

மஞ்சு பழைய இழைகளில்

# "வாக்கிங்" ஒன்றே போதும் எல்லாத்துக்கும்...
# ஒவ்வொரு உடற்பகுதிக்கும் அந்த தசைகளுக்குக்கான பயிற்சி செய்யணும்...
# அப்படி பயிற்சிசெய்ய மருத்துவர் ஆலோசனை தேவை அல்லது நல்ல பயிற்சியாளர் உதவி தேவை...
# இங்கே யாரையும் பார்க்காமல், அவங்க உடல் கண்டிஷன் தெரியாமல் நான் என்னத்த சொல்றது....
# குனிந்து நிமிர்வது போன்ற பயிற்சி வயிறு தசையை உளிழுத்து நின்று கொண்டோ சம பரப்பில் படுத்தோ செய்யலாம்... மூச்சு பயிற்சி யோகா...
# உணவு கட்டுப்பாடும், வாக்கிங் - இருந்தாலே உடலின் அனைத்து தசை பகுதிகளும் வேலை செய்யும்.... கன்னங்கள் ஒட்டி, முகம் சுருங்கி, கை, கால்களில் தடிமன் குறைந்து வயிறு காணாமல் போகும்...
# எந்த பயிற்சியும் பத்து நாள் செய்துவிட்டு பலன், ரிசல்ட் எதிர்பார்ப்பது தவறு.... கண்டிப்பாக ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை செய்த பின் தான் ரிசல்ட் கிடைக்கும்... எதையும் மாற்றாமல் கண்டிப்புடன் இருக்கணும்...

இப்படி பல விஷயங்கள் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிற ஞாபகம் எனக்கும் இருக்கு... ஒவ்வொரு வரியையும் தெளிவா படிச்சா கண்டிப்பாக புரியும்.

உங்க கேள்விகளுக்கான பதில்கள்...

*** கன்னங்களை உள்ளிழுத்து காற்றை விழுங்குவது போல 30 வினாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு அடுத்து ஒவ்வொரு கன்னமாக காற்றை அடைத்து வைத்திருப்பது போல சில வினாடிகள் வைத்திருந்து பிறகு வெளியிடுதல் வேண்டும். இப்படி தொடந்து இருபது முதல் முப்பது நிமிடம் வரை ஒரு நாளில் காலை மாலை இரு முறை செய்தால் கன்னங்கள் நல்லா டோனாகும். ஸ்ட்ரென்த் ஆகி குண்டாகவோ, தொங்காமலோ இருக்கும்.

*** தரையில நன்றாக கைகள் கால்களை நீட்டி படுத்து காற்றோட்டமுள்ள இடத்தில இருக்குமாறு செய்தல் வேண்டும். கால்களை அசைக்காமல் மேலே தூக்காமல், கைகள் உதவி இல்லாமல் தலை, முதுகு இடுப்பு வரை எழுந்து தலையால் கால் முடியை தொட முயற்சிக்க வேண்டும், சிறிது சிறிதாக சில நாட்களில் தொட்டு விடலாம் இந்த சமயம் வயிறு தசைகள் உள்ளிழுக்கப்பட்டு இருக்க வேண்டும். இதை தொடர்ந்து பத்து முதல் பதினைந்து முறை செய்து விட்டு பின், தலை, முதுகு பகுதியை தரையில் வைத்து அசைக்காமல் கால்களை மேலே தூக்கி தொண்ணூறு டிகிரி அளவில் உடலும் கால்களும் இருக்க வேண்டும். அப்படியே சைக்கிள் மிதிப்பது போன்று செய்தல் வேண்டும். பிறகு கைகளை மடித்து தலைக்கு பின் கிழே வைத்து மீண்டும் மீண்டும் வயிறுதசைகள் இயங்க பயிற்சி செய்ய வேண்டும். கால்களை வைத்து கொண்டு மேல் உடல் பகுதியையும், மேல் உடற்பகுதியை வைத்து கால்களையும் தனி தனியாக செய்தல் வேண்டும்.
இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து தசைகள் ஃப்ர்ம் ஆகும்.

உங்களுக்கு தற்போது தேவையில்லாத இந்த இரண்டு கேள்விக்கும் பதில் கொடுத்து விட்டேனா!!! கொஞ்சம் காலம் பொறுத்தால் நானே நேரம் இருக்கும் பொழுது ஒவ்வொன்றாக படிப்படியாக கொடுக்கிறேன்னு தான் சொன்னேன்.
அதை விட முக்கியமாக நான் இதுவும் மறுபடியும் எழுதும் ஒன்று...

டியர் உமா,
என்ன ஆச்சு உமா உங்க கிட்ட இருந்து 1 பதிலும் இல்லை,நீங்க ரொம்ப பிஸியாக இருக்கீங்களா?உங்க பதிலுக்காக ஆவலாக இருக்கேன்,Take care Uma

டியர் உமா
உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி,நான் ஏன் திரும்ப திரும்ப உங்களை கேட்டேன் என்றால்,இங்கு ஹாஸ்பிட்டலில் எக்ஸர்ஸைஸ் சொல்லி தர மாட்டார்கள், மேலும் உங்களுக்கும் இது பிரசவ நேரம் என்பதால்,இனி குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு அறுசுவைக்கு வந்து பதிவு போட நேரம் இருக்காது அதனால் தான் இப்பொழுதே கேட்டேன் தவறுக்கு மன்னிக்கவும் உமா.கடைசியாக 1 சந்தேகம் கோவித்து கொள்ளாமல் பதில் குடுப்பீர்களா?எனக்கு சிசேரியன் முடிந்து எத்தனை நாட்கள் கழித்து வயிற்றில் பெல்ட் அல்லது துணியை கட்டலாம்?

மேலும் சில பதிவுகள்