ஸ்வர்ணாவை வாழ்த்தலாம் வாங்க

அறுசுவையின் அனைத்து தோழிகளுக்கும் வணக்கம்.

நமது அன்புத் தோழி திருமதி.ஸ்வர்ணா விஜயகுமார் அவர்கள்,சில்வர் ஸ்டார் பெற்று கூட்டாஞ்சோறு பகுதியில் இணைந்துள்ளார்.நமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிப்போம் வாருங்கள் தோழிகளே.

வாழ்த்துக்கள் ஸ்வர்.நானே இணைஞ்சுட்ட மாதிரி ரொம்ப சந்தோஷமாயிருக்கு

ஸ்வர்.வாழ்த்துக்கள் தங்கம்.

அசத்தலான,புதுமையான குறிப்புகளை சிறப்பான விளக்கத்துடன்,எழில் படங்களுடன்

தொடர்ந்தளித்து கூட்டாஞ்சோறு பகுதியில் இடம்பெற்ற என் ஸ்வருக்கு மனமார்ந்த

வாழ்த்துக்கள்.அண்ணாகிட்டயும் சொல்லிடுங்க ஸ்வர்,உங்களோட படங்கள்

எப்போதுமே கொள்ளை அழகு.வாழ்த்துக்கள் தங்கப்பெண்ணே.

அன்புடன்
நித்திலா

ஹாய் ஸ்வர் செல்லம் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப............................... சொல்ல முடியாத அளவு சந்தோஷம்மா இருக்கு;)) உங்களுடைய குறிப்புகள் அனைத்தும் நம் தோழிகளிடம் அமோக வரவேற்பை பெற்றுயுள்ளது. சீக்கிரம் கோல்ட் ஸ்டார் வாங்க போறிங்க. வாழ்த்துக்கள் செல்லம்

நித்தி நான் ஓப்பன் பண்ணலாம்னு ஆசையா வந்தேன் ஆனா நீ ஓப்பன் பண்ணிட்ட சந்தோஷம் டா;)))

உன்னை போல பிறரையும் நேசி.

கலக்குறீங்க ஸ்வர்ணா...... ஸ்வர்ணாவுக்கு வாழ்த்து... டைட்டில் பார்த்துட்டு உள்ள வந்தா..... ரொம்ப சந்தோஷமான விஷயம் போட்டு இருக்காங்க......

எங்கள் தங்க மங்கைக்கு வெள்ளி ஸ்டார் கிடைச்சது ரொம்ப சந்தோசம் பா..... விரைவில் தங்க ஸ்டார் பெற வாழ்த்துக்கள்.......

ஆஹா... சூப்பர். புதுசு புதுசா கூட்டாஞ்சோறு பகுதியில் ஆட்கள் சேரும்போது ஒரு தனி மகிழ்ச்சி... இன்னும் வித விதமா குறிப்புகள் கிடைக்குதேன்னு. அப்படி ஒரு அளவில்லா மகிழ்ச்சியை எங்களுக்கு தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் பல. கலக்குங்க.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நித்தி ரொம்ப நன்றிடா....
நித்தி நான் எதிர்பார்க்கவே இல்லடா இன்னிக்கு குறிப்பு வரும்னு ஆனால் இங்க என்னடான்னா வாழ்த்து இழையே ஆரம்பித்து வச்சிருக்க ரொம்ப சந்தோசம்டா இதுக்கெல்லாம் நீங்க குடுத்த ஆதரவும் ஊக்கமும் தான் காரணம்.

அங்க குறிப்புக்கு பதிவுகூட போடாமல் இங்க இழை திறக்க வந்துட்ட அத்தனை பாசம் அன்பு என்மேல் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குடா :)))))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேவி எப்படி சொல்வேன் என் நன்றியை!! என்ன அன்பு என்மேல் உங்களுக்கெல்லாம் குறிப்பு வந்ததையும் நித்தி இழை ஆரம்பித்ததையும் போன் போட்டு சொல்லும் அளவுக்கு அன்பு வச்சிருக்கியே ரொம்ப சந்தோசம்டா...
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிடா......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தீப்ஸ் ஆஹா என்ன ஒரு தலைப்பு!!!!!!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தீப்ஸ்.நீங்களாம் குடுத்த ஆதரவுதான் இதற்கெல்லாம் காரணம்,உங்க வாழ்த்து கிடைத்ததில் ரொம்ப சந்தோசம பா :)))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி நிச்சயமா இதற்கெல்லாம் உங்களை போன்றவர்களின் ஊக்கம் தான் காரணம் வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் பல.........

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா,
கூட்டாஞ்சோறு பகுதியில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள்.எல்லா குறிப்புகளையும் ரொம்ப அழகா,விளக்கமா,தெளிவான படங்களுடன் கொடுத்து இருக்கீங்க.இது போல் இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து,கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

அன்பு ஸ்வர்ணா,

சில்வர் ஸ்டார் வாங்கியதற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! சீக்கிரமே தங்கம் வாங்குவதற்கு வாழ்த்துக்கள். அப்பதான் நாங்க பார்த்திபன் பட வசனம் மாதிரி

அட! ஒரு தங்கமே
தங்கம் வாங்குகிறதே!!

அப்படின்னு எழுத முடியும், இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்