6 மாத குழந்தை-ஆலோசனை தேவை

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்!!!!
16/7 என் மகனுக்கு 6 மாதம் முடிவடைகிரது அதன் பிறகு திட உணவு கொடுக்கலாம் என்று இருக்கிரேன்....

1..முதலில் என்ன உணவு கொடுக்க வேண்டும்?
2..எப்படி கொடுக்க வேண்டும்?எந்த நேரத்தில் என்ன கொடுக்க வேண்டும்?
3..ஓட்ஸ் கொடுக்கலாமா?எப்படி கொடுக்க வேண்டும்?
4..குளிர்மயான பழங்கள் காய்கறிகள் எவை?
5..சளி ஜலதோஷம் உள்ள போது எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்?
6..ஒரேஞ்,ஆப்பில் ஜூஸ் கொடுக்கலாமா?வேறென்ன ஜூஸ் கொடுக்கலாம்
7..நான் அவனுக்கு 1வயது வரை தாய் பால் மட்டுமே கொடுக்க விரும்புகிறேன்...அப்படியானால் கூழ் காச்சும் போது பால் இல்லாமல் காய்ச்ச முடியும்மா?
8..பழங்களை பால் இல்லாமல் மசித்து கொடுக்க முடியுமா?
9..மீன்,கோழி,முட்டை எப்போது கொடுக்கலாம்?

கொஞ்சம் விளக்கமாக பதில் தரவும்..

http://www.arusuvai.com/tamil/node/14967

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா..அந்த லிங்க் ரொம்ப உதவியா இருந்தது.......ஆனால் என்னுடைய எல்லா சந்தேகங்கலுக்கும் பதில் கிடைக்கவில்லை...மற்ற சந்தேகங்கலையும் தீர்த்து வையுங்கள்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

சுகமா இருக்கிறீங்களா?கண்டிப்பா 2 வயது வரை தாய்ப்பால் கொடுங்க.முதலில் சோறில் இருந்தே தொடங்குங்க.கொஞ்சம் குழைய சமைத்து அதில் சிறிது தாய் பால் சேர்த்து மிகவும் தண்ணீர் போல் இல்லாமல் கொஞ்சம் தடிப்பமானதா பகலில் மட்டும் கொடுங்க.3 நாள் கழித்து கரட் சேர்த்து அப்படி கொடுங்க.பிள்ளைக்கு ஒத்து கொண்டால் 3 நாள் பார்த்திட்டு உ.கிழங்கு கொடுங்க.இப்படி மெது மெதுவாக ஒன்றொன்றாய் சேர்க்கனும்.ஆரம்பத்தில் தாய்ப் பால் சேர்த்து கொடுத்தால் குழந்தைக்கு சமிபாட்டு பிரச்சினை வராது.எந்த உண்வையும் அறிமுகம் செய்து 2,3 நாள் பிரச்சினை ஏதும் இருக்காண்டு பார்த்து அடுத்த உண்வை தொடங்குங்க.1 நேர சோற்றை 1 கிழமையில் 2 நேரமாய் மாற்றுங்க.கொஞ்ச நாளில் 3 நேரமாய் மாற்றுங்க.ஒரு மாசத்தில் நைசாக அரைக்காமெல் சிறு துணிக்கைகளோடு கொடுங்க.கொஞ்ச நேரத்தில் மிகுதி சொல்கிறேன்.

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

மேலும் சில பதிவுகள்